கொரோனாவுக்கே சவால் விடும் சேலை சேலன்ஞ்ச்..; தாங்க முடியலப்பா..

saree challengeகொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவிலும் ஆரம்பம் ஆனாலும் தற்போது அமெரிக்காவில் இதன் தாக்குதல் அதிகளவில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

இதனால் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தை போக்க சாரி சேலன்ஞ்ச்சை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

தங்களுக்கு பிடித்தசேலைகளை அணிந்து போட்டோ மற்றும் வீடியோஸ் எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் பகிர்ந்து வருகின்றனர்.

இவர்களை மிஞ்சும் வகையில் அமெரிக்காவில் உள்ள இந்திய பெண்கள் தத்தம் வீட்டு வாசல்களில் தெரு முழுக்க நின்றபடி விதவிதமான புடவைகள் அணிந்தபடி போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்த சேலை சேலன்ச் முன்பு வீட்டில் மட்டுமே இருந்தது. தற்போது சாலை வரை வந்துவிட்டது.

ஊரடங்கு உள்ளபோது சாலையில் இது தேவையா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

Overall Rating : Not available

Latest Post