நயன்தாரா கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் டைரக்டர் யோகி பாபு..?

நயன்தாரா கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் டைரக்டர் யோகி பாபு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara will play the lead in Yogi Babus debut directorialதமிழ் சினிமாவில் நடிகராக வளர்ந்துவிட்டால் எல்லா நடிகர்களுக்கும் ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும்… தயாரித்து விட வேண்டும் என்பது கனவாக மாறிவிடும் போல..

தற்போது இந்த ஆசை யோகிபாபுக்கு வந்துவிட்டதாம்.

தயாரிப்பாளர் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல் புரொடக்ஷன் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க யோகி பாபு திரைக்கதை எழுதி வருகிறாராம்.

இது நாயகிக்கான கதை என்பதால் இவருக்கு கோலமாவு கோகிலா படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சித்து வருகிறாராம்.

தற்போது மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் என இரண்டு படங்களிலுமே நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

கொரோனா ஊரடங்குக்கு பின் யோகி பாபுவின் படத்தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஒரு வேளை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அடுத்த நாயகியை தேடும் முடிவில் இருக்கிறாராம் இந்த புதுமுக இயக்குனர் யோக பாபு.

ஒரு திறமையான ஏழை இளைஞன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற்று பணக்காரன் ஆகிறான் என்பது தான் கதையாம்.

(இது கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி கதையா இருக்கே.. என்கிறீர்களா..? )

Nayanthara will play the lead in Yogi Babus debut directorial

தொழிலாளர்கள் வெடிக்கும் முன் தணிக்கனும்.; மீண்டும் மோடியை எச்சரிக்கும் கமல்

தொழிலாளர்கள் வெடிக்கும் முன் தணிக்கனும்.; மீண்டும் மோடியை எச்சரிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal pens angry letter to PM Modiகொரோனா வைரஸ் அதிவேமாக பரவி இந்தியாவில் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

இதனை தடுக்க மக்களின் நெருக்கத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று ஏப்ரல் 14ஆம் தேதியோடு அந்த 21 நாட்கள் முடிவடைந்து நிலையில் மேலும் 19 நாட்கள் (மே 3 வரை) ஊரடங்கை நீடித்து பிரதமர் மோடி அடுத்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனால் விமானம், ரயில், பேருந்து சேவைகள் அனைத்தும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தான் என்றாலும் இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த ஒவ்வொரு மாநில மக்கள் (தொழிலாளர்கள்) கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தங்குவதற்கு சரியான இடமும் இல்லாமல் போதுமான உணவு கிடைக்காமலும் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதனிடையில் டெல்லியில் கடந்த சில வாரம் முன்பு பல்லாயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வந்தனர்.

நிறைய பேர் பசி கொடுமையால் சொந்த ஊருக்கு பல நூறு மைல்கள் நடந்தே சென்றனர்.

ரயில் மற்றும் பேருந்தை இயக்க வேண்டும் என பெருமளவில் ஒரே இடத்தில் கூடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதுபோல் தற்போது மும்பையில் மற்ற மாநில தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்தது தங்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக இடைவெளி இல்லாத போராட்டத்தால் கொரோனா பரவலை அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவ தொடங்கியுள்ளது.

இந்த போராட்டத்தை மும்பை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த நிலையில் இந்த டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இரு மாநில சம்பவங்களையும் குறிப்பிட்டு கமல்ஹாசன் மோடி அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

அவரின் இன்றைய பதிவில் “பால்கனி அரசு தரையில் நடப்பதை கவனிக்க வேண்டும். முன்பு டெல்லி, இப்போது மும்பை.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை வெடிகுண்டை போன்றது. அது வெடிக்கும் முன்பு தணிக்க வேண்டும். கொரோனாவை விட பெரும் நெருக்கடியாக மாறும் முன் தடுக்க வேண்டும்” என கமல் பதிவிட்டுள்ளார்.

அதற்கு முந்தைய ட்விட்டர் பதிவில்…

ஊரடங்கு நேரத்தின் போதும், உண்மைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க உழைக்கும் அத்தனை ஊடகத்துறை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வதந்திகள் பரவிடாமலும், சரியானதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உங்கள் பணி மகத்தானது.

உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Again Kamal warns Modi for extension of Lock down with out plan

BREAKING இதுவும்_கடந்து_போகும்; ரசிகர்களை பாராட்டி ரஜினி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

BREAKING இதுவும்_கடந்து_போகும்; ரசிகர்களை பாராட்டி ரஜினி தமிழ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis 2020 Tamil new year wishes கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிகைக்களை எடுத்து வருகிறது.

பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்த ஊரடங்கு இன்றோடு (ஏப்ரல் 14) முடிவடையும் நிலையில் அதனை நீடித்து
மே 3 வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ளார் மோடி.

இந்த நிலையில் இன்று தமிழர்களின் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Super Star Rajinis 2020 Tamil new year wishes

அவரின் வாழ்த்து மடல் இதோ…

அதில்…

rajini tamil new year wish

BREAKING கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீடிப்பு; அதே சமயம்… – மோடி

BREAKING கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீடிப்பு; அதே சமயம்… – மோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona lockdown extend till May 3 few conditional relief from April 20 says Modiகொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் பல உயிரிழப்புகள் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் வீட்டில் உள்ளே அடங்கி கிடங்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 4-வது முறையாக இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

உலகில் பல நாடுகள் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றன.

ஊரடங்கால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்தபடியே வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.

எனவே கொரோனாவை தடுப்பதற்காக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

ஏப்ரல் 20-ம் தேதி வரை கண்டிப்புடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.

அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்த பகுதிகளில் சில தளர்வுகள் செய்யப்படும். தளர்வுகளுக்கு பிறகு கொரோனா மீண்டும் பரவினால் நிச்சயம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Corona lockdown extend till May 3 few conditional relief from April 20 says Modi

யார் சூப்பர் ஸ்டார்.? 25 கோடி கொடுத்த அக்‌ஷய், எக்ஸ்ட்ரா 3 கோடி உதவி

யார் சூப்பர் ஸ்டார்.? 25 கோடி கொடுத்த அக்‌ஷய், எக்ஸ்ட்ரா 3 கோடி உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid 19 Akshay Kumar donates Rs 3 crores to the BMCகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள், வேலைக்கு செல்வோர், தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி மக்களும் வழங்கி வருகின்றன.

ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார்.

இவரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

தற்போது மும்பை மாநகராட்சிக்கும் இன்னும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார் இந்த உயர்ந்த மனிதர்.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கி உள்ளதாக அக்சய்குமார் தெரிவித்துள்ளார்.

“நம் மக்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க இரவு-பகலாக வேலை செய்துவரும் காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தொண்டு அமைப்பினர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.

தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினர் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார்” எனவும் அக்சய்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Covid 19 Akshay Kumar donates Rs 3 crores to the BMC

கொரோனா ஊரடங்கால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’ ரஜினி

கொரோனா ஊரடங்கால் தீபாவளிக்கு தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis Annaatthe postponed 2020 Diwaliசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையைமத்து வரும் இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும், நயன்தாரா வழக்கறிஞராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முகுக்க கிராமத்து கதையம்சத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இப்பட சூட்டிங் ஐதராபாத் நடைபெற்றது.

விரைவில் கொல்கத்தா மற்றும் புனேயில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டனர்.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வடநாட்டு சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு ஐதராபாத்திலேயே மீண்டும் சூட்டிங்கை தொடர்ந்தனர்.

இந்த படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர்.

ஆனால் கொரோனா பிரச்சினை தீரும் வரை சூட்டிங்கை நடத்த முடியாது என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

எனவே இந்தாண்டு 2020 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ ரிலீஸ் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

Super Star Rajinis Annaatthe postponed 2020 Diwali

More Articles
Follows