தமிழகம் முழுக்க 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளித்த நயன்தாரா – விக்னேஷ்சிவன்

தமிழகம் முழுக்க 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளித்த நயன்தாரா – விக்னேஷ்சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.

அதன்படி நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்று ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமண நிகழ்வை தனியார் ஓ.டி.டி நிறுவனம் ஒன்று விரைவில் வெளியிட உள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட்டுள்ளது.

ஆதரவற்றோர் முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சூர்யாவுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்த கமல்.; சிலிர்க்கும் சிவகுமார் குடும்பம்

சூர்யாவுக்கு சூப்பர் கிப்ட் கொடுத்த கமல்.; சிலிர்க்கும் சிவகுமார் குடும்பம்

கமல்ஹாசன், ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி,சூர்யா ஆகியோர் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசானது.

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுவதை காண முடிகிறது.

இதுவரை உலகளவில் சுமார் ரூ. 200 கோடி வசூலை படம் இந்த படம் குவித்துள்ளது.

கமலுக்கும் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்துள்ள சூர்யாவுக்கும் பெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

விக்ரம் 3 படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த தகவலை சூசகமாக அறிவித்தார் கமல்.

அண்ணா எப்படி சொல்றது? – சூர்யா.; சாரி தம்பி சார் – கமல்.; ரெண்டு பேரும் என்ன சொல்றாங்க.?

படத்தின் மிகப்பெரிய வெற்றியால் ‘விக்ரம் ‘ படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் அவர்கள் இயக்குனர் லோகேஷெக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசளித்தார்.

மேலும் 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார் கமல்.

இந்த நிலையில் சிறப்பு வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் (கேரக்டர் பெயரும் அதான்) பிராண்டட் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்துள்ளார் கமல்.

இந்த பரிசை கொடுக்க கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிகர் சூர்யாவை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து பரிசை அளித்தனர்.

அப்போது சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் அருகில் இருந்தார். கமலை ஆரத்தழுவி கட்டிக்கொண்டார்.

கமல் சூரியாவை சந்தித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் சூர்யாவின் தம்பி கார்த்தியும் ”விக்ரம்’ படம் பார்த்து சிலாகித்து குறிப்பிட்டு இருந்தார்.
லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal gives super gift to Actor Surya

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ’24 கிஸ்ஸஸ்’ புகழ் ஆதித் என்கிற திரிகுன்

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ’24 கிஸ்ஸஸ்’ புகழ் ஆதித் என்கிற திரிகுன்

தமிழ் சினிமாவில் இனிது இனிது படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஆதித் , தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தவர் தெலுங்கு திரையுலகில் “கதா” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்தன. வரிசையாக படங்கள் தொடர்ந்து வந்ததில் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார் ஆதித்.

தெலுங்கில் இவர் நடித்த 24 கிஸ்ஸஸ், சிக்காடி காடிலோ சித்தகொதுடு, டியர் மேகா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன

தனது பெயரையும் திரிகுன் என மாற்றிவிட்டார்.

இவர் பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நேரத்தில் இவர் நடிக்கும் நான்கு படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் தமிழில் முன்னணி இயக்குனர்கள் சிலர் படங்களிலும் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றாலும் தமிழ் சினிமாதான் என் தாய்வீடு, தமிழ் இளைஞனாக தமிழ் சினிமாவில் நமக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே எனக்கு விருப்பம்.

தற்பொழுது அது நிறைவேறும் விதமாக முன்னணி இயக்குனர்களோடு கைகோர்க்கிறேன்” என்கிறார்.

இயக்குனர் ராம் கோபால்வர்மாவின் ‘கொண்டா’ ஜூன் 23ம் தேதி வெளியாகிறது, இந்த படம் திரிகுன் க்கு மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் இப்போது நடித்து வருகிறார் ஆதித் என்கிற திரிகுன்.

வாழ்த்துக்கள் ப்ரோ..

’24 Kisses’ fame Adith alias Trikun is coming to act in Tamil again

இளையராஜா இசையில் கனவு காணும் ஒரு பெண்ணின் பயணம் ‘யார் அவள்’

இளையராஜா இசையில் கனவு காணும் ஒரு பெண்ணின் பயணம் ‘யார் அவள்’

செவன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், சீதாராமன் முகுந்தன் இயக்கிய ‘யார் அவள்’ இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிடவுள்ளது.

மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பற்றி கனவு காணும் ஒரு சாதாரணப் பெண்ணின் பயணம் தான் ‘யார் அவள்’.

இளையராஜாவின் இசையமைப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தின் மூலம் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஆத்மார்த்தமான இந்த பாடலுக்கு ஏ கே சசிதரன் இசையமைத்துள்ளார்.

வி.மணிகண்டனுடன் விளம்பரங்களில் அசோசியேட்டாக இருக்கும் லெனின் இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

லெஸ்பியனாக மாறிய நடிகைகள் ’96’ கௌரி & ‘டிக்கிலோனா’ அனகா,

பாடலுக்கான நடனத்தை சாலமன் வடிவமைத்துள்ளார். பாடலின் வரிகளை பகவதி பி கே எழுதியுள்ளார்.

பாடலின் முழுமையான தொழில்நுட்பக் குழு பின்வருமாறு:

நடிப்பு: தச்சனி
தயாரிப்பு மற்றும் இயக்கம்: சீதாராமன் முகுந்தன்
இசையமைப்பாளர்: ஏ.கே.சசிதரன்
இசை தயாரிப்பாளர்: ஜெரால்ட்
பாடல் வரிகள்: பகவதி பி.கே
குரல்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இயக்குநர்: சீதாராமன் முகுந்தன்
ஒளிப்பதிவு: லெனின் ஏ
எடிட்டர்: சுரேஷ் பிரசாத்
கலை: லெனின் ஏ
நடன இயக்குநர்: சாலமன்
ஆடை வடிவமைப்பாளர்: தூரிகை கபிலன்
ஒப்பனை: ஆர்ட் மேக்கப் அகாடமி
விஎஃப்எக்ஸ்: லிவி
வண்ணம்: ஆகாஷ்
ஸ்டில்ஸ்: சிண்டி கிஷோர்
போஸ்டர்ஸ்: சந்துரு தண்டோரா
தயாரிப்பு மேலாளர்: கார்த்திக் ரங்கநாத்

இயக்குநர் குழு:
கௌதம் ரஞ்சேந்தர், யாசர், கௌதம், கார்த்திக் சண்முகம், பிரபு சாஸ்தா

ஒளிப்பதிவு குழு:
உதய் ரங்கநாதன், கிரி மர்பி, ஸ்ரீராம் ராயலா, யஸ்வந்த், தங்கதுரை
ஸ்பாட் எடிட்: திலீப்

ஒப்பனை:
அன்பு, சௌந்தர்யா, வைஷாலி

கூடுதல் ஸ்டில் & போஸ்டர்கள்: பன்னீர்செல்வம்

நடன இயக்குநர் குழு: ராய்சன் லியோ

தயாரிப்பு குழு:
மணிகண்டன் கண்ணன், கார்த்திக் ரங்கநாத், தனுஷ், பிரசன்னா, கோகுல்

ட்ரோன்: ஹம்சா அவிஸ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

இசைக்கலைஞர்கள் குழு:
குரல் பதிவு @ வாய்ஸ் & விஷன் ஸ்டுடியோ
ரெக்கார்டிங் ஆங்கிலம்: லிஜேஷ் குமார்
இசை ஒருங்கிணைப்பாளர்: மோகனராஜன்
பாடல் வரிசை, ஏற்பாடு & திட்டமிடடல்: ஜெரால்ட்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: Dr. டி
பேஸ் கிட்டார் : ஜான் பிரவீன்
கூடுதல் பெர்குஷன் ரிதம்: டெரிக்
மிக்ஸிங் & மாஸ்டரிங்: இஜாஸ் அகமது
இசை தயாரிப்பு @ ஸ்டுடியோ செவன் ரெக்கார்ட்ஸ்

Saregama Originals to release ‘Yaar Aval’ musical video,

ஹரிஷ் கல்யாண் அதுல்யா ஜோடியை இணைக்கும் அறிமுக இயக்குனர்

ஹரிஷ் கல்யாண் அதுல்யா ஜோடியை இணைக்கும் அறிமுக இயக்குனர்

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவர் ஹரீஷ் கல்யாண்.

இவர் இளம் ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தில் அமலா பாலுடன் நடித்திருந்தார்.

மேலும் இவரது நடிப்பில் பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்கள் வந்துள்ளன.

ஹரீஸ் நடிப்பில் ஸ்டார், நூறு கோடி வானவில் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

சிம்புவுடன் டூயட் பாடும் முன்பே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான சித்தி

இந்த நிலையில் ஹரீஷ் கல்யாணின் புதிய படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘கனா’ படத்தில் உதவி இயக்குனராகவும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்தாவாகவும் பணி புரிந்தவர் தமிழரசன் பச்சமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களும் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இந்த புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாணின் மற்றொரு புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் அதுல்யா.

இந்த படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

Harish Kalyan – Athulya Ravi joins for a new film

டைரக்டருக்கு லெக்சஸ் கார்.. 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்.; தயாரிப்பாளர் கமலின் தாராள மனசு

டைரக்டருக்கு லெக்சஸ் கார்.. 13 உதவி இயக்குனர்களுக்கு அப்பாச்சி பைக்.; தயாரிப்பாளர் கமலின் தாராள மனசு

கோலிவுட்டில் எங்கு திரும்பினாலும் ‘விக்ரம்’ படம் குறித்த பேச்சு எதிரொலிக்கிறது.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் கமல் நடித்த படம் வெளியானது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் வெறித்தனமான ஒரு வெற்றியை தன் தீவிர ரசிகர் இயக்குனர் லோகேஷ் மூலம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ‘விக்ரம்’ வெற்றி வாகை சூடியுள்ளது.

எனவே ஒவ்வொரு மொழி ரசிகர்களுக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

தமிழில் பேசிய வீடியோவில்…

‛‛தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் ஒருபோதும் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் ‘விக்ரம்’ படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.

தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கிய காரணம்.

கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம்.

லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் காதல், படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை உலகளவில் ரூ 200 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு காஸ்ட்லியான LEXUS காரை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன்.

லோகேஷுக்கு காஸ்ட்லி காரை கிப்ட்டாக கொடுத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன்

இந்த செய்தியை நாம் நேற்று நம் filmistreet தளத்தில் பார்த்தோம்.

இத்துடன் 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக்குகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் என்பதால் இந்த படம் மூலம் அவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lexus car for director .. Apache bike for 13 assistant directors .; Producer Kamal’s generous mind

More Articles
Follows