‘கொலையுதிர் காலம்’ ரிலீஸ் இல்லை; பொறுப்பில்லாத நயன்தாரா டீம்

Nayanthara fans disappointment in Kolaiyuthir Kaalam release issueகமல், மோகன்லால் இணைந்து நடித்த உன்னைப் போல் ஒருவன் பட இயக்குனர் சக்ரி டூலோட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கொலையுதிர் காலம்.

இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் எப்போதோ உருவாகி எப்போதோ வந்திருக்க வேண்டும்.

ஆனால் பல பிரச்சினை மற்றும் தடைகளால் உருவாகியும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போனது.

இறுதியாக இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றும் வெளியாகவில்லை. தமிழகத்தில் காலை, மதியம், மாலை காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை.

ஆனால் பல தியேட்டர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இருந்தன.

இதனால் ரசிகர்கள் பலர் தியேட்டருக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர். (இந்த செய்தி வெளியாகும்வரை எங்கும் படம் வெளியாகவில்லை)

படம் வெளியாகவில்லை என்றால் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட வேண்டாமா?

தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அறிக்கை வெளியிடும் நயன்தாரா படம் ரிலீஸ் ஆகவில்லை என்ற தகவலை சொல்லியிருந்தால் நாங்கள் இப்படி ஏமாற்றத்துடன் திரும்பி இருக்க மாட்டோம் என ரசிகர்கள் நொந்தப்படி கூறி சென்றனர்.

தன் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களை சம்பந்தபட்டவர்கள் இப்படி ஏமாற்றுவது நியாயம்தானா..?

Nayanthara fans disappointment in Kolaiyuthir Kaalam release issue

Overall Rating : Not available

Related News

கமல், மோகன்லால் நடித்த உன்னைப்போல் ஒருவன்,…
...Read More
கொலையுதிர் காலம் பட டிரைலர் வெளியீட்டு…
...Read More
நயன்தாரா நடிப்பில் சக்ரி டுலெட்டி இயக்கியுள்ள…
...Read More

Latest Post