‘கனெக்ட்’ படத்தை கண்டுக்காத ரசிகர்கள்.; கடுப்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

‘கனெக்ட்’ படத்தை கண்டுக்காத ரசிகர்கள்.; கடுப்பில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று டிசம்பர் 22ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் உருவான ‘கனெக்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

வெறும் 99 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படத்தை விக்னேஷ் சிவன் தன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இதில் சத்யராஜ் வினய் அனுபம்கேர் உள்ளிட்ட 5 நட்சத்திரங்கள் மட்டுமே நடித்திருந்தனர்.

அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன.

கொரோனா லாக்டவுன் காலத்தை மையப்படுத்தி அதில் பேயை கனெக்ட் செய்து இருந்தார் இயக்குனர்.

இந்த படத்தின் பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டாலும் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை.

எனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செம கடுப்பில் உள்ளனர்.

மேலும் ஒரு திரைப்படத்தின் மீது வன்மத்தை தெளிக்காதீர்கள் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதனையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து ஒரு படத்தை விமர்சனம் செய்தால் எப்படி வன்மம் ஆகும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2022 இறுதியில் 7 படங்கள்; முழு தகவல்கள் : விஜய் த்ரிஷா சன்னி ஐஸ்வர்யா சரளா லிங்கேஷ் வர்றாங்க..

2022 இறுதியில் 7 படங்கள்; முழு தகவல்கள் : விஜய் த்ரிஷா சன்னி ஐஸ்வர்யா சரளா லிங்கேஷ் வர்றாங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2022 ஆண்டின் இறுதிக் கட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம்.. அடுத்த வாரம் டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த ஆண்டு முடிவடைகிறது.

இதனால் இந்த ஆண்டு கணக்கில் சேர்த்துக் கொள்ள தங்களது புதிய படங்களின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.

அதன்படி டிசம்பர் 29 30 ஆகிய தேதிகளில் ரிலீஸ் ஆக ரெடியாக உள்ள படங்களின் பற்றிய ஒரு பார்வை இங்கே…

டிசம்பர் 29ல்..

1) மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழிலும் அதே பெயரில் தயாராகியுள்ளது.

ஆர். கண்ணன் இயக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். இப்பட தமிழக வெளியீடு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளனர்.

டிசம்பர் 30ல் ரிலீசாகவுள்ள படங்கள்..

2) தமிழரசன்

பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தமிழரசன். டிசம்பர் 30ல் இந்த படம் ரிலீசாகிறது.

இதில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, முனிஷ் காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3) ஓ மை கோஸ்ட்

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’.

இதில் நாயகியாக பிரபல பாலிவுட் நடிகை் சன்னி லியோன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் நகைச்சுவை நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், ரவி மரியா, அர்ஜுன், தர்ஷா குப்தா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார். தீபக்மேனன் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை பா.விஜய் எழுதியுள்ளார்.

4) ‘ராங்கி

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் கதையை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத எம் சரவணன் இயக்கியுள்ளார்.

சி எஸ் சத்யா இசையமைக்க சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

5) காலேஜ் ரோடு

ஜெய் அமர்சிங் இயக்கத்தில் லிங்கேஷ் நாயகனாக நடித்துள்ள ‘காலேஜ் ரோடு’ படம் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இசை – ஆப்ரோ
ஒளிப்பதிவு- கார்த்திக் சுப்ரமணியம்.
எடிட்டர்- அசோக்

மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவிபாலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர் இணைந்து தயாரித்துள்ளனர்.

PVR இந்த படத்தை வெளியீடு செய்கிறார்கள்.

6 ) டிரைவர் ஜமுனா

18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை ‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

7) செம்பி…

பிரபு சாலமன் இயக்கியுள்ள திரைப்படம் ‘செம்பி’. கோவை சரளா, அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்னும் சில படங்களின் அறிவிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன…

7 films by the end of 2022; Full Details here

அண்ணாமலை நினைத்ததை கட்சிதமாக செய்வார்.. – கலைப்புலி தாணு

அண்ணாமலை நினைத்ததை கட்சிதமாக செய்வார்.. – கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.

ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலைப்புலி.S. தாணு பேசியதாவது,

என்னால் எப்படி, D.R அவர்களை மறக்க முடியாதோ, அதே போல் அண்ணாமலை அவர்களையும் மறக்க முடியாது.

அண்ணாமலை அவர்களின் சிறப்பு என்னவென்றால், அதிகம் பேச மாட்டார். ஆனால், நினைத்த காரியத்தை கட்சிதமாக செய்து முடிப்பார். மிகவும் தன்மையான மனிதரும் கூட. அப்படி பட்ட இழப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கும், திரையுலகிற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு.

அவரின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு, அவருக்கு சிறப்பு செய்தது எனக்கு நெகிழ்வான ஒரு நிகழ்வாகும். இவ்விழாவை ஏற்பாடு செய்து தந்த பன்னீர் செல்வம் சாருக்கும், கஜேந்திரனுக்கும், ஸ்ரீதருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

‘வாரிசு’ படத்துடன் கனெக்ட்டான ‘வாத்தி’.; விஜய்யை தொடர்ந்து தனுஷ் படமும் இணைந்தது

‘வாரிசு’ படத்துடன் கனெக்ட்டான ‘வாத்தி’.; விஜய்யை தொடர்ந்து தனுஷ் படமும் இணைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘வாத்தி’.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மட்டும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

தெலுங்கு பதிப்பிற்கு சார் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித்குமார் பெற்றுள்ளார்.

இதே நிறுவனம் தான் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையும் பெற்றுள்ளது.

மேலும் லோகேஷ் உள்ள ‘தளபதி 67’ படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Vaathi’ connected with ‘Varisu’.; Dhanush’s film followed Vijay

நடிகர்களின் சம்பளம் & OTT பிரச்சனைக்கு ஒரு முடிவு..; கே. ராஜன் திட்டவட்டம்

நடிகர்களின் சம்பளம் & OTT பிரச்சனைக்கு ஒரு முடிவு..; கே. ராஜன் திட்டவட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.

ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய K.ராஜன்…

“அண்ணன் அண்ணாமலையின் மறைவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை பல சமயங்களில் அவர் பாராட்டியுள்ளார்.

உதாரணமாக, திருட்டு VCD களுக்கு எதிராக, பர்மா பஜாரில் நான் கடைகளை அடித்த போது. என்னை அவர் பாராட்டினார். மேலும், பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பலவற்றை பேசியுள்ளோம்.

அவரை போல் நிர்வாகம் செய்து, விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் பெற்றுத்தர “ரோகினி” பன்னீர் செல்வம் நினைத்தால் தான் முடியும்.

விரைவில், ஒரு குழுவாக நடிகர்களின் சம்பளம் குறித்தும். OTT பிரச்சனை குறித்தும் அனைவரும் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”. என்றார்.

‘பாபா’ நஷ்டத்தை கொடுத்தார் ரஜினி.; அது எப்படி வந்ததுன்னு எங்களுக்கு மட்டுமே தெரியும். – அபிராமி ராமநாதன்

‘பாபா’ நஷ்டத்தை கொடுத்தார் ரஜினி.; அது எப்படி வந்ததுன்னு எங்களுக்கு மட்டுமே தெரியும். – அபிராமி ராமநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.

ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், “ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் அவர்களுடன், கலைப்புலி.S.தாணு, “அபிராமி” ராமநாதன் அருள்பதி, அழகன், K.ராஜன், சக்தி பிலிம் பேக்ட்ரி B.சக்திவேலன், “திருச்சி” மீனாட்சி சுந்தரம், “ராக் போர்ட்” முருகானந்தம், “சேலம்” மனோகரன், ஈஸ்வரன் என திரைத்துறையை சேர்ந்த பலர் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.

அவ்விழாவில் பேசிய பலரும் (லேட்) அண்ணாமலை அவர்களுடனான நட்பையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.

“ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசியதாவது,

அண்ணாமலையின் மறைவு எங்கள் சங்கத்திற்கு மட்டுமல்லாமல், பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களின் வாழ்வில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அதை நிரப்ப யார் வருவார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு வந்து சிறப்பு சேர்த்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி, என்றார்.

அதனைத் தொடர்ந்து (லேட்)திரு.அண்ணாமலை அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார் “அபிராமி” ராமநாதன்.

அப்போது பேசிய “அபிராமி” ராமநாதன்,

இந்த படத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் என் இனத்தவருக்கு வணக்கம். என் இனம் என்றால் திரையுலகம் தான். நாங்கள் பலரையும் மகிழ்வித்திருக்கோம். மேலும் பேசிய அவர், அண்ணாமலை எங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முன்பு, கண்ணாயிரம் என்பவர் தான் தலைவராக இருந்தார். அவரின் மறைவுக்கு பின், யாரை தலைவராக்குவது என்பது திரு.D.R அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.

அந்த சமயத்தில், கண்ணாயிரம் அவர்களின் பணி காலம் முடிய 9 மாதங்கள் உள்ளன. அந்த 9 மாதங்கள் மட்டும் நான் தலைவராக இருக்கட்டுமா? என்றார் அண்ணாமலை.

அப்போது, தலைவராக அதவியேற்ற அண்ணாமலையின் நிர்வாகத்தை கண்டு திரு.D.R அவர்கள் மீண்டும் அண்ணாமலையை தலைவராக்கினார். அந்த அளவிற்கு சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர் அண்ணாமலை.

மேலும், ‘பாபா’ படத்தின் தோல்விக்கு ரஜினி நஷ்ட ஈடு கொடுத்தது தான் அனைவருக்கும் தெரியும். அது எப்படி வந்தது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்” என்றார்.

More Articles
Follows