நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தலைப்பு ‘வீர சிம்ஹா ரெட்டி’

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தலைப்பு ‘வீர சிம்ஹா ரெட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர்.

‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் தலைப்பு ஆக்க்ஷன் என்டர்டெய்னர் ஜானருக்கு பொருத்தமானது. பாலகிருஷ்ணாவின் பெரும்பாலான படங்கள் ‘சிம்ஹா’ என இருந்தால், அந்தத் திரைப்படங்கள் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் படத்தின் தலைப்பும், போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த போஸ்டரில் பாலகிருஷ்ணா, உக்ரமான அவதாரத்தில் தோன்றுவது அவரது கதாபாத்திரத்தை சித்தரிக்கிறது. அதிலும் வேட்டி அணிந்த அவரது தோற்றமும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்துடன் மிகப்பெரிய வேட்டைக்காக காத்திருப்பது போல் உணர்த்துவதால், ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதிலும் ‘புலிசேர்லா’ நாலு கிலோ மீட்டர் என்ற மைல் கல் மீது அவர் கால் வைத்து நின்றிருக்கும் தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டருக்கும் அவரது ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ. எஸ். பிரகாஷ் பணியாற்றுகிறார். ராம் – லக்ஷ்மன் சண்டைக் காட்சிகளை அமைக்க, சந்து ரவிபதி தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.

நந்தமுரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 2023 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.

விஜய்சேதுபதி படத்தில் சந்தீப் கிஷன் & திவ்யான்ஷா லிப்லாக் சீன்

விஜய்சேதுபதி படத்தில் சந்தீப் கிஷன் & திவ்யான்ஷா லிப்லாக் சீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி, கரண் சி புரொடக்‌ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக தயாரித்து வரும் திரைப்படம் ‘மைக்கேல்’.

இதில் நடிகர் சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை பரத் சௌத்ரி மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இதனை மறைந்த ஸ்ரீ நாராயண்தாஸ் கே நரங் வழங்குகிறார்.

:மைக்கேல்’ படத்தின் தமிழ் பதிப்பின் டீசரை நடிகர் தனுசும், தெலுங்கு பதிப்பின் டீசரை நடிகர் நானியும், மலையாள பதிப்பின் டீசரை நடிகர் துல்கர் சல்மானும், கன்னட பதிப்பின் டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டனர்.

இந்தி பதிப்பின் டீசரை நடிகர் ராஜ்குமார் ராவ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்வி கபூர், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

டீசரில் படத்தின் முக்கியமான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் இதில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும், கௌதம் வாசுதேவ் மேனனின் வில்லத்தனம் கலந்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

இதன் கதை எண்பதுகளில் தொடங்குவது போன்று அமைக்கப்பட்டிருப்பதால், நடிகர்களின் கெட்டப்புகள் மற்றும் அரங்கங்கள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது.

‘மைக்கேல்’ படத்தின் டீசரில், ‘‘மைக்கேல்! வேட்டையாட தெரியாத மிருகத்த மத்த மிருகங்கள் வேட்டையாடிடும் மைக்கேல் ” என்ற வசனத்திற்கு,, “ துரத்துற பசியிலிருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியனும்னு அவசியமில்ல மாஸ்டர் ” என நாயகன் பதிலளிக்கும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய மூவரின் முரட்டுத்தனமான அவதாரங்களிலிருந்து ஆக்சன், அழுத்தமான உரையாடல்கள், ரம்மியமான காதல் காட்சி… ஆகியவை இடம்பெற்று, டீசரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.

மேலும் ‘மைக்கேல்’ திரைப்படம் ஒரு காவிய கதை களத்துடன் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பாகவும் இருக்கிறது.

இந்தப் படத்தின் டீசரில் ஒரு குழந்தையின் கால்கள், அதன் உருவப்படம் மற்றும் ஒரு தெய்வம் போன்ற சில மர்மமான விசயங்களை காட்சிப்படுத்தியிருக்கிறது.

சந்தீப் கிஷன் தன்னுடைய கட்டுடலை காட்டி ஆக்சன் அதிரடி நாயகன் என்ற தோற்றத்தை வெளிப்படுத்தி அதகளப்படுத்துகிறார்.

படத்தின் காதல் காட்சிகளும், ஆக்சன் காட்சிகளைப் போல் சுவராசியமாக இருக்கிறது. இந்த டீசரில் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை திவ்யான்ஷா கௌஷிக் இடையேயான உதட்டுடன் உதடு பொருத்திய முத்தக் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

‘மக்கள் செல்வன்: விஜய் சேதுபதியின் மிரட்டலான தோற்றம், கௌதம் வாசுதேவ் மேனனின் அசுரத்தனமான தோற்றம் ஆகியவையும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.

இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ், நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோரும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மூலம் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் டீசரை மீண்டும் மீண்டும் காணத் தூண்டுகிறது.

இந்தப் படத்திற்கான வசனங்களை திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதாமணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘மைக்கேல்’ படத்தின் டீசர், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்
சந்தீப் கிஷன்
விஜய் சேதுபதி
கௌதம் வாசுதேவ் மேனன்
வருண் சந்தேஷ்
திவ்யான்ஷா கௌஷிக்
வரலட்சுமி சரத்குமார்
அனசுயா பரத்வாஜ்
மற்றும் பலர்

தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல்

இயக்குநர் : ரஞ்சித் ஜெயக்கொடி
தயாரிப்பாளர்கள் : பரத் சவுத்ரி & புஸ்கூர் ராம் மோகன் ராவ்.
வழங்குபவர் : ஸ்ரீ நாராயணன் தாஸ் கே நரங் ( மறைவு)
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி & கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்.
ஒளிப்பதிவு : கிரண் கௌஷிக்
வசனம் : திரிபுராநேனி கல்யாண் சக்கரவர்த்தி, ராஜன் ராதா மணாளன், ரஞ்சித் ஜெயக்கொடி
நிர்வாகத் தயாரிப்பு : கே. சாம்பசிவராவ்
மக்கள் தொடர்பு :யுவராஜ்

http://bit.ly/Michael_Teaser

தனுஷின் ‘நானே வருவேன்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷின் ‘நானே வருவேன்’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்த ‘நானே வருவேன்’ செப்டம்பர் 29 அன்று வெளியானது. திகில் மற்றும் சைக்கோ-த்ரில்லர் வகைகளை கலந்த இப்படம் வசூலில் கலக்கியது.

கிடைக்க பெற்ற தகவல்களின் படி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து திரைப்படம் ஏற்கனவே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் நுழைந்தது. இப்போது, ​​​​படம் அக்டோபர் 27 முதல் ஸ்ட்ரீமிங் ஜாம்பவானான அமேசான் பிரைம் வீடியோவில் பிரீமியர் செய்யத் தொடங்க உள்ளது என்பது தான் இப்போதைய ஹாட் நியூஸ்.

தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படக்குழுவின் திடீர் முடிவு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படக்குழுவின் திடீர் முடிவு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாரிசு படக்குழு தற்போது இறுதிக்கட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறது,

இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது . இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் ‘வரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக செய்திகள் வந்தன.

சில தொழில்நுட்ப சிக்கல்களால் ‘வரிசு’ முதல் சிங்கிள் இந்த தீபாவளிக்கு வெளியிடப்படாது என்றும் தீபாவளிக்கு ரிலீஸ் தேதியுடன் கூடிய சிறப்பு போஸ்டரை ரசிகர்களுக்கு விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

பிளாக்பஸ்டர் கன்னட இயக்குனர் தளபதி விஜய்யுடன் இணைய விரும்புகிறார்

பிளாக்பஸ்டர் கன்னட இயக்குனர் தளபதி விஜய்யுடன் இணைய விரும்புகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிட்டத்தட்ட எல்லா படத் தயாரிப்பாளரும் விஜய்யை இயக்க ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது பிரபல கன்னட இயக்குனர் ஒருவர் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரேம் கன்னட சினிமாவில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குனர்.

சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் தர்ஷன் போன்ற பிரபல நடிகர்களுடன் பிளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.

இப்போது, ​​பிரேம் தனது ஒன்பதாவது படத்திற்காக துருவ் சர்ஜாவுடன் இணைந்துள்ளார், இது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது.

Kannada director prem

இளம் ஹீரோ நடிக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

இளம் ஹீரோ நடிக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனராக தனது மூன்றாவது படத்தை விரைவில் தொடங்குவார் என கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அதர்வா முரளி உட்பட பல இளம் ஹீரோக்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

ஐஸ்வர்யா ஸ்கிரிப்டை விவரித்ததாகவும், படத்தில் ஒரு சக்திவாய்ந்த கெஸ்ட் ரோலில் நடிக்கும்படி தனது அப்பாவிடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.

கதைக்களம் மற்றும் அவரது பாத்திரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தலைவர் வெளிப்படையாக ஒப்புதல் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது

atharvaa murali

More Articles
Follows