என்னிடம் மிகச் சிறப்பான இசையை இயக்குநர் வாங்கியுள்ளார்… – தரண்

என்னிடம் மிகச் சிறப்பான இசையை இயக்குநர் வாங்கியுள்ளார்… – தரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ‘செங்களம்’ இணையத் தொடர்.

Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வினில் இசையமைப்பாளர் தரண் பேசியதாவது…

“தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் என் நண்பர், அவர் தான் என்னை இப்படைப்பிற்குள் கொண்டு வந்தார். மிகச்சிறந்த ஒரு படைப்பாக இது இருக்கும். இயக்குநர் என்னிடம் மிகச் சிறப்பான இசையை வாங்கியுள்ளார். நடிகர்கள் அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன் பேசியதாவது…

என்னுடைய முதல் வெப் சீரிஸ் பிரபாகரன் சாருடன் என்னுடைய முதல் படம், அமீர் சாரின் ரசிகன் அவர் என் விஷுவல் பார்த்துப் பாராட்டுவது மகிழ்ச்சி. செங்களம் ஒரு நல்ல படைப்பாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் டான் பாஸ்கோ பேசியதாவது…

எஸ் ஆர் பிரபாகரன் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தக்கதையைச் சொன்னார். அப்போது இதை இரண்டு பாகங்களாகப் படமாக எடுக்க நினைத்தோம், மிக மிக கனமான கதை. மாபெரும் வெற்றிபெறக்கூடிய கதை. எல்லோருக்கும் நல்ல பெயர் பெற்றுத்தரும் எனும் நம்பிக்கை உள்ளது. நன்றி.

Music Director Dharan speech at Sengalam trailer launch event

எனக்கு துணையில்ல.. ஆனா பிரச்சனையில்ல.. – சிம்பு ; மகன் திருமணம் குறித்து உஷா என்ன சொன்னார்.?

எனக்கு துணையில்ல.. ஆனா பிரச்சனையில்ல.. – சிம்பு ; மகன் திருமணம் குறித்து உஷா என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேற்று மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவிற்காக தமிழகமெங்கும் உள்ள சிலம்பரசன் ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர்.

விழா மேடையில் உற்சாகமாக பாட்டு பாடி நடனமாடி மாஸாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் சிம்பு.

அவர் பேசும்போது.. “எனக்கு பத்து தல படத்தில் ஜோடி இல்லை.. துணை இல்லை.. வாழ்க்கையிலும் எனக்கு துணை இல்லை. ஆனால் அது ஒரு பிரச்சனை இல்லை” என்றார்.

இந்த விழாவிற்கு சிம்புவின் பெற்றோர்களான டி ராஜேந்தர் அவரது மனைவி உஷாவும் கலந்து கொண்டனர்.

அவரது அம்மா உஷாவிடம் சிம்புவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது.. “சிம்புவின் திருமணம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.” என்று சொன்னார்.

சிம்பு திருமணம் செய்து கொள்வாரா.? அவரது திருமணம் எப்போது.? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Usha Rajendar talks about her son marriage

JUST IN ‘பத்து தல-யை கைவிட வேண்டிய சூழ்நிலை.. 2 படங்கள் போச்சு – கிருஷ்ணா

JUST IN ‘பத்து தல-யை கைவிட வேண்டிய சூழ்நிலை.. 2 படங்கள் போச்சு – கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் படக் குழுவினருடன் டி.ஆர், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குனர் கிருஷ்ணா பேசும்போது..

“பல்வேறு சூழ்நிலை காரணமாக படத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலிலேயே கௌதம் கார்த்திக் காட்சிகளை எடுத்துவிட்டோம்.

ஆனால் சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் எடுக்க ஒரு வாரம்தான் இருந்தது.

எனக்கு இரண்டு படங்கள் கிடைத்து கைவிட்டு போனது. அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் அமர்ந்து பேசினேன். இறைவன் அருளால் இந்த படம் இங்கு வந்து நின்றுள்ளது.”

இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.

Director Krishna speech at Pathu Thala audio launch

JUST IN சிம்பு போன்ற நடிகரை பார்க்கல.. அவரின் ஆன்மிகம் புரியல – கௌதம் கார்த்திக்

JUST IN சிம்பு போன்ற நடிகரை பார்க்கல.. அவரின் ஆன்மிகம் புரியல – கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் & கௌதம் காத்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ஏ.ஆர்.ரகுமான், டி.ஆர், சந்தோஷ் பிரதாப், இயக்குனர் சுதா கொங்கரா, சினேகன், தயாரிப்பாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கௌதம் கார்த்திக் பேசியதாவது…

“பத்து தல எனது திரை வாழ்வில் மிகப் பெரிய படம். கிருஷ்ணா நிறைய கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.

இப்படத்திற்கு ஆக்ஷன் பலம்… அதற்காக சக்தி சரவணன் பயங்கரமாக உழைத்துள்ளார். சாயிஷா நடனம் ஆடியுள்ளார்.

சிம்பு வேற லெவல் என்று சொல்லலாம். உங்கள் (சிம்புவை பார்த்து) ஆன்மீக பயணம் பற்றி என்னிடம் சொன்னீர்கள் ஆனால் அது எனக்கு புரியவில்லை.

சிம்புவின்‌ உடல் முழுவதும் நடிக்கும். அதனை‌ பார்த்து மிரண்டு விட்டேன். இதுபோன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததேயில்லை. அவர்போல ஆக வேண்டும் என எனக்கும் ஆசை”

என்று கூறினார் கௌதம் கார்த்திக்.

Gautham Karthik talks about Simbu at Pathu Thala audio launch

JUST IN எல்லாத்தையும் பாத்துகிறேன்.. வேற மாரி வந்துட்டேன்.. சினிமாவுக்கு பெருமை தேடி தருவேன் – சிம்பு

JUST IN எல்லாத்தையும் பாத்துகிறேன்.. வேற மாரி வந்துட்டேன்.. சினிமாவுக்கு பெருமை தேடி தருவேன் – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மார்ச் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது.

இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது..

“நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்காக ரசிகர்கள் நீங்கள் நிறைய செய்து விட்டீர்கள்.. இனிமேல் நீங்கள் எனக்காக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சென்று.. என் தலைவன் வருவான் டா என் தலைவன் செய்வான் டா.. அப்படி.. இப்படி என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.

இனிமேல் நீங்கள் சந்தோஷமாக இருங்கள். ஹாயாக ஏசி ரூமில் அமர்ந்து கொள்ளுங்கள்.. எனக்காக இனி நீங்கள் எதையும் செய்ய வேண்டாம்.. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்..

இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க.. நான் வேற மாதிரி வந்துட்டேன்.. இனிமே விடவே மாட்டேன்.. என் ரசிகர்கள் தலைகுனிய விடவே மாட்டேன்..

ஐ யம் எ லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாட்டு பாடி ஆடியது முதல் இன்று வரை தமிழக மக்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள்..

மாநாடு என்ற பெரிய வெற்றியை எனக்கு கொடுத்தார்கள்..்அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்ற பட வெற்றியை கொடுத்தார்கள்.. இன்று 10 தல என்பதில் வைத்து அழகு பார்க்கிறார்கள்..

இனிமே தமிழ் சினிமா பெருமைப்படும் அளவுக்கு நான் நடந்து கொள்வேன்.. இதை நான் தன்னம்பிக்கையோடு சொல்கிறேன்.. என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் உருக்கமாக பேசினார் சிலம்பரசன்.

Simbu speech at Pathu Thala audio launch

புலமைப்பித்தனின் பேரன் அறிமுகம்.; ஜாக்கிசான் – அஜித் லெவலில் திலீபன்.!

புலமைப்பித்தனின் பேரன் அறிமுகம்.; ஜாக்கிசான் – அஜித் லெவலில் திலீபன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘எவன்’.

இதில் திலீபன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தீப்தி மானே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவராமன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை பாலா செய்துள்ளார்.

ஏ.கே. சசிதரன் இசையமைக்க பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

‘எவன்’ படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

“தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அம்மா மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம்.

அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தில் ஒரு வரி கதை.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்து பட்டறைக்கு சென்ற போது என் கண்ணில் பட்டு கண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன்.

அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து ஏப்ரல் 7ம் தேதியன்று வெளியாகிறது.

இந்த படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் இவரே நடித்துள்ளார். முறையாக சண்டை பயிற்சி கற்றுள்ளார் நடிகர் திலீபன்.

அங்கு படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கி ஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இரு சக்கர & நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நாயகன் திலீபன்”

இவ்வாறு இயக்குநர் துரைமுருகன் தெரிவித்தார்.

Pulamai Pithan grandson Thileepan makes debut in Evan

More Articles
Follows