ஆன்லைன் க்ளாஸ்.: மொபைல் வேண்டாம்.. டிவி-யே போதும்… அமைச்சர் அறிவிப்பு

sengottaiyanதமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில்..

மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வை ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பல மாணவர்கள் இறுதிநாள் தேர்வை தவறிவிட்டதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மாணவர்கள் தவறவிட்ட தேர்வுகள் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ அல்லது www.dge.tn.gov.in என்கிற இணையதளப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்..

மார்ச் மாதம் எழுதாமல் விடுபட்ட 12-ஆம் வகுப்பு தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். எழுதவில்லையென்றால் தேர்ச்சி இல்லை.

அதுபோல் ஆன்லைன் வகுப்புகள் குறித்தும் பேசினார். அதில்…

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடத்தப்படும்.

பள்ளி பாடங்களை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Overall Rating : Not available

Latest Post