என்னை நடிக்க வேண்டான்னு சொல்லிட்டு காட்சியை படமாக்கியிருப்பார் மனோஜ் – சந்தானம்

என்னை நடிக்க வேண்டான்னு சொல்லிட்டு காட்சியை படமாக்கியிருப்பார் மனோஜ் – சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த், புகழ் உட்பட பலர் நடித்துள்ள படமே ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’.

இந்த படத்தை மனோஜ் பீத்தா இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் வெளியான ‘ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா’ படத்தின் ரீமேக் இது.

இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

இந்தப் பட பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய சந்தானம் பேசியதாவது…

“எதில் காமெடி பண்ணவில்லை.

அதை எதிர்பார்க்காதீர்கள். நீங்க காமெடி பண்ண வேண்டாம்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார். அது தேவையில்லை. ஆனால், நல்ல படமாக இருக்கும்.

தமாஷான ஒரு ஏஜென்ட், பயங்கரமான விஷயத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.

இந்தப் படத்தை மனோஜ் இயக்கிக் கொண்டிருக்கும்போது குளோசப் ஷாட் வைப்பார். நம் கண்களுக்கு தான் அவர் கேமரா வைக்கிறார் என்று நினைத்தால் கைகளுக்கு வைத்திருப்பார்..

சரி… அடுத்த காட்சியில் கைகளுக்கு கேமரா வைத்திருப்பார் என்று நாம் ஏதாவது செய்து கொண்டிருந்தால் திடீரென நமக்கே அறியாமல் நம் கண்களுக்கு க்ளோசப் ஷாட் வைப்பார் இயக்குனர்.

ஏனென்றால் அவர் எதையுமே எதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். நீங்கள் நடிக்கவே வேண்டாம் என்று சொல்லியவரே பட காட்சிகளை படமாக்குவார்.

இப்போது பான் இந்தியா வந்தபிறகு, எல்லா படமும் தமிழில் டப் ஆகிறது. எனவே அடுத்த படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.

அதனால்தான் ரீமேக் படங்களை எடுக்க முடிவதில்லை. இந்தப் படம் தெலுங்கில் வந்திருந்தாலும் தமிழில் வித்தியாசமாக இருக்கும்.”.

இவ்வாறு சந்தானம் தெரிவித்தார்.

அஜித் படத்தை இயக்குவது எப்போது? லோகேஷ் கனகராஜ் அளித்த ஆச்சரிய பதில்

அஜித் படத்தை இயக்குவது எப்போது? லோகேஷ் கனகராஜ் அளித்த ஆச்சரிய பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தற்போது டாப் 10 இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜ் பெயரும் இடம் பெறுவது நிச்சயம்.

மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் என ஹாட்ரிக் வெற்றிகளை கடந்து விரைவில் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தை இயக்க உள்ளார்.

இவரது படங்கள் கமர்சியல் ஆகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருவதால் இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கமல் விஜய் கார்த்தி விஜய் சேதுபதி சூர்யா ஆகியோரை இவர் இயக்கி விட்டதால் அஜித் படத்தை எப்போது இயக்குவார்? என்ற கேள்விகள் வலம் வருகின்றன.

இவரது சமீபத்தில் பேட்டியில் அஜித் படம் குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது… “அஜித்தின் எந்த படம் உங்களுக்கு பிடிக்கும்? எந்த படத்தையாவது ரீமேக் செய்வீர்களா? என்று கேட்டதற்கு../ “அஜித்தின் தீனா படம் எனக்கு மிகவும் பிடித்த படம். ரீமேக் செய்வதாக இருந்தால் தீனா படத்தை ரீமேக் செய்வேன்” என அதில் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய்யை சந்தித்த அஜித்தின் சூப்பர் ஹிட் இசையமைப்பாளரின் மருமகன்

விஜய்யை சந்தித்த அஜித்தின் சூப்பர் ஹிட் இசையமைப்பாளரின் மருமகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நற்பணி மன்றங்களையும் நடத்தி வருகிறார் விஜய்.

இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை அவ்வப்போது நடத்தி வருவது விஜய்யின் வழக்கம்.

நேற்று நவம்பர் 20ல் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்ய சென்னை ECR பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுடன் தனித்தனியாக படம் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய். மேலும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் மருமகன் கார்த்திக் வெங்கட்ராமன் கனடா நாட்டின் விஜய் மக்கள் இயக்க தலைவராக உள்ளார். இவர் கனடாவில் வாழும் தமிழர்.

விஜய் தனது மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வுக்கு, கனடாவில் இருந்து நேரில் வந்து, விஜய்யை சந்தித்து தனது ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.

அஜித் நடித்த ‘காதல் மன்னன்’, ‘திருப்பதி’, கமல் நடித்த ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’, சேரன் நடித்த ‘ஆட்டோகிராப்’, ‘பாண்டவர் பூமி’, விக்ரம் நடித்த ‘ஜெமினி’, மாதவன் நடித்த ‘ஜேஜே’ உள்ளிட்ட பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர் தான் பரத்வாஜ்.

பெரும்பாலும் சரண் இயக்கிய படங்களில் பரத்வாஜ் தான் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆவார்.

இவரின் மருமகன் தான் தற்போது விஜய் மக்கள் இயக்க (கனடாவில்) தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஒரு சாகசகாரர்.. எப்போதும் கிரியேட்டிவாக யோசிப்பவர்.; முதல்வர் பாராட்டு

விஜய் ஒரு சாகசகாரர்.. எப்போதும் கிரியேட்டிவாக யோசிப்பவர்.; முதல்வர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும்.

உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒரு சிறு டிரக்கை வைத்து கொண்டு பிஸினஸ் ஆரம்பித்து 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு மிகப்பெரும் பிஸினஸ்மேனின் அசாதாரணமான வாழ்க்கை தான் “விஜயானந்த்” திரைப்படம்.

பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது.

வணிக ரீதியிலான சாலை போக்குவரத்து வாகனத்தை இயக்கும் தொழிலில், இந்திய அளவில் முன்னணி நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நடிகர் நிஹால் நடித்திருக்கிறார்.

இவருடன் ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், பாரத் பொப்பண்ணா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீ பிரகலாத், வினயா பிரசாத், அர்ச்சனா, அனிஷ் குருவில்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

சுய சரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை வி ஆர் எல் ஃபிலிம்ஸ் நிறுவனம், பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையா கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

முதல்வர் பசவராஜ் பொம்மையா பேசியதாவது…

நான் விஜயை 1985-ல் சந்தித்தேன். ஒரு சாகசகாரராக தான் அவர் எனக்கு தெரிந்தார். எப்பொழுதும் அவரிடம் ஒரு தாகம் இருக்கும், எப்பொழுதும் கிரியேட்டிவாக யோசிக்க கூடியவர்.

அவர் இதுவரை நடத்திய அனைத்து தொழில்களுமே லாபகரமான ஒன்றாக இருந்து இருக்கிறது. முடியாததை முடிப்பது தான் அவரது பாணி. அவர் லோக்சபா எம் பி ஆக இருந்தார், அப்பொழுதும் நேரம் தவறாமை தான் அவரது பலம். அவரது கடின உழைப்பு அவருக்கு எல்லா துறைகளிலும் பலத்தை கொடுத்து இருக்கிறது. அவர் எதை தொட்டாலும் வெற்றி தான். இந்த சுயசரிதை படம் பல மொழிகளில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வர் பேசியதாவது..,
நடிகர் புனித் ராஜ் குமார் மரணம் என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. அவர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவரை இந்த நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.

எனது 73 வருட வாழ்கையில் வாழ்கை எவ்வளவு அழகானது, ஆழமானது ஆச்சர்யமானது என்பதை கற்று கொண்டேன். இளைய தலைமுறைக்கு நான் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் தயவு செய்து நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய நேரம் இருந்து இருந்தால், நான் இன்னும் நிறைய விஷயங்களை செய்து இருப்பேன். அதனால் இளைய தலைமுறை உங்களது நேரத்தை ஆக்க பூர்வமாக செயல்படுத்துங்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு நம்பிக்கை தரும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் நிஹால் பேசியதாவது…

ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார்.

அவரது சாதனைகள் வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் பாடம். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைத்து மொழிகளிலும் இப்படத்தை கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

விஜயானந்த் திரைப்படம் டிசம்பர் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகிறது.

எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றிவிட்ட ஏணி.; ஆரூர்தாஸ் மறைவுக்கு எம்எஸ். பாஸ்கர் இரங்கல்

எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றிவிட்ட ஏணி.; ஆரூர்தாஸ் மறைவுக்கு எம்எஸ். பாஸ்கர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) நேற்று மாலை 6:40 மணிக்கு காலமானார்.

தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயர் யேசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டார்.

1960-70-களில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரத்தின் படங்களுக்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார். இவரது வசனங்கள் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.

ஆரூர்தாஸ் மறைவுக்கு பிரபல குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் தன் இரங்கலை கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.

“அப்பாவுக்கு அஞ்சலி”.
————-

தமிழ் ஓய்ந்ததோ?
தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?

தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் ‘ஆசான்’ விண்ணுலகம் சென்றாரோ…?

“டேய்..பாஸ்கரா” என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?

அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?

இந்நிலையல்ல… எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?

மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை ‘அப்பா’ தங்களை மறக்க இயலுமோ?

தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?

மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் ‘டப்பிங்’ பேசுவேனா?

“சென்று வாருங்கள் அப்பா”…

மாதாவின் நிழலில் இளைப்பாற…

கண்ணீருடன்

தங்கள் மாணாக்கன்
எம்.எஸ்.பாஸ்கர்.

 

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலே குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி.

ரஜினியுடன் ‘ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் வளர்ந்து குமரி ஆன பிறகு விஜய் உடன் ‘காதலுக்கு மரியாதை’, பிரசாந்துடன் ‘பிரியாத வரம் வேண்டும்’, அஜித் உடன் ‘அமர்க்களம்’, மாதவனுடன் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினியை நடிக்க அஜித் அனுமதிக்கவில்லை. இவர்களுக்கு அனோஷ்கா ஆதிக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஷாலினி தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

More Articles
Follows