ரசிகர்களுக்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ் பாபு.; நாடு நல்லா இருக்க ரஜினி விஜய் அஜித் சூர்யா செய்வார்களா.?

ரசிகர்களுக்கு சேலஞ்ச் விடுத்த மகேஷ் பாபு.; நாடு நல்லா இருக்க ரஜினி விஜய் அஜித் சூர்யா செய்வார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வரும் படம் ‘சர்காரு வாரிபாட்டா’.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 2022 ஜனவரியில் திரைக்கு வரும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 9-ம் தேதியான நாளை மகேஷ் பாபுவின் பிறந்தநாள் வருகிறது.

இதனையொட்டி பசுமை இந்தியா சேல்ச் விடுத்துள்ளார் மகேஷ் பாபு.

அதில்,…” நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை கொண்டாட எனது பிறந்தநாளில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் போட்டோக்களை எனக்கு சமூக வலைத்தளங்களில் எனக்கு டேக் செய்து அனுப்புங்கள்” என தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

தமிழ் நாயகர்களின் ரசிகர்கள் கட் அவுட் பிளக்ஸ் பேனரை வைப்பதை தவிர்த்து இது போல செய்தால் நாடும் வளமாகும். சம்பந்தப்பட்ட நடிகர்கள் செய்வார்களா.?

Mahesh Babus Go Green Challenge to his fans to celebrate his birthay

பஹத் பாசில் பர்த்டே : விக்ரமை விட புஷ்பா செமயாய் இருக்கே.; கமல் ரசிகர் கவனிப்பாரா.?

பஹத் பாசில் பர்த்டே : விக்ரமை விட புஷ்பா செமயாய் இருக்கே.; கமல் ரசிகர் கவனிப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடிப்பில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் . இதில் விஜயசேதுபதி & பகத்பாசில் & காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இன்று பகத்பாசிலின் பிறந்த நாள் என்பதால் விக்ரம் படத்தில் பகத்பாசில் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டார் லோகேஷ்.

இத்துடன் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ பட போஸ்டரும் இன்று வெளியானது. இதில் வில்லனாக நடிக்கும் பஹத்பாசிலை அழகாக டிசைன் செய்து வாழ்த்தி இருந்தனர்.

ஆனால் கமலின் ‘விக்ரம்’ போஸ்டரில் ஏனோ கடமைக்கு டிசைன் செய்த போஸ்டர் போல இருந்தது. விக்ரம் பட பர்ஸ்ட் லுக் கூட சொல்லுமளவிற்கு இல்லை.

ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான ‘துர்கா’ பட செகன்ட் லுக் போஸ்டரும் இப்படிதான் இருந்தது.

அதில் லாரன்லஸ் ஏதோ டியூப் லைட் வெளிச்சத்தில் ஒரு செல்ஃபி எடுத்து போஸ்டர் வெளியிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

COMMON DP வெளியிடும் ரசிகர்கள் கூட அருமையான டிசைன்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் படத்தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இனியாவது நல்ல டிசைனர் வைத்து டிசைன் செய்வார்களா..?? என்பதே நம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

Fahad Faazil Birthday Poster Pushpa beats Vikram

கொரோனாவை விட கொடிய மனிதர்கள்.; டாக்டர் தயாரிப்பில் செவிலியராக நடிக்கும் காலேஜ் புரொஃபஷர்

கொரோனாவை விட கொடிய மனிதர்கள்.; டாக்டர் தயாரிப்பில் செவிலியராக நடிக்கும் காலேஜ் புரொஃபஷர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தருமபுரி டாக்டர் வே.சரவணன் பெருமையுடன் வழங்கும் படம் ‘செவிலியர் கடவுள்’.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் குணாஜீ எழுதி இயக்குகிறார். இவர் ‘ஜனநாயகக் கொலை’, ‘திருப்பி அடி’ குறும்படங்களை இயக்கியவர்.

கொரோனா சமயத்தில் தங்கள் உயிரை துச்சமாக எண்ணி மக்கள் சேவை ஆற்றிய உலக செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்தப் படம் உருவாகவுள்ளது.

உலகத்திலேயே ஆகச் சிறந்த மருந்து ‘அன்பு’ என்பதுதான் படத்தின் மையக்கரு.

அதே சமயம் கொரோனாவை விட கொடியவர்கள் மனிதர்கள் என்பதையும், எல்லா மதங்களும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்பதை கருத்தியல் படமாக இல்லாமல் கமர்ஷீயல் படமாக வெளிவர உள்ளது.

கொரோனா சமயத்தில் குடும்பத்தை பிரிந்து பல மணி நேரம் கஷ்டமான கவச உடை அணிந்து சேவை ஆற்றிய செவிலியர்களின் கடமையையும் தியாகத்தையும் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளார்கள்.

இதில் நாயகனாக விஷ்ணு ப்ரியன் நடிக்கிறார். இவர் ‘மை’, ‘மெர்லின்’, ‘இலக்கணம்’ ஆகிய படங்களில் நடித்தவர்.

நாயகியாக வண்ணத்தமிழ் சூர்யா நடிக்கிறார். இவர் பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.

இவர்களுடன் ‘திருப்பாச்சி’ பெஞ்சமின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அனிஸ் சாலமன் இசை அமைக்கிறார்.

கார்த்திக் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.

கணேஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் குணாஜீ கூறியதாவது…

“வெள்ளுடை தரித்த மானுட கடவுளான மருத்துவர்களையும், செவிலியர்களையும் இந்தப் படம் மேன்மைப்படுத்தும். ஒரு படைப்பாளியாக இந்தப் படத்தை இயக்குவதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.

Dr Saravans productional venture Seviliyar Kadavul directed by debutant Gunaji

சிம்புவால் வந்த வம்பு.. தயாரிப்பாளர்கள் சங்கம் & பெப்சி மோதல்.; நடந்தது என்ன.? முழு விவரம் இதோ..

சிம்புவால் வந்த வம்பு.. தயாரிப்பாளர்கள் சங்கம் & பெப்சி மோதல்.; நடந்தது என்ன.? முழு விவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் சிம்பு மீது பல்வேறு புகார்கள் கொடுத்துள்ளனர்.

ஆதிக் ரவி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காவதன் அசராதவன்’ படத்திற்காக சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இவையில்லாமல் 6 வருடங்களுக்கு முன் கொடுத்த 1 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

இது நம்ம ஆளு படத்தின் வெளியிட்டீன்போது பண உதவி செய்த வகையில் 3.50 கோடி ரூபாயை தனக்குத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளியே கேட்டு இருக்கிறார்.

ஆனால் இந்த பிரச்சினைகளையும் தாண்டி சிம்பு தனது படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வேறு தயாரிப்பாளர்களும் வாய்ப்புகள் தந்து கொண்டே தான் இருக்கின்றனர்.

தற்போது எப்படியாவது பணத்தைத் திரும்பப் பெற்று விடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சிம்புவின் புதிய படத்திற்கு பெப்சி தொழிலாளர்களை அனுப்பக் கூடாது என கடிதம் அனுப்பியது.

இதையொட்டி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதில கலந்து கொண்ட இயக்குநர் செல்வமணி தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியுள்ளார்.

ஆனால் இரண்டே நாட்களில் கௌதம் மேனன் இயக்கும் சிம்புவின் புதிய படம் வெந்து தணிந்தது காடு’ பட ஷூட்டிங்கிற்கு பெப்சி சங்கத்தினர் ஆதரவு கொடுத்தனர்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் சங்கத்தினர் பெப்சி தலைவர் செல்வமணியிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

“இப்போ நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு ஷெட்யூல் போகட்டும். அதன் பின்பு பேசித் தீர்ப்போம்..” என்று சொன்னாராம் செல்வமணி.

இதனால் மீண்டும் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் “செல்வமணி பெப்சியின் தலைவர் பதவியில் இருக்கும்வரையிலும் அதற்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தனர்.

படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் பணியில் அமர்த்தலாம் என முடிவெடுத்தனர்.

இதனால் பெப்சி சங்கத்தினர் கலக்கமடைந்தனர்.

உடனே பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அவசர செயற்குழு கூட்டி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் உள்ள ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தாது என தீர்மானம் எடுத்ததாக பத்திரிகைகளில் அறிவித்துள்ளார்கள்.

இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் முறைப்படி அனுப்பவில்லை.

சம்மேளனத்தின் தலைவராகிய நான் தயாரிப்பாளர்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள்.

இது முற்றிலும் தவறான தகவலாகும். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள அனைவரையும் விட தயாரிப்பாளர் நலனுக்காக நாங்கள் பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்.

தற்போது படங்களை தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக உள்ள முரளி எங்கள் இனிய நண்பர் மறைந்த இயக்குநர் இராமநாராயணனின் புதல்வர் ஆவார். அவர் மீது உள்ள மரியாதையில் நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை.

இருப்பினும் நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நடந்த விஷயங்கள்….

நடிகர் சிம்பு சம்பந்தப்பட்டு 4 தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை இருப்பதால் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளனத்தை கேட்டுக் கொண்டது. சம்மேளனமும் அதன்படியே நடந்து வந்தது.

இதற்கிடையே தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வெளியூரில் படப்பிடிப்பு நடத்தி கொள்கிறோம் என்றும், மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுவதற்குள் அனைத்து பிரச்சினைகளையும் பேசி சரி செய்த பிறகே சென்னையில் படப்பிடிப்பை துவங்குவோம் என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு வைக்க அதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஐசரி கணேசனின் கோரிக்கையை சம்மேளனம் தெரிவித்தது.

தயாரிப்பாளர்கள் சங்கமும் தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும் அப்படப்பிடிப்பில் கலந்துக் கொண்டோம். இதில் சம்மேளனத்தின் தவறு ஏதும் இல்லை.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமோ அல்லது அதன் தலைமை பொறுப்பில் இருக்கின்ற ஆர்.கே.செல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்தத்தின் விதிகளையும் மீறவில்லை.

ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பின்புலத்தில் யாரோ இருந்து வழி நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நியாயத்திற்கு புறம்பாக எங்கள் சம்மேளன தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தமிழ்நாடு முதல்வரிடம் முறையிட்டு தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமுகமான தீர்வு கிடைக்கப்பெறுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why Simbu is reason for Producers Council and FEFSI clash

முதன்முறையாக விஜய்யுடன் இணையும் செல்வராகவன்.; நெல்சனின் நெக்ஸ்ட் ப்ளான்

முதன்முறையாக விஜய்யுடன் இணையும் செல்வராகவன்.; நெல்சனின் நெக்ஸ்ட் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கிவருகிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலைய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் இணைந்துள்ளார்.

இதில் விஜய்யுடன் மூன்று வில்லன்கள் மோதவுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. (இப்படத்தில் இவரின் கேரக்டர் என்னவென்ற தகவல் வெளியாகவில்லை.)

இதனையடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக செல்வராகவன் நடித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Selvaraghavan to play villain in Beast

கல்யாண் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி

கல்யாண் இயக்கத்தில் இணையும் பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் கல்யாண்.

இவர் இதற்கு முன்பு ’கத சொல்லப் போறோம்’, பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’, ஜோதிகா நடித்த ‘ஜாக்பாட்’ போன்ற படங்களை இயக்கியவர்.

கல்யாண் இயக்கவுள்ள இந்த புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் தேவதர்ஷினி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று போடப்பட்டு் புதுச்சேரியில் தொடங்கியது.

Prabhu Deva and Aishwarya Rajesh joins for a new film

More Articles
Follows