தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக வேடமேற்று நடித்த பழம்பெரும் நடிகர் குஃபி பெயின்டல்.
அவர் 1975-ம் ஆண்டு ‘ரபூ சக்கார்’ என்ற திரைப்படத்தில் முதன்முறையாக நடித்து பிரபலம் ஆனார்.
அதன்பின்னர், தில்லாகி, தேஷ் பரதேஷ் மற்றும் சுஹாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
பகதூர் ஷா ஜாபர், மகாபாரதம், கனூன், ஓம் நமசிவாய, சி.ஐ.டி., ஷ்…கோய் ஹை, துவாரகதீஷ் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ராதாகிருஷ்ணர் மற்றும் ஜெய் கனியா லால் கி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார்.
கடைசியாக ஜெய் கன்னையா லால் கி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் நடித்து உள்ளார்.
அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குஃபி பெயின்டல் அவர்கள் சில காலமாக இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் நீண்டகாலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த மே 31-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் அவரது உடல்நலம் குன்றியது. இதுபற்றிய விவரங்களை அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னணி காமெடி நடிகரான பைந்தல், சில நாட்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார்.
இந்நிலையில், இன்று (05-06-2023) காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி குஃபி பெயின்டல் காலமானார். இவருக்கு வயது 79.
நடிகர் குஃபி பெயின்டலின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
mahabharata serial actor gufi paintal passed away