தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு… தியேட்டர்கள் மூடல்… வேலையிழப்பு… மக்களிடம் பணப்புழக்கம் குறைவு… பைனான்சியர் பிரச்சினை… உள்ளிட்ட பல காரணங்களால் ஆன்லைனில் படத்தை வெளியிட ஒரு சில தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள “பொன்மகள் வந்தாள்” படத்தை OTT ஆன்லைன் தளத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் சூர்யா.
இந்த நிலையில் நடிகர் மாதவன் நடித்துள்ள ‘மாறா’ படத்தின் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாம்.
இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இதில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஏற்கெனவே விக்ரம் வேதா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ‘சார்லி’ திரைப்படத்தின் ரீமேக் தான் மாறா என கூறப்படுகிறது.
Madhavans Maara movie plans to release in OTT platforms