BREAKING கடைக்கு நடந்து போங்க; பழைய ஈபாஸ் செல்லாது..; மாஸ்க் இல்லனா மாட்டீனீங்க.. லாக்டவுன் கன்டிசன்ஸ்

BREAKING கடைக்கு நடந்து போங்க; பழைய ஈபாஸ் செல்லாது..; மாஸ்க் இல்லனா மாட்டீனீங்க.. லாக்டவுன் கன்டிசன்ஸ்

Lockdown New conditions Dont use Bike Car Old EPass invalidசென்னை செங்கல்பட்டு திருவள்ளுர் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் நாளை ஜூன் 19 முதல் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை நிறைய நிபந்தனைகள் உள்ளது. அதன் தொகுப்பு இதோ…

சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும்.

* முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

*கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கைகளை கழுவ சோப்பு தண்ணீர் சானிடைசர் வைக்க வேண்டும்

*நோய் தீவிரம் அடைந்துள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறோம்

*காய்கறி, மளிகை பொருட்களை வாங்க பைக், கார்களில் வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது… அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்.

*உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

*ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள், மறுபதிவு செய்ய வேண்டும் – பழைய இ-பாஸ் செல்லாது.

*திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது.

*போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை.

*காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

*தேநீர் கடைகளுக்கு அனுமதியில்லை. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகள் திறக்கலாம்.

*சென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு கிடைக்கும்.

*சென்னையில் பணியாற்றும் செய்தியாளர்கள் தங்கள் நிறுவன அடையாள அட்டையை காண்பித்தால் மட்டும் போதுமானது.

*சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

*முகக்கவசம் அணியாமல் வெளியேவருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

*அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்படும்.

*முழு ஊரடங்கில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லை.

*அறிவுரை சொல்லி அனுப்பியதால் கடந்த முறை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

*பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை… அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது.

*சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிப்பு.

இவ்வாறு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

#ChennaiLockDown | #CoronaVirus | #filmistreet l #TNFightsCorona l #Chennai | #EPass | #Lockdown l #Corona l

Lockdown New conditions Dont use Bike Car Old EPass invalid

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாயுடன் நிபுணர்கள் சோதனை

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாயுடன் நிபுணர்கள் சோதனை

Bomb Threat to Rajini home Police Begins Search Operationசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது.

அவரது வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் ஒருவர் 108-க்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் வீட்டில் வெடிகுண்டும் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்த மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

ஆனால் அது வெறும் புரளி என தற்போது தெரிய வந்துள்ளது.

Bomb Threat to Rajini home Police Begins Search Operation

‘கொரோனா’ குறித்து முதல்வருடன் ரஜினி ஆலோசனை.; நடந்தது என்ன.?

‘கொரோனா’ குறித்து முதல்வருடன் ரஜினி ஆலோசனை.; நடந்தது என்ன.?

Did Rajini spoke to TN Chief Minister regarding Corona கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக அரசு.

ஆனால் நோய் தொற்று பரவலாக அதிகரித்து வருவதால் தினம் தினம் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனையடுத்து நாளை ஜீன் 19 முதல் 30 வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்ககப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சரிடம் போனில் தொடர்பு கொண்டு கொரோனா நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியானது.

நம் தளத்தில் அப்படியொரு செய்தி பதிவாகவில்லை.

ஆனால் முதலமைச்சரிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் பேசவில்லை என தெரிய வந்துள்ளது.

ஆனால் ஏன்? இதுபோன்ற தவறான செய்திகள் வலம் வருகின்றன என்பது தான் புரியாத புதிராகவே உள்ளது.

Did Rajini spoke to TN Chief Minister regarding Corona

ஜகமே தந்திரம் ஸ்டைலில் விக்ரம்60 படத்திற்கு பெயரிட்ட கார்த்திக் சுப்பராஜ்

ஜகமே தந்திரம் ஸ்டைலில் விக்ரம்60 படத்திற்கு பெயரிட்ட கார்த்திக் சுப்பராஜ்

 Is Thiravukol Mandhirvadhi the title of Vikram 60 filmவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படம் கொரோனா பிரச்சினைக்கு பிறகு வெளியாகவுள்ளது.

விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் தற்போது தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் உடன் இணைந்து நடிக்கவுள்ளார் விக்ரம்.

இப்படத்திற்கு தற்காலிகமாக சியான் 60 என்று பெயரிட்டுள்ளனர்.

லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி என்ற தலைப்பு வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ஜகமே தந்திரம் என்று பெயரிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

Is Thiravukol Mandhirvadhi the title of Vikram 60 film

வீர மரணமடைந்த பழனியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்

வீர மரணமடைந்த பழனியின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்

Kotapadi Rajesh announces Rs 5 Lakhs to Indian Soldier Pazhanis familyஉலகமே எதிர்பாரா தருணத்தில் இந்தியா – சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலில் துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி கற்கள் இரும்பு ராடுகளை கொண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா ஆகியோர் உயிரிழந்தனர்.

அதன்பின்னர் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. ஆக பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, தற்போது நடித்துவரும் டாக்டர், அயலான் மற்றும் விஜய்சேதுபதியின் க.பெ/ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kotapadi Rajesh announces Rs 5 Lakhs to Indian Soldier Pazhanis family

நண்பர்களை இழந்து நிற்கிறேன்.; கொரானாவை விரட்டுவோம்… சிம்பு உருக்கம்

நண்பர்களை இழந்து நிற்கிறேன்.; கொரானாவை விரட்டுவோம்… சிம்பு உருக்கம்

Simbus Condolence message for his 3 Cinema Industry friends உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், அன்பின் பொதுமக்களுக்கும் உங்கள் சிலம்பரசன் TR -இன் வணக்கங்கள்.

மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன… டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய நண்பர்கள். இவர்களது இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது.

சினிமாவிற்கான இழப்பாகப் பார்க்கிறேன். எனது நண்பர்களை இழந்துவிட்ட பேரிழப்பாகப் பார்க்கிறேன். இவர்களின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

இழப்பால் துயருறும் மூவரின் குடும்பத்திற்கும் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஆறுதலும் அவர்களைத் தேற்றிவிடாது என்பதறிவேன். எனது கண்ணீரும் இதயமும் உங்களின் இந்த நிலையை மீட்டெடுக்க வேண்டிக் கொண்டே இருக்கும்.

இதேபோல் கொரானா காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸின் சத்தம். இறப்பின் கதறல்.

கொரானாவின் பாதிப்பில் மரணமடைந்த குடும்பத்திற்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சுரா இசைப்புயலின் வேண்டுகோள் போல, அவரின் ரசிகர்களின் அபிமானத்தின்படி திரையரங்கில் வெளியாகி பெரு வெற்றி பெற வேண்டும். இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்திவிடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் வெளியாகட்டும். எனது வேண்டுகோளும் ஆசையும் அதுவே.

இந்த நோயைக் கண்டு யாரும் திக்குற வேண்டாம். பேனிக்(Panic) ஆவதுதான் மிகப்பெரிய நோய்.

தைரியமாக எதிர்கொள்ளுங்கள். சுனாமி, காஜா புயல், என எத்தனையோ இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்.

நிறைய பேரின் வீடுகள் ஆசை ஆசையாய் வாங்கிய கார்கள் நீரில் மூழ்கிப் போயின. மீண்டெழுந்தோம். திரும்ப நிமிர்ந்து உட்கார்ந்தோம்.

இந்தக் கொரானா நம்மை நமக்கு உதவிக்கொள்ள வழிவகுக்காமல் வீட்டில் முடக்கிப் போட்டுள்ளது.

நேரடியாக உதவி செய்ய முடியாது. ஆனால் ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லுங்கள்.

கிளவுஸ் முகக் கவசம் அணிந்து சமூகத்தில் பரவியுள்ள இந்தக் கொரானாவை இல்லாத நிலையை உருவாக்குவோம்.

மனதளவில் தளர்ந்துபோய்விட வேண்டாம். எதற்கும் தற்கொலை தீர்வாகாது. எந்த நிலையிலிருந்தும் நாம் எழுந்து நின்று விடலாம். வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உங்கள் மனதிலிருந்து நீக்கிவிடாதீர்கள்.

மனபலம் கொண்டு கொரானாவை விரட்டுவோம். (இம்யூன் பவரை) நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது முக்கியம். நாம் நம்மை இழந்துவிடக் கூடாது என்றால் தைரியம் கொள்வது மட்டுமே தீர்வு. எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலெடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை.

செய்வோம். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம்.

உங்களுடன் எப்போதும் தோள் நிற்கும்
உங்கள்
சிலம்பரசன் TR

Simbus Condolence message for his 3 Cinema Industry friends

More Articles
Follows