கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

கொரோனா ஊரடங்கால் ஆந்தாலஜி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் அமேசான் பிரைம் வீடியோவில் ‘புத்தம் புதுக் காலை’ படமும், நெட்ஃப்ளிக்ஸில் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படமும் வெளியாகின.

இந்த வரிசையில் அடுத்து உருவாகியுள்ள ஆந்தாலஜி படம்தான் ‘குட்டி லவ் ஸ்டோரி’.

ITS ALL ABOUT LOVE

காதலை மையமாக வைத்து நான்கு இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஆந்தாலஜியைத் தயாரித்ததுள்ளது.

இந்த நான்கு கதைகளை வெங்கட் பிரபு, கெளதம் மேனன், விஜய் மற்றும் நலன் குமாரசாமி இயக்கியுள்ளனர்.

இவற்றில் கவுதம் மேனன் & அமலாபால் ஒரு படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி & அருவி அதிதி பாலன் வேறொரு படத்திலும் கதிர் & மேகா ஆகாஷ் அடுத்த படத்திலும் வருண் & சாக்‌ஷி அகர்வால் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.

முதலில் ஓடிடி ரிலீசுக்குத் திட்டமிட்டு உருவானது இந்த படத்தை தற்போது நேரடியாகத் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர் வேல்ஸ் ஐசரி கணேஷ்.

ஓடிடி நிறுவனங்களும் முதலில் தியேட்டர் ரிலீஸை தான் விரும்புகிறதாம். தியேட்டர்களில் படம் பிரபலமானதும், ஓடிடியில் வெளியானால் இன்னும் பெரிய ரீச் நன்றாக இருக்கும் என ஓடிடி தளங்கள் விரும்புகிறதாம்.

Kutty Story in theatres on Feb 12th

Overall Rating : Not available

Latest Post