துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கம்..; தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

தங்கள் அரசு பணிகளை செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரச்னை செய்வதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார்.

எனவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவை புதுச்சேரி முதல்வர் கொடுத்திருந்தார்.

இதனிடையே புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம் ஏற்ப்பட்டது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

இவை தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது.

எனவே காங்கிரசின் ஆட்சி புதுச்சேரியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. சபாநாயகரும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கிரண் பேடி விடுவிப்புக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Kiran Bedi removed as Puducherry LG and Tamilisai Soundararajan given additional charge

Overall Rating : Not available

Latest Post