கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ராக் ஸ்டார் யஷ்

KGF Chapter 2 Movie started with Pooja todayபெரும்பாலும் கன்னட படங்கள் வெளி மாநிலங்களில் பிரபலம் ஆவதில்லை. ஆனாலும் அண்மையில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்தியா முழுவதும் பிரபலமானது.

பிரஷாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் யஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சுமார் 50 கோடி செலவில் தயாரான இப்படம், 250 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கன்னடப் படத்திற்கான அதிகபட்சமான வசூல் இது எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது ‘கேஜிஎப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 13) ஆரம்பமாகியுள்ளது.

அத்தியாயம் இரண்டில் கேஜிஎப் தங்கச் சுரங்கத்தை நாயகன் யஷ், எப்படி ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதுதான் கதையாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

KGF Chapter 2 Movie started with Pooja today

Overall Rating : Not available

Latest Post