தொழில் அதிபருடன் திருமணமா? நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த கீர்த்தி சுரேஷ் அட்வைஸ்

தொழில் அதிபருடன் திருமணமா? நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த கீர்த்தி சுரேஷ் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு & ஹிந்தி ஆகிய மொழி படங்களில் திறமையாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார் கீர்த்தி.

தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் தொழில் அதிபருடன் கீர்த்திக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக தகவல்கள் பரவியது.

(நம் தளத்தில் அப்படி ஒரு பொய் செய்தி வெளியாகவில்லை)

இந்த வதந்தி குறித்து கீர்த்தி கூறியதாவது…

“எங்கிருந்து இது போன்ற தகவல் வெளியாகிறது. வெளியானது என தெரியாது.

இப்போது திருமணம் செய்துகொள்ள நேரமும் இல்லை. அந்த எண்ணமும் இல்ரை.

என் சொந்த வாழ்க்கை பற்றி வதந்தி பரப்பாமல் ஏதாவது நல்ல விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.” என கூறியுள்ளார் கீர்த்தி.

Keerthy suresh reacts on wedding rumours

புதுச்சேரியில் என்ஆர்.காங். – அதிமுக – பா.ஜ.க. தொகுதி பங்கீடு உறுதி.; யாருக்கு எத்தனை சீட்.?

புதுச்சேரியில் என்ஆர்.காங். – அதிமுக – பா.ஜ.க. தொகுதி பங்கீடு உறுதி.; யாருக்கு எத்தனை சீட்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போது புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியே நடைமுறையில் உள்ளது.

எனவே ஆட்சியை கைப்பற்ற அங்கும் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

அதிமுக. & பாஜக.வுடன் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது.

தொகுதி பங்கீடு மற்றும் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது உள்ளிட்ட பல விவகாரத்தில் கட்சிகளுக்கு இடையே இழுபறி நீடித்தது.

(அதாவது… ’முதல்வர் பதவி’ தருகிறோம் என்ற வாக்குறுதியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜ.க-வுக்கு அழைத்து வந்தனர்.)

தற்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு கூட்டணி உறுதியானது.

இந்த கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்ஆர் காங்., தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் ஆகியோர், பா.ஜ.,மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகிவிட்டது.

அதன்படி என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக-வுக்கு 14 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதியிலிருந்து அதிமுகவுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது.

இதில் 4-5 தொகுதிகள் மட்டுமே அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி தேர்தலை இந்த கூட்டணி சந்திக்கிறது.

NR Congress-BJP-AIADMK seal alliance for Pondicherry Elections 2021

நேற்று முன்தினம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்.. நேற்று திமுக ஆதரவு.. இன்று ஆதரவு வாபஸ்..; கன்ப்யூசனாகி கருணாஸ் காமெடி

நேற்று முன்தினம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்.. நேற்று திமுக ஆதரவு.. இன்று ஆதரவு வாபஸ்..; கன்ப்யூசனாகி கருணாஸ் காமெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேமுதல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

இதனிடையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

அதிமுக.,வை கடுமையாக விமர்சனம் செய்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

இவரை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்த தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் வெளியேறியது.

கருணாஸ் கூறியதாவது:-

“முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றார்.

இந்த நிலையில், “சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படைகட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.

இந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார்.

மேலும் திமுக., கூட்டணியில் தொகுதியை பெறுவதற்கும் முயற்சி செய்தனர்.

ஆனால், மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியதால் கருணாசை திமுக. கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று திமுக.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கருணாஸ் அறிவித்தார்.

ஆனால் தமிமுன் அன்சாரி கூறுகையில்…

“தங்களுக்கு திமுக சீட் ஒதுக்காதது வருத்தம். கூட்டணியில் நீடிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.

Politician Karunaas withdraws DMk support

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..; புதிய தொழில் நுட்பத்துடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரீ-ரிலீஸ்!

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..; புதிய தொழில் நுட்பத்துடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ulagam Suttrum Vaalibanஎம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன்.

ஆம்… தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.
இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார்.

அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர்.

நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர்.

‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்’ உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி உண்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து
வெளியிடுகிறார்கள்.

MGR’s this film re release in this summer

கமலுக்கு 154.. சரத்துக்கு 40.. ரவிக்கு 40..; மநீம சமக ஐஜேகே கூட்டணி தொகுதி பங்கீடு ஓவர்

கமலுக்கு 154.. சரத்துக்கு 40.. ரவிக்கு 40..; மநீம சமக ஐஜேகே கூட்டணி தொகுதி பங்கீடு ஓவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, கமல், சீமான் மற்றும் தினகரன் ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன.

(தேமுதிக தேர்தல் நிலைபாடு விரைவில் தெரிய வரும்..)

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் மற்றும் (வேந்தர்) ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் ‘மாற்றத்திற்கான கூட்டணி’யை அமைத்தனர்.

சமீபத்தில் இவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி இவர்கள் மூவருக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது.

மேலும் விசிக திருமாவளவனை.. “வா தம்பி.. வா தம்பி” என அழைத்து பார்த்தார் கமல்.

ஆனால் திமுக – காங் கூட்டணி கொடுத்த கொடுத்த 6 தொகுதிகளே போதும் என திருமாவளவன் அங்கேயே தங்கிவிட்டார்.

இந்த நிலையில் மநீம & சமக & ஐஜேகே ஆகிய 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு விட்டது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் சரத்குமார் (சமக) மற்றும் ஐஜேகே ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதனையடுத்து கமல்ஹாசன் சரத்குமார் ரவி பச்சமுத்து ஆகிய மூவரும் தங்களது தொகுதிகளில் பிரசாரம் செய்ய தயாராகிவிட்டனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடவுள்ளது.

தினகரனின் அமமுக அணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Maiam to contest in 154 seats in TN elections

JUST IN அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்..; வீராப்புடன் வெளியேறிய விஜயகாந்த் என்ன செய்ய போகிறார்.?

JUST IN அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்..; வீராப்புடன் வெளியேறிய விஜயகாந்த் என்ன செய்ய போகிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தியது தேமுதிக.

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்துவிட்டது அதிமுக.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இன்று (மார்ச் 09) தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கட்சி தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா,? என்பது குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்போம் என, மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்…

“நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலையும், 2019 மக்களவைத் தேர்தலையும் அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்கொண்டது தேமுதிக.

தற்போது அங்கிருந்து விலகியுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிடுமா? அல்லது வேறு கட்சி கூட்டணியில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

DMDK walks out of AIADMK-led alliance for Tamil Nadu elections

More Articles
Follows