தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் கீர்த்தி சுரேஷின் அடுத்த பாடல்..; வைரலாகும் வீடியோ

இளம் வயதிலேயே சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் ஒரு பன்முக திறமை வாய்ந்தவர் என்பது பலருக்கு தெரியாது.

முன்னதாக ஓவியங்கள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பின்னர் தன் சக நடிகர் விஜய் பிறந்தநாளன்று வயலின் வாசித்து வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தற்போது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவில் ‘ரங் தே’ படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த இசைக்கு ஏற்ப கீர்த்தி பாடுவது போல் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாமி 2 படத்தில் விக்ரமுடன் கீர்த்தி பாடியிருந்த டூயட் சாங் செம ஹிட்டானது இங்கே கவனிக்கத்தக்கது.

Keerthy and DSP joins for new film

Overall Rating : Not available

Latest Post