அஜித் கேட்டாரா? அவர விட 5 வயசு எனக்கு கம்மிதான்..; கிழவின்னு சொன்ன தல ரசிகரை கிழித்த கஸ்தூரி

kasthuri ajith1980 களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஸ்தூரி.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை ட்வீட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இவரை அஜித் ரசிகர்கள் அடிக்கடி வம்புக்கு இழுப்பது வழக்கம். அவரும் பதிலடி கொடுப்பார்.

இந்த நிலையில் அஜித் டிபி வைத்த ஒரு ரசிகர்… கஸ்தூரி பிரபுவுடன் நடித்த பழைய திரைப்பட வீடியோவை குறிப்பிட்டு கஸ்தூரியை விமர்சித்திருந்தார்.

இது நம்ம கிழவி கஸ்தூரி தானே.. அந்த காலத்துல சூப்பர் ஃபிகரா இருந்திருப்பா போல… என கமெண்ட் செய்துள்ளார்.

அதைப் பார்த்த கஸ்தூரி… “எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்? அதை எனக்கு cc பண்ணுவானேன்?

இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? அஜித் சார் கேட்டாரா அவர் பேரை சொல்லிக்கிட்டு அசிங்கமா பேசுங்கன்னு? இதில் காமெடி என்னன்னா, கஸ்தூரி அஜித்தைவிட 5 வயது குறைவானவர். ஹய்யோ, ஹய்யோ” என கிழித்துவிட்டார் கஸ்தூரி.

Overall Rating : Not available

Latest Post