மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கசட தபற ஃபர்ஸ்ட்லுக்

மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கசட தபற ஃபர்ஸ்ட்லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)வழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும்போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில் மிகவும் பேசப்படும் பிரபலமான விஷயமாக மாறியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மகத்தான வரவேற்பை பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

இது குறித்து இயக்குனர் சிம்பு தேவன் கூறும்போது, “திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் வேலை செய்தது எனக்கு ஒரு வித்தியாசமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருந்தது. இது சம்பிரதாய அறிக்கையாக கூட தோன்றலாம், ஆனால் இதில் உள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பார்க்கும்போது, அது நிரூபணம் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன், சாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் என ஒவ்வொருவருமே நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டிருப்பவர்கள். கூடுதலாக, இவர்கள் யாருமே அவசர அவசரமாக எந்த படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை, நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கடுமையான முயற்சிதை மேற்கொள்பவர்கள். தொழில்நுட்ப குழுவை பற்றி சொல்வதென்றால், தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலமான அனைத்து கலைஞர்களும் பங்கு பெற்று இருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் போன்ற கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களுடன் ஜிப்ரான் மற்றும் சாம் சிஎஸ் போன்ற தற்போதைய பரபரப்பான இசையமைப்பாளர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். கசட தபற குழுவுக்கு இது ஒரு மிகப்பெரிய வரம். இந்த கதையையும், முயற்சியையும் நம்பி அதை செயல்படுத்துவதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்கள் வி. ராஜலட்சுமி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவிந்திரன் ஆகியோருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. விரைவில் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும், தொடர்ந்து ஜுலையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

‘ஆந்தாலஜி’ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட வகை படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு எப்பொழுதுமே மிகச்சிறப்பானது. சிம்புதேவன் எவ்வாறு இதைப் பார்க்கிறார்? எனக் கேட்டால் அவர் உடனடியாக விளக்குகிறார், “எங்கள் திரைப்படமானது இந்த வகையைச் சார்ந்ததாக இருக்காது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆந்தாலஜி என்பது ஒரு கதைக்கும் மற்றொன்றுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லாத சில சிறுகதைகளின் தொகுப்பு. ஆனால் கசட தபற ஒரு கதை, ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு படம்” என்றார்.

கசட தபற படத்தை பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார்கள். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

விஜய் தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய்-அதுல்யா-ஐஸ்வர்யா தத்தா

விஜய் தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய்-அதுல்யா-ஐஸ்வர்யா தத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு மறக்க முடியாத வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏசி என்ற எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவரது மகன் விஜய்யை வைத்தும் நிறைய படங்களை இயக்கினார்.

விஜய், பெரிய ஹீரோவான பிறகு படங்களை இயக்காமல் ஒதுங்கியிருந்தார்.

பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு படங்களை இயக்கவும் நடிக்கவும் செய்தார்.

இவரது நடிப்பில் நையப்புடை, கொடி, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட படங்கள் அண்மையில் வெளியானது.

தற்போது மீண்டும் படங்களை இயக்க முடிவெடுத்துள்ளாராம்.

அதில் ஜெய், ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம்.

இப்படமும் அரசியல் கதை என கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் ‘கோமாளி’-தனங்களை பாராட்டும் ரசிகர்கள்

ஜெயம் ரவியின் ‘கோமாளி’-தனங்களை பாராட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் 24வது படமாக உருவாகியுள்ளது கோமாளி.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.

இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இளைஞர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை கூறும் சைக்காலஜிக்கல் பேண்டசி படமாக இது உருவாகியுள்ளதாம்.

இப்படத்தில் மட்டும் ஜெயம்ரவி 9 வேடங்களில் நடித்துள்ளார். எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்ற பர்ஸ்ட் லுக்கை பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ஆதிவாசி, இளவரசன், நோயாளி, விஞ்ஞானி, பள்ளி மாணவன் என 9 கேரக்டர்கள் வெளியாகியுள்ளது.

இதில் பள்ளி மாணவனாக நடிக்க தனது எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளாராம் ஜெயம் ரவி.

இதற்காக அவர் 3 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவன் போஸ்டருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிரடி காட்டும் சூர்யாவின் ‘என்ஜிகே’ ரிலீஸ்

அமெரிக்காவில் அதிரடி காட்டும் சூர்யாவின் ‘என்ஜிகே’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருபவர் சூர்யா. இதனால் இவருக்கு அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் வருகிற மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள படம் என்ஜிகே.

செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வெளியாக உள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 150க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட உள்ளார்கள்.

ஒரு நாள் முன்னதாக 30ம் தேதியே படத்தின் பிரிமீயர் காட்சியும் நடைபெற உள்ளது.

சூர்யா நடித்த படம் அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது இதுவே முதல் முறையாம்.

மேலும் தமிழ் படங்களே வெளியாகாத ஒரு சில நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது என்பதுதான் ஹைலைட்.

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது இசை அமைத்து கொண்டும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவரது நடிப்பில் சசி இயக்கத்தில் உருவான படம் ”சிவப்பு மஞ்சள் பச்சை” விரைவில் வெளிவரவுள்ளது. மேலும் இயக்குனர் எழில் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சூர்யா, தனுஷ் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து கொண்டும் இருக்கிறார். இவ்வளவு வேலைகளின் நடுவே சமூகம் சார்ந்த பல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இசை, நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ் குமார் சமூக பணிகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டால், “நானும் சமூகத்தில் ஒன்றான மனிதன்தான்” என்கிறார்.

“சினிமா துறை என்பது டாக்டர், வக்கீல் போன்ற ஒரு தொழில் அவ்வளவு தான். நாங்களும் சாதாரண மனிதர்களை போன்றவர்கள்தான். பயணம் எங்கு தொடங்கிறதோ, புதிய கனவுகள் அங்கு மலரும், அந்த பயணத்தின் தொடர்ச்சியாக தான் இசை. இசைக்கு பின்பு நடிப்பு. தற்போது சமூக பணி. நான் இசை அமைத்த போதிலும், நடித்த போதிலும் கிடைத்த கைதட்டல்களில் கிடைக்காத சந்தோஷம் சமூக சார்ந்த வேலைகள் செய்யும் போது மனதிற்கு மிகவும் ஆனந்ததை கொடுக்கிறது.

என் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வேண்டும், அதற்காக என்னால் முடிந்த உதவிகள் செய்வேன். அது என் கடமையும் கூட. என் பயணத்தின் அனுபங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, தமிழகத்தில் இன்னும் மழை பெய்து கொண்டு இருகிறது என்றால் நான் சந்தித்த, சந்திக்காத மாமனிதர்களால் தான் என்று சொன்னால் மிகையகாது.

என் சமூகத்தில் இன்னும் அடிபடை தேவைகளில் ஒன்றான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எனது முக்கிய நோக்கம். அதில் குறிப்பாக ஒரு பெண்ணிற்கு கிடைக்கும் கல்வி, அவள் குடும்பத்திற்கு கிடைக்கும் கல்வி ஆகும்.

நான் பார்த்த சமூக பணி செய்யும் மனிதர்கள் மிகவும் சாதாரணமாக மிகப் பெரிய சமூக சார்ந்த பிரச்சனைகளை எதிர்க் கொண்டு அதற்க்கான தீர்வுகளை கண்டு உள்ளார்கள். அதற்காக உலக அளவில் பெரிய விருதுகள் கூட பெற்று கொண்டு இன்னும் மக்களுடன் மக்களாக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை அனைத்தும் செய்தும் மிகவும் தன்னடக்கத்துடன் இருக்கிறார்கள்.

நான் சினிமாவில் இருக்கிறேன் என்பதற்காக என் முகம் வெளியே தெரிகிறது. அதுவும் ஒரு வகை நம்மைக்கு தான் என்று நான் எண்ணுகிறேன், காரணம் என் மூலம் இந்த மாமனிதர்களை வெளியே கொண்டு வந்து மக்களுக்கு காட்ட விரும்புகிறேன்.

வெளிச்சத்துக்கு வராமல் அதே நேரத்தில் சிறப்பாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் செற்பாட்டாளர்களை நானே நேரடியாக அவர்கள் இடத்துக்கு சென்று பேட்டி எடுத்து வெளி உலகத்துக்கு காட்ட உள்ளேன். “மகத்தான மாமனிதர்கள்” என்ற பெயரில் என்னுடைய யூடியூப் சேனலில் இது ஒளிபரப்பாகும். சுதந்திரமாக இந்த நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக லாப நோக்கு துளிகூட இல்லாமல் யூடியூபில் வெளியிடுகிறேன்.

சமூக பணி பல துறைகளில் இருக்கிறது, என்னால் எல்லா துறைகளிலும் சென்று உதவ முடியாது. ஆனால் பல துறைகளில் சிறப்பாக செயல்படும் மனிதர்களுடன் சேர்ந்து பயணிக்க முடிவு செய்தேன். அது போல நான் சமூகத்தில் சந்திக்கும் மகத்தான மனிதர்களை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அவர்கள் செய்யும் மக்கள் நலபணிகள், சாதனைகள் என்று அவர்கள் இடத்திற்கே சென்று களத்தில் நான் பார்த்து தெரிந்து கொண்ட அனுபவங்களின் தொகுப்பாக தான் இந்த “மகத்தான மாமனிதர்கள்”, என்று மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் கூறுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

என் திருமணத்தை பத்தி நானே சொல்றேன்.. வெயிட் பண்ணுங்க.. : சிம்பு

என் திருமணத்தை பத்தி நானே சொல்றேன்.. வெயிட் பண்ணுங்க.. : சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STRs statment about his marriage and upcoming Projectsதனது குடும்பத்தார் பார்த்துள்ள சொந்தக்காரப் பெண்ணைத் திருமணம் செய்வதற்கு சிம்பு ஒப்புக்கொண்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் பரவின. (நம் தளத்தில் அப்படி எதுவும் பதிவிடவில்லை)

இதுதொடர்பாக சிம்பு ஓர் அறிக்கை அளித்துள்ளார். அதில்…

‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவுகின்றன.

தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை என்பதை விளக்கிக் கொள்கிறேன். அதற்கான உரிய நேரத்தில் இதுகுறித்து நானே தெரிவிப்பேன். என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன.

ஒரு சினிமா நடிகராக பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை சந்திக்கவேண்டி இருக்கும். இது இணைந்து படம் இயக்குவதற்கு என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

இத்தகைய வதந்திகளால் என்னுடைய ரசிகர்கள் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு அடைகின்றனர். நான் உறுதியாக இருப்பதற்கு என்னுடன் இணைந்து நிற்கும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Simbu aka STRs statment about his marriage and upcoming Projects

More Articles
Follows