தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனவே நேற்று இரவு, கார்த்தி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது, ஒரு ரசிகர் சூர்யாவை வைத்து படம் டைரக்ட் செய்வீர்களா? எனக் கேட்டுள்ளார்.
“நான் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தபோதே அண்ணாவுக்காக (சூர்யா) ஸ்கிரிப்ட் எழுதினேன்.
இப்போது நடிகனாகிவிட்டேன்.. ஒரு நாள் எனது கதை அவருக்குப் பிடித்துப் போனால் நான் அவரை இயக்க வாய்ப்புள்ளது” என கார்த்தி பதிலளித்துள்ளார்.
கார்த்தி நடிகராக ஆவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது உறுதியாகும் பட்சத்தில் அப்படி ஒரு அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Karthi said one day he may direct his brother Suriya