Big News: காலாவை திரையிட பாதுகாப்பு கொடுங்கள்; தனுஷ் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

Karnataka Govt must give protection to Kaala screening theatres Order by High Courtரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜீன் 7-ம் தேதி வெளியாகிறது.

காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இப்பட தயாரிப்பாளர் தனுஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது.

அதனால் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் சற்றுமுன் விசாரணைக்கு வந்தது

இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் காலா படத்தை திரையிட கட்டாயப்படுத்த முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து வாதாடினார்.

எனவே இறுதியாக படம் திரையிடப்படுவதற்கு அரசு பாதுகாப்பளிக்க என அவர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Karnataka Govt must give protection to Kaala screening theatres Order by High Court

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post