மீண்டும் இணைந்தது ‘லூசிஃபர்’ கூட்டணி.; ப்ருத்விராஜ் நடித்த ‘கடுவா’ ஜூலையில் ரிலீஸ்

மீண்டும் இணைந்தது ‘லூசிஃபர்’ கூட்டணி.; ப்ருத்விராஜ் நடித்த ‘கடுவா’ ஜூலையில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’.

இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

வரும் ஜூலை 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலக சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ்…

“மலையாள திரையுலகில் தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த கடுவா திரைப்படம் உருவாகியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன்பே இந்தப்படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்பாடுகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்திவிராஜ் பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறிவரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கிய லூசிபர் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்த படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து இயக்குனர் ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கடுவா திரைப்படம்.

நடிகர்கள் ;

பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், விஜயராகவன், கலாபவன் ஷாஜன், திலீப் போத்தன், அஜு வர்கீஸ், சுதேவ் நாயர், சாய்குமார், அர்ஜுன் அசோகன், சீமா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழுவினர்

டைரக்ஷன் ; ஷாஜி கைலாஷ்

தயாரிப்பு ; சுப்ரியா மேனன் (பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்) & லிஸ்டின் ஸ்டீபன் (மேஜிக் பிரேம்ஸ்)

கதை ; ஜினு ஆபிரகாம்

இசை ; ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவாளர் ; அபிநந்தன் ராமானுஜம்

படத்தொகுப்பு ; சமீர் முகமது

தயாரிப்பு வடிவமைப்பு ; மோகன்தாஸ்

வசனம் ; ஆர்பி பாலா

பாடல்கள் ; சாமிஜி, ஆர்பி பாலா

ஒலிப்பதிவாளர் ; அருண் குமார்

ஒளிப்பதிவு ஸ்டுடியோ ; ஆர்பி ஸ்டுடியோ

ஆடை வடிவமைப்பு ; ஸ்டஃபி சேவியர், சமீரா சனீஸ்

சண்டைக் காட்சி ; கனல்கண்ணன் & மாபியா சசி

தயாரிப்பு நிர்வாகி ; மனோஜ்.என்

துணை தயாரிப்பாளர் ; சந்தோஷ் கிருஷ்ணன்

நிர்வாக தயாரிப்பாளர் ; நவீன் பி.தாமஸ்

நிர்வாகம் மற்றும் விநியோக தலைமை ; பபின் பாபு

தயாரிப்பு மேற்பார்வை ; அகில் யசோதரன்

முதன்மை துணை இயக்குனர் ; மனீஷ் பார்கவன்

தயாரிப்பு உறுதுணை ; சஞ்சு.ஜே

ஒப்பனை ; ஷாஜி கட்டக்கடா

புகைப்படம் ; சைனத் சேவியர்

விஎஃப்எக்ஸ் ; கோக்கனட் பஞ்ச்

விளம்பர வடிவமைப்பு ; ஆனந்த் ராஜேந்திரன்

புரமோஷன் ஆலோசகர் ; விபின் குமார்

மார்க்கெட்டிங் ; போபக்சியோ

மக்கள் தொடர்பு ரியாஸ் கே அஹமத்

Kaduva is an entertainer package for the audience who enjoy mass films

அடுத்த லெவல் செல்லும் ‘மாயோன்’.; ‘கட்டப்பா’ சத்யராஜ் கலந்துக் கொள்கிறார்

அடுத்த லெவல் செல்லும் ‘மாயோன்’.; ‘கட்டப்பா’ சத்யராஜ் கலந்துக் கொள்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, ‘மாயோன்’ படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், ‘ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு’ என்றார்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மாயோன்’.

மாயோன் விமர்சனம் 3.25/5.; மறையாத மர்மங்கள்

யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கி இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி, படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறது.

இந்த தருணத்தில் தமிழ் திரை உலகில் கடவுள் மறுப்பு கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையவரும், பெரியாரிய சிந்தனையாளருமான புரட்சி நடிகர் சத்யராஜ், குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீகமும், அறிவியலும் கலந்த ‘மாயோன்’ திரைப்படத்தை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அமைந்த திரையரங்கில் கண்டுகளித்தார்.

படம் நிறைவடைந்ததும் ‘மாயோன்’ குறித்து சத்யராஜ் பேசுகையில்…

மாயோன் திரைப்படம் எங்களுக்கு பிடித்ததைப் போல் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. படம் முடிவடைந்ததும் இருக்கைகளில் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

இந்த கைதட்டல்கள் தான் படத்தின் உண்மையான வெற்றிக்கு கிடைத்த சாட்சி. இந்தப்படத்தில் சிபி சத்யராஜ் உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களால் தான் என்னுடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த படத்திலும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை இசைஞானி அளித்திருக்கிறார். இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் தெளிவாக திட்டமிட்டு படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

அனைத்து வகையிலும் சிறப்பாக அமைந்திருக்கும் இந்த படம் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்கள் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். என்றார்.

இதனிடையே தமிழகத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பையும், ஆதரவையும் பெற்ற ‘மாயோன்’ திரைப்படம் ஜூலை ஏழாம் தேதியன்று தெலுங்கு மொழியில், 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஜூலை 1ஆம் தேதி அன்று பிரம்மாண்டமான அளவில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.

இதில் ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பாவாக நடித்து தெலுங்கு மக்களின் அபரிமிதமான அன்பை பெற்றிருக்கும் புரட்சி நடிகர் சத்யராஜ் கலந்துகொள்கிறார்.

இவருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Mayon’ going to the next level .; ‘Kattappa’ Sathyaraj attends Maayon promotion

மக்கள் போராட்டத்தை வெளிச்சம் போட்ட வீதி நாடகக் கலைஞர் ‘பூ’ ராமு மரணம்.; பிரபலங்கள் இரங்கல்

மக்கள் போராட்டத்தை வெளிச்சம் போட்ட வீதி நாடகக் கலைஞர் ‘பூ’ ராமு மரணம்.; பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞராக, பாடகராக, வீதி நாடகக் கலைஞராக உலா வந்த தொழிலாளர் வர்க்கத்தின் போராளி தோழர் ராமு, ‘பூ’ ராமு என்ற அடையாளத்துடன் மறைந்தார்!

அன்புத் தோழர் ராமுவின் உடல் மறையும், அவரின் சிரித்த முகம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

பட்டங்கள், பதவிகள், அடைமொழிகள் தன் பெயருக்கு முன்னும் பின்னும் அலங்கரிக்க வேண்டும் என்ற ஆர்ப்பரிப்புகளுக்கு நடுவே, “தோழா” என்று தன்னை மற்றவர் அழைப்பதை மட்டுமே விரும்பிய அன்புத் தோழனின் உயிர் பிரிந்தது, அவர் சுவாசித்த தோழமை உணர்வு நிலைப் பெற்று வாழ்கிறது.

விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

பாசாங்கு இல்லாத வெள்ளந்தி சிரிப்பு!
பசப்பு சொற்கள் தெரியாத தோழமை!

இறுதி நாட்களில் மரணத்தோடு நீ நடத்திய போராட்டம்!
தன்மானத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று உன் கண்கள் மூலம் நீ வெளிப்படுத்திய கர்ஜனை!

உன் இறுதிக்காலம் எப்படி இருந்தது?
உனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட என்ன காரணம்? ஹோமியோபதியா அல்லது அலோபதியா எது உன்னை காப்பாற்றி இருக்கும்? இந்த ஆராய்ச்சி இப்போது எனக்கு தேவையில்லை.

வாலிபர் சங்கத்தில் இளைஞர் விடியலுக்காய் முழங்கிய ராமு!
எழுத்தாளர் சங்கத்தில் வர்க்கக்குரலாய் ஒலித்த ராமு!

வீதியெல்லாம் மக்கள் வாழ்க்கைப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வீதி நாடகக் கலைஞர் ராமு!
திரைப்படத்தில் நடித்த போதும் பகட்டில்லா பண்பாளர் ராமு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே விடியலுக்கான ஒரே பாதை என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட
தோழர் ராமு!

இதுவே தோழர் ராமு குறித்த என் நினைவலைகள்!

உன் தாய் மரணத்தின் போது, கூடியக் கூட்டத்தைப் பார்த்து “இருக்கும் போது உதவ வராத கூட்டம் மறைந்த பிறகு கூடுவது விளம்பரத்திற்கே” என்று நீ சொன்ன சொற்கள் என் நெஞ்சைத் தைத்தது.

பலரின் வாழ்க்கை எனக்கு பாடமாய் அமைந்தது. ஆபத்தில் உடன் இருப்பதே தோழமை என்று நீயும் எனக்கு பாடம் நடத்தினாய்.

குற்றவுணர்வுடன் ஊரப்பாக்கதில் உன் உடல் அருகில் நாளை நிற்கப் போகிறேன்!

ஏளனமாய் என்னைப் பார்த்து நீ சிரிக்கப் போகிறாய்!

நடிக்கத் தெரியாத தோழனே! உன் உடல் அருகில் வர என் உடல் நடுங்குகிறது!

முடிந்த வரை பாதிப்பில் உள்ள மக்களுக்கு என்றும் உதவ முன் நிற்பேன் என்ற உறுதியுடன் வீர வணக்கம் தோழர் ராமு!

செவ்வணக்கம் தோழர் ராமு!

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

———————————————-
தோழர் ராமு இறுதி நிகழ்வுகள் நடைபெறும் இடம்:
எண் 469, 15 ஆவது தெரு.
பெரியார் நகர்,
ஊரப்பாக்கம்.
(டீ கடை பேருந்து நிறுத்தம்)
———————————————-

வீதிநாடக, திரைக்கலைஞர் *கருப்பு ராமு* மறைவுக்கு தமுஎகச மாநிலக்குழு இரங்கல்

****
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், வீதி நாடக மற்றும் திரைக்கலைஞருமான தோழர் வ.இராமு அவர்கள் 27.06.2022 அன்று மாலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது மறைவிற்கு தமுஎகச மாநிலக்குழு நெஞ்சார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாணவப்பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வழியே பொதுவாழ்க்கைக்கு வந்த ராமு, இறுதிவரை இடதுசாரியாக வாழ்வை மேற்கொண்டவர். சாதி மறுப்பும் சடங்கு மறுப்பும் சொந்தவாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும்விதமாக தன் பெற்றோரின் இசைவுடன் காதல் மணம் புரிந்தவர்.

தென்சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டியமைக்கவும், அப்பகுதியின் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக சைதை கலை இரவினை வடிவமைக்கவும் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். “கனவுகள் 2000” என்ற தலைப்பில் புத்தாயிரமாவது ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ்வினை வெற்றிகரமாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.

நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியம் அமைவதற்கு அடிகோலிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைச் சங்கமத்தை முன்னின்று நடத்தியவர்.

1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சென்னை கலைக்குழுவில் இணைந்திருந்த ராமு அக்குழுவினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிலும் கவனம் பெறத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்தார். குறிப்பாக, பயணம் நாடகத்தில் அவர் ஏற்று நடித்த “நகரதேவன்” பாத்திரம் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியாய் இருந்தது.

இயக்குநர் சசியின் ‘பூ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி ‘பூ ராமு’வாகியவர் பரியேறும் பெருமாள், கர்ணன், நெடுநல்வாடை உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனி இடம் பிடித்தவர்.

ஆட்டோ ராமு, பூ ராமு, கருப்பு ராமு என நமக்குள் நிறைந்திருக்கும் தோழர் ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப்பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர் யாவரது துயரிலும் தமுஎகச மாநிலக்குழு பங்கெடுக்கிறது.

இப்படிக்கு,
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்(பொ)
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
28.06.2022

Celebrities condolence message to late actor Poo Ramu

பூதத்துடன் விளையாடும் குழந்தை.; 90 நிமிட கிராஃபிக்ஸ்.; பிரபுதேவா படத்திற்கு உதயநிதி பாராட்டு

பூதத்துடன் விளையாடும் குழந்தை.; 90 நிமிட கிராஃபிக்ஸ்.; பிரபுதேவா படத்திற்கு உதயநிதி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் N ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமான ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.

சமீபத்தில் திரைப்படத்தை சிறப்பு காட்சி ஒன்றில் பார்த்த முன்னணி நடிகர்-தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் ராகவனை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

‘மை டியர் பூதம்’ படத்தை தான் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததாகவும், திரைப்படத்தோடு உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிகிறது என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று உதயநிதி N ராகவனிடம் தெரிவித்துள்ளார்.

படத்தை பாராட்டிய உதயநிதிக்கு இயக்குநர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

ரஜினி அங்கிளுக்கு பிறகு பிரபுதேவா அங்கிள்..; ‘மஞ்சப்பை’ ராகவனின் ‘மை டியர் பூதம்’

மேலும், படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனலும், ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளன.

படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போல் இது அமைந்துள்ளது என்று குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன், அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இமான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரம் குகனேஷ், சாத்விக், சக்தி மற்றும் கேசிதா உள்ளிட்ட குழந்தை நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பூதத்துக்கும், பத்து வயதுக் குழந்தைக்குமான பிணைப்பும் பயணமும்தான் இந்தக் கதையின் முக்கியக் கரு என்று N ராகவன் கூறினார்.

குழந்தைகளுக்கான ஃபேண்டஸி வகையைச் சேர்ந்த இப்படம் குடும்பப் பார்வையாளர்களால் முழுமையாக ரசிக்கப்படும்” என்றார் அவர்.

குழந்தைகளுக்கான படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாக இருக்கும், எனது ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்று N ராகவன் கூறினார்.

இந்த படத்தில் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் சிஜி இருக்கும் என்றும், அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் N ராகவன் மேலும் கூறினார்.

“படத்தில் நகைச்சுவை மற்றும் இதர உணர்வுகள் சரியான கலவையில் இருக்கும். கதாபாத்திரத்திற்காக பிரபுதேவா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி கொண்டார். அவரது உடல் மொழியிலும் சிரிப்பை வரவழைத்துள்ளார்”, என்று அவர் மேலும் கூறினார்.

பிரபுதேவாவின் நடனத் திறமைக்கு ஏற்ற பாடல் உள்ளிட்ட ஐந்து வகைகளில் டி இமான் இப்படத்திற்கான பாடல்களை இசையமைத்துள்ளார். ‘மை டியர் பூதம்’ படத்தின் ஒளிப்பதிவை யு கே செந்தில் குமார் கையாள, படத்தொகுப்பை சான் லோகேஷ் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் ஏ ஆர் மோகன் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் சிறப்பான பங்காற்றி உள்ளனர். கலகலப்பான வசனங்களை தேவா எழுதியுள்ளார்.

பிரபுதேவா நடிக்கும் ‘மை டியர் பூதம்’ திரைப்படத்தை ரமேஷ் பி பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்க N ராகவன் இயக்கியுள்ளார்.

*Udhayanidhi Stalin appreciates Director N Ragavan after watching Prabhudeva, Ramya Nambeesan starrer ‘My Dear Bootham’, a kids fantasy movie*

தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தும் ‘நாற்கரப்போர்’.; நம்பிக்கையுடன் ‘கபாலி’ லிங்கேஷ்

தமிழ் சினிமாவில் அதிர்வலையை ஏற்படுத்தும் ‘நாற்கரப்போர்’.; நம்பிக்கையுடன் ‘கபாலி’ லிங்கேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர்.

தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர்.

இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள்.

தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றி இயக்கும் ‘நாற்கரப்போர்’ எனும் படத்தில் அபர்நதி கதையின் நாயகியாக நடிக்க , கதையின் நாயகனாக லிங்கேஷ் நடித்து வருகிறார்.

‘நாற்கரப்போர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும், தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை.

தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா உருவாக்கிக்கொண்டேதான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம்

நாற்கரப்போர் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.

இந்தப்படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும்” என்கிறார் லிங்கேஷ்.

‘Naarkarappor’ which resonates in Tamil cinema

மீண்டும் ‘சவரக்கத்தி’ கூட்டணி.; முதன்முறையாக இசையமைத்து நடிக்கும் மிஷ்கின்

மீண்டும் ‘சவரக்கத்தி’ கூட்டணி.; முதன்முறையாக இசையமைத்து நடிக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’.

இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர்.

மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.

மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

சவரக்கத்தி விமர்சனம்

வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக “டெவில்” மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது.

தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

கூடுதல் தகவல்..:

கடந்த 2018 பிப்ரவரியில் ரிலீசான ‘சவரக்கத்தி’ படத்தை ஜி ஆர் ஆதித்யா இயக்க, மிஸ்கின், ராம் மற்றும் பூர்ணா ஆகியோர் நடித்து இருந்தனர்.

‘Savarakathi’ combo again . Misskin, who is composing and acting for the first time

More Articles
Follows