BREAKING விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

BREAKING விஜய் – சூர்யா உடன் நடித்த ‘பூ’ ராமு திடீர் மரணம்.; அவரின் வாழ்க்கை குறிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவுக்கு அடித்தளமான நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ராம்.
இவரின் நாடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன.
இவரின் நாடகங்களை அறிந்து கொண்ட நடிகர் கமலஹாசன் ‘அன்பே சிவம்’ படத்தில் நாசருக்கு எதிராக வீதி நாடகங்களை போடுபவராக நடித்திருந்தார்.
அந்த காட்சிகளை வடிவமைத்துக் கொடுத்தவர் ராமு தான்.
இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘பூ’ படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ராம். அதன் பின்னர் இவரின் பெயருக்கு முன்னே பூ என்ற எழுத்தை சேர்த்து பூ ராம் என அழைக்கப்பட்டார்.
இந்தப் படத்தில் அப்பாவாக நடித்து இருந்த ராமு அவர்கள் “பூ ராமு” என்கிற அடையாளத்தை பெற்றார். “பூ” படத்திற்காக சிறந்த குணசித்திர நடிகர் (தமிழ் ஊடகங்கள் விருது) என்கிற விருதும் ராமு அவர்களுக்கு கிடைத்தது.
தங்க மீன்கள் படத்தில் கல்யாணி என்கிற மகனுக்கு ராமு அப்பாவாக நடித்து இருந்தார். “பூ” படத்தில் பேனா காரராக தொழிலாளியாக நடித்திருந்த “ராமு” இந்தப்படத்தில் நல்லாசிரியர் விருது வென்ற ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக நடித்திருந்தார்.
சீனு ராமசாமி இயக்கிய “நீர்ப் பறவை” படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் வசந்த் என்கிற பொறியியல் கல்லூரி மாணவனுக்கு, கிராமப்புறத்தில் வாழும் ஒரு அப்பாவாக நடித்து இருப்பார் ராமு.
இதில் கல்லூரி முதல்வர் சத்யராஜ் உங்கள் மகன் “கோழி மேய்ப்பதற்கு தான் லாய்க்கு..” என்று சொல்லிவிட  ராமு உடைந்து அழும் இடம் அவ்வளவு வலிகள் நிறைந்ததாக இருக்கும்.
இயக்குனர் ராமின் பேரன்பு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து செல்வார். மனநல வளர்ச்சி இல்லாத மகனுக்கு அப்பாவாக நடித்திருப்பார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து இருப்பார். “தான் வளர்ந்த விதத்தை சொல்லும் இடம் நிறைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய காட்சியில் நடித்து இருப்பார்.
இதைத்தொடர்ந்து “நெடுநல்வாடை” என்கிற சின்ன படத்தில் தாத்தாவாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் உயிரே நடிகர் ராமு தான் .
இந்த நெடுநல்வாடை” படத்தின் போஸ்டர்களில் கூட ஹீரோ ஹீரோயின்களின் படங்களை விட ராமு  படத்தை தான் முதன்மையாகவும், பெரிதாகவும் போட்டு விளம்பரப்படுத்தினர்.
சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார்.
இவர் நடித்த பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை, பேரன்பு, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை , சூரரைப்போற்று போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட படங்களாகும்.
தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்களில்  நடித்து இருந்தாலும் மீண்டும் பழையபடி தன்னுடைய பயணத்தை வீதி நாடகங்கள் மூலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எளிய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இன்றும் கூட தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் பூ ராமு.
இந்த நிலையில் இன்று ஜூன் 27 காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
ரஜினி இளையராஜா முருகதாஸ் அகியோரும் உருவ கேலிக்கு ஆளானவர்களே.. – மந்த்ரா வீரபாண்டியன்

ரஜினி இளையராஜா முருகதாஸ் அகியோரும் உருவ கேலிக்கு ஆளானவர்களே.. – மந்த்ரா வீரபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிக்கும் முதல் படம் காம்ப்ளக்ஸ்.
படத்தின் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் படத்தை பற்றி கூறியதாவது :

என் பெயர் மந்த்ரா வீரபாண்டியன். நான் பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சினிமா மீதான ஆர்வத்தில் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.

நிறைய குறும்படங்கள் இயக்கி இருக்கிறேன். இயக்குனர் பாலா சாரிடம்உதவி இயக்குனராக நாச்சியார் மற்றும் வர்மா ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.
அதன் பிறகு பெரிய தயாரிப்பு நிறுவனம் மற்றும் பெரிய நடிகருக்கு தான் படம் இயக்குவதாக இருந்தது. ஆனால், அதற்கிடையில் காம்ப்ளெக்ஸ் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆகையால், இதை முதலில் இயக்கி விடலாம் என்று இயக்கி முடித்து விட்டேன்.

இப்படத்தின் மையக்கரு உருவ கேலி செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் கதை. அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு. எல்லா காலகட்டத்திலும்  உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது.

இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் கூட வருகிறது. மேலும், இதை வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளே எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசி விட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும், உன்னை யாராவது உருவ கேலி செய்தால் அதை பொருட்படுத்தாமல் நீ வெற்றி பெற்று விட்டால் பிறகு உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று தவறான அறிவுரையும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது.

ஆகையால், உருவ கேலி செய்வது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேலி பேசுபவர்களுக்கு அறிவுரை கூறும் படமாக இருக்காது. மாறாக கேலிக்கு ஆளாகுபவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

இப்படம் இயக்கும்போது சமுதாயம் எனக்கு மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் கொடுத்தது. அது என்னவென்றால், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பது தான். முதலில் இப்படத்தை பெரிய நடிகரை வைத்து எடுத்தால் எல்லோரிடமும் சென்று சேரும் என்பதற்காக, பெரிய நடிகரை வைத்து இயக்க தான் திட்டமிட்டிருந்தேன். அதற்கு காலதாமதம் ஆகும் என்பதற்காக அந்த திட்டத்தை கைவிட்டேன்.

என் கதையில் உள்ள கேரக்டருக்கு பொருந்தக் கூடியவரை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்பதற்காக, உருவம் குறைவுள்ள மனிதரை வைத்து இயக்கி இருக்கிறேன்.

இந்த யோசனை கூட இயக்குனர் பாலா சாரிடம் நான் கற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில்தான் இப்படம் உருவாகியுள்ளது. மேலும், பாலா சாரிடம் முக்கியமாக நான் கற்றுக் கொண்டது மேக்கிங் டிஸிப்பிலின் தான். சில விஷயங்களை இப்படி தான் எடுக்க வேண்டும் என்றால் அப்படி தான் எடுப்பார். நானும் அதைப் பின்பற்றி தான் இயக்கியுள்ளேன்.

விருதுக்கான கலை படமாக இல்லாமல், மக்களுக்கான கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறேன்.

மேலும், உருவ கேலி என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது, உலகளாவிய அனைத்து இடங்களிலுமே உள்ளது. மற்ற சமுதாய பிரச்சனைகளை விட முக்கியமாக முதலில் பேச வேண்டிய பிரச்சனை இது தான். உருவ கேலி மட்டுமல்ல, அவர்கள் அணியும் உடைகளில் இருந்து அனைத்து விஷயங்களிலுமே இந்த கேலி இருக்கிறது.

உருவ கேலிக்கு ஆளானவர்கள் பலரை நேரடியாக நான் சந்தித்துப் பேசினேன். அந்நேரத்தில் அவர்களுக்கு ஏற்படும் மனவலி, வேதனை, அழுகை னு அவர்களோடு பேசியதில் தெரிந்து கொண்டேன். பிறகு இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பல புத்தகங்கள் படித்திருக்கிறேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதுபோன்ற விஷயங்களை தானே ஊக்குவிக்கிறார்கள் என்பதை ஆழமாக யோசிக்கும்போது, ஒருவர் குண்டாக இருக்கிறார் அல்லது ஒல்லியாக இருக்கிறார் என்றால் அவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தன்னுடைய உடலை குறைத்துக் கொள்ளலாம் அல்லது எடையை கூட்டிக் கொள்ளலாம்.

மற்றும் கருமை நிறத்தில் இருப்பவர்கள் தங்களை சிகப்பாக்கி கொள்ள சிகப்பழகு கிரீம் பூசிக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியின் இடையில் வரும் விளம்பரங்கள் தான் இதனை ஊக்குவிக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.

மக்களை உளவியல் ரீதியாக பயன்படுத்தி இதற்குப் பின் ஒரு பெரிய வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை முதல் மதிப்பெண் வாங்கும் வரை நானும் உருவ கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்.

இங்கு வெற்றி பெற்ற அனைவருமே ஒரு காலத்தில் உருவ கேலி செய்யப்பட்டவர்கள் தான். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, ஏ ஆர் ரகுமான், இயக்குனர் முருகதாஸ் ஆகிய வெற்றியாளர்கள் அவர்களின் சாதனைக்கும் உருவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

கதையின் நாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடிக்கிறார். நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர் நாச்சியார் படத்தில் ஜீவி பிரகாஷ் ஜோடியாக நடித்தவர்.

இவானாவிடம் கதையை கூறும்போது இரண்டு கதாபாத்திரங்கள் இருக்கின்றது. இதில் நீங்கள் விருப்பப்பட்டதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அக்கா பாத்திரத்தை தேர்வு செய்தார்.
அவர் வாழ்க்கையில் ஒன்றிய பாத்திரமது என்று கூறினார். ஆரத்யா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். எம்எஸ் பாஸ்கரின் கதாபாத்திரம் வேறு ஒரு அரசியல் பேசும்.
இப்படத்தில் அவர் ஞான தகப்பன் என்றே கூறலாம். இப்படம் மூலம் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும், பாவா செல்லதுரை நடித்திருக்கிறார். பாவா செல்லதுரை சாரை வாசகர் வட்டத்தில் தெரியாத ஆளே கிடையாது. இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால், மிக முக்கிய கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, ஆர்வத்துடன் நடித்து கொடுத்தார்.

குக்கு வித் கோமாளி சுதர்சன் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்தவர் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 80களில் இருந்த இளையராஜா ட்ரெண்டியாக இசையமைத்து இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. 4 பாடல்களுக்கும் நன்றாக வந்துருக்கிறது.

முழு படத்தையும் முடித்துவிட்டு தான் அவரிடம் சென்றேன். அவர் பார்த்துவிட்டு என்னுடைய இசைப்பயணத்தில் மிகச்சிறந்த படம் என்றால் அது இந்த படம்தான் என்றார். இந்த மாதிரி படங்களுக்கு இசையமைக்க தான் நான் சில காலம் ஒதுங்கி இருந்தேன் என்றும் கூறினார். பாடல்களும் பின்னணி இசையும் உணர்வுபூர்வமாக இருக்கும்.

பாடல்களை ஞானகரவேல், பாலா சீத்தாராமன் எழுதியுள்ளார்கள்,
படத்தொகுப்பை சதீஷ் சூர்யா செய்கிறார். மாய பாண்டியன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவு பர்வேஷ் செய்கிறார்.
இப்படத்திற்கென சில லென்ஸ்களை மும்பையில் இருந்து வர வைத்து உபயோகப் படுத்தியிருக்கிறோம். ஆகையால், இப்படத்தின் ஒளிப்பதிவு பெரிய அளவில் பேசப்படும்.

திருநெல்வேலி மற்றும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினோம். படப்பிடிப்பு முழுவதும் முடித்துவிட்டோம்.. மற்ற பணிகளை இன்னும் 50 நாட்களில் முடித்து விடுவோம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும்.

இவ்வாறு படத்தைப் பற்றி இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் கூறினார்.

மல டா.. மாஸ் காட்டும் ரஜினி.; 30 வருட ‘அண்ணாமலை’-யை கொண்டாடும் ரசிகர்கள்.; நடிகர்கள் அதிர்ச்சி

மல டா.. மாஸ் காட்டும் ரஜினி.; 30 வருட ‘அண்ணாமலை’-யை கொண்டாடும் ரசிகர்கள்.; நடிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீட்டின்போது அந்த படங்களின் டைட்டில் கார்டில் அவர்கள் பெயர் திரையில் வரும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளவில்லாமல் இருக்கும்.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு முதன்முதலாக தமிழ் சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டது ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை திரைப்படம் தான்.
சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஜூன் 27 -1992 வெளியான அண்ணாமலை திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்க கவிதாலயா சார்பாக கே பாலச்சந்தர் தயாரித்திருந்தார்.
தேவா இசையில் உருவான இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு சரத்பாபு ரேகா ஜனகராஜ் மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் முதல் பாதியில் ரஜினி  ஏழையாகவும் பின்னர் நண்பனின் துரோகத்தால் ஏழையாகி பின்னர் உழைப்பால் முன்னேறி பெரும் பணக்காரரான மாறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த படத்தில் சென்டிமென்ட் காமெடி ஆக்ஷன் பஞ்ச் வசனங்கள் என அனைத்தும் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் இன்று 30 வருட அண்ணாமலை கொண்டாடும் வகையில் நடிகர் ரஜினிகாந்தை இப்படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா சந்தித்து ஆசி பெற்றார்.
மேலும் இந்த முப்பது வருட விழாவை சிறப்பிக்கும் வகையில் ரஜினி ரசிகர்கள் சுரேஷ் கிருஷ்ணா சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இதே மாதத்தில் ஜூன் 15ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தின் 15 வருட நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உள்ளிட்டோர் ரஜினிகாந்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகி பல வருடங்களை கடந்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இது மற்ற நடிகர்களுக்கும் பல்வேறு அதிர்ச்சிகளைஏற்படுத்தி உள்ளது எனலாம்.
கிருஷ்ணராக மாறிய கிட்ஸ்.. தியேட்டரில் கடவுள் கட்-அவுட்.; மக்களிடையே மாற்றம் தந்த ‘மாயோன்’

கிருஷ்ணராக மாறிய கிட்ஸ்.. தியேட்டரில் கடவுள் கட்-அவுட்.; மக்களிடையே மாற்றம் தந்த ‘மாயோன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தைப் பற்றி திரையுலக ஆர்வலர்கள், ரசிகர்கள் என பலரும் நேர்மறையான விமர்சனங்களைத் தெரிவித்ததால், பொது விடுமுறை தினமான ஞாயிறன்று சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்திற்கு இப்படத்தைக் காண அதிகளவிலான ரசிகர்கள் சென்றனர்.
அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு அருகே சில குழந்தைகள் கிருஷ்ணனின் வேடத்தை அணிந்து, வருகைத்தந்த ரசிகர்களை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இது தொடர்பாக இப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் சிலர் பேசுகையில்…
“ விடுமுறை தினம் என்பதால் சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கத்தில் திரையிடப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படத்தைக் கண்டு ரசிக்க எங்கள் குடும்பத்துடன் வருகைத்தந்தோம்.
இங்கு வந்தபிறகு இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு சிலர் பாலாபிசேகம் செய்ததைப் பார்த்தோம்.
சில குழந்தைகள் கிருஷ்ணன் வேடமணிந்து கையில் புல்லாங்குழலுடன் அழகாக வரவேற்பு அளித்தனர். மறுபுறம் அன்னதானமும் நடைபெற்றது.
இதன் காரணத்தை அறிந்துக் கொள்வதற்காக அங்குள்ளவர்களுடன் பேசினோம். அப்போது தான் எங்களுக்கு  அன்று கிருஷ்ண பகவான் அவதரித்த நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திர தினம் என்றும், அதிலும் இந்த ரோஹிணி திரையரங்கத்தில் உள்ள கிருஷ்ண பகவானின் கட்அவுட்டிற்கு இது போன்று உற்சாகமான விழா நடைபெறுகிறது என்றும் அறிந்துக் கொண்டோம்.
 ‘மாயோன்’ திரைப்படத்தைக் காண வந்த எங்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்றார்.
‘மாயோன்’ படத்தினைப் பார்த்த ரசிர்களின் விமர்சனத்தால் ஈர்க்கப்பட்டு, அறிவியல், ஆன்மீகம், ஆலயம் என சுவராசியமான விசயங்களை மையமாகக் கொண்டு, பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைக் காண வருகைத்தந்த எங்களை, அந்த கிருஷ்ண பகவானே வரவேற்பு கொடுத்தது போலிருந்தது. என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பொதுவாக ‘அம்மன்’ படங்களுக்குத்தான் படக்குழுவினர் பிரம்மாண்டமான அளவில் அம்மனின் சிலைகளை வைத்து, ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்வார்கள்.
ஆனால் கிருஷ்ண பகவானைப் பற்றிய படத்திற்கு சிறார்கள் கிருஷ்ண வேடமணிந்து வரவேற்பு அளித்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணனின் கட்அவுட்டிற்கு பாலாபிசேகம் செய்யப்பட்டது பார்வையாளர்களை மட்டுமல்ல திரையுலகினரையும் ஆச்சரியப்படுத்தியது.
தனுஷ்-அனிருத் இணைந்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ பட பாடலுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தனுஷ்-அனிருத் இணைந்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ பட பாடலுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவான படம் ‘திருச்சிற்றம்பலம்’.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

இதில் தனுஷுடன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘தாய்க்கிழவி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இந்தப் பாடலை எழுதி பாடி உள்ளார்.

இந்த நிலையில் இந்த பாடலின் வரிகளுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

அதில்…

“வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய் தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் #கிழவி #தாய்க்கிழவி எனும் தரக்குறைவான வரிகளைக் கொண்டு #திருச்சிற்றம்பலம் படத்திற்காக பாடல் எழுதி பாடி தவறான முன்னுதாரணமாகியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள அந்த பாடலில் வரும் கிழவி, தாய்க்கிழவி எனும் வரிகளை உடனடியாக நீக்கி விட்டு பாடலை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
26.06.2022 / பிற்பகல் 1.40மணி.

Milk vendors association against to Thiruchitrambalam song

கேஎஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இணையும் லாரன்ஸ் & எல்வின்

கேஎஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இணையும் லாரன்ஸ் & எல்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிக்கு முத்து படையப்பா உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கேஎஸ். ரவிக்குமார்.

கமல்ஹாசனுக்கு தெனாலி பஞ்சதந்திரம் தசாவதாரம், அஜித்துக்கு வில்லன் வரலாறு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கேஎஸ் ரவிக்குமார்.

மேலும் சரத்குமாருக்கு நாட்டாமை, சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் சமீபகாலமாக படங்களை இயக்காமல் மற்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் கூகுள் கூட்டப்பா, மாயோன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் படங்களை இயக்க ரெடியாகிவிட்டார் கேஎஸ் ரவிக்குமார்.

இவரின் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் லாரன்ஸின் தம்பி எல்வின் இணைந்து நடிக்கின்றனர்.

ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (ஜூன் 25) துவங்கியது.

இப்பட பூஜையில் ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கூடுதல் தகவல் :

சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா மற்றும் ருத்ரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் லாரன்ஸ்.

இதில் ருத்ரன் படம் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீசாக உள்ளது.

டிரைடன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இந்தப் படம் அவர்களின் 13வது படமாகும்.

Lawrence & Elvin to join KS Ravikumar’s next film

More Articles
Follows