அஜித்-சூர்யாவுடன் நடிக்க காத்திருக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரில்..?

அஜித்-சூர்யாவுடன் நடிக்க காத்திருக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரில்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jimikki Kammal dance fame Sherlin wish to act in Tamil Cinemas

தமிழக மக்களை தற்போது பல சம்பவங்கள் ஆட்டுவித்து வந்தாலும், உற்சாகமாக ஆடவைத்த பாடல் ‘ஜிமிக்கி கம்மல்’.

மோகன்லால் நடித்த வெளிப்பாண்டிடே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்சஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டனர்.

தற்போது அது வைரலாகி ஒரு கோடி பார்வையாளர்களை தொடவுள்ளது.

இதில் ஆடிய கல்லூரி பேராசிரியை ஷெரில் தமிழகத்திலும் படு பாப்புலராகிவிட்டார்.

தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து அவர் கூறும்போது.. “இதனை நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்க ரெடிதான்.

ஆனால் வீட்டில் ஓகே சொல்வார்களா? என்பதுதான் தெரியவில்லை.

தமிழில் எனக்குப் பிடித்த நடிகர்கள் அஜித், சூர்யாதான். சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Jimikki Kammal dance fame Sherlin wish to act in Tamil Cinemas

ரஜினியை தாக்கி தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்திய விஷால்

ரஜினியை தாக்கி தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்திய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wont pointout God If i wish i will enter in politics says Vishalமிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’.

இப்படம் நாளை மறுநாள் செப்டம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படம் குறித்த புரோமோசன் நிகழ்ச்சியில் பேசினார் விஷால்.

அப்போது அரசியல் பற்றி பேசினார். மேலும் மற்றவர்களைப் போல் கடவுள் ஆசைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என கூறமாட்டேன் என மறைமுகமாக ரஜினியை தாக்கி பேசினார்.

அதன் விவரம் வருமாறு…

மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

மற்றவர்கள் போல, கடவுள் ஆசைப்பட்டால் வருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நேரடியாகச் சொல்கிறேன், தேவை ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன். அதில் எந்தத் தவறும் இல்லை.

அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்தால் ஏன் என்னைப் போன்ற நடிகர்களை அரசியலுக்கு அழைக்கப் போகிறார்கள்? என்றார்.

மேலும் பேசுகையில்….

ரேஷன் கார்ட், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மீண்டும் இலவசங்களை கொடுத்து ஓட்டுக்கள் வாங்கிவிடலாம் என யாரும் நினைக்கமுடியாது. அதற்கான வாய்ப்பு இப்போது குறைந்துள்ளது.” இவ்வாறு விஷால் பேசினார்.

I wont point out God If i wish i will enter in politics says Vishal

விஜய்-தனுஷ்-மகேஷ்பாபு படங்களை வாங்கியது சன் டிவி

விஜய்-தனுஷ்-மகேஷ்பாபு படங்களை வாங்கியது சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun TV bagged satellite rights of Theri VIP2 Spyder moviesஅட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி, நைனிகா நடித்த படம் தெறி.

தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த இப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அண்மையில் வெளியான தனுஷ் நடித்த விஐபி2 படத்தின் உரிமையையும் சன் டிவி வாங்கியுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தின் சாட்டிலைட் உரிமையையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஸ்பைடர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை சன்டிவி நேரலையாக ஒளிப்பரப்பியது குறிப்பிடத்தக்கது.

Sun TV bagged satellite rights of Theri VIP2 Spyder movies

இருட்டு அறையில் முரட்டுக் குத்து; மீண்டும் A படத்தில் கவுதம் கார்த்தி.?

இருட்டு அறையில் முரட்டுக் குத்து; மீண்டும் A படத்தில் கவுதம் கார்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautam Karthik next movie titled Iruttu Araiyil Murattu Kuthuசந்தோஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஹரஹர மஹாதேவகி’.

இதில் கௌதம் கார்த்திக், நிக்கிகல்ராணி, கருணாகரன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இளைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் ட்ரைலர் முழுவதும் டபுள் மீனிங்கில் இருந்தது.

ஆனால் எல்லா தரப்பு மக்களும் இப்படத்தை பார்க்கலாம் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ள படத்திற்கு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என பெயரிட்டு உள்ளனர்.

இதுவும் ஒரு அடல்ட் ஒன்லி படமாக இருக்குமோ? என் சந்தேகத்தை தலைப்பு ஏற்படுத்துகிறது.

சந்தோஷ் இயக்க, கௌதம் கார்த்திக் நடிக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Gautam Karthik next movie titled Iruttu Araiyil Murattu Kuthu

விஜய்சேதுபதியின் படத்தலைப்பும் திருநங்கை லுக்கும் வெளியானது

விஜய்சேதுபதியின் படத்தலைப்பும் திருநங்கை லுக்கும் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Transwoman getup movie titled Super Deluxe

ஆரண்ய காண்டம்’ என்ற வித்தியாசனமான படத்தை கொடுத்திது ரசிகர்களின் ஆதரவை பெற்றாலும் அதன்பின் அடுத்த படத்தை தொடங்காமல் இருந்தார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார்.

பி.எஸ்.வினோத் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
‘அநீதி கதைகள்’ என இப்படத்துக்கு பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், தற்போது ’சூப்பர் டீலக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஷில்பா என்ற திருநங்கை கேரக்டரில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
தற்போது அந்த கேரக்டர் லுக்கும் வெளியாகியுள்ளது.

Vijay Sethupathis Transwoman getup movie titled Super Deluxe

ஏஆர்.ரஹ்மானின் வெள்ளிவிழாவை கௌரவிக்கும் ஆந்திரா அரசு

ஏஆர்.ரஹ்மானின் வெள்ளிவிழாவை கௌரவிக்கும் ஆந்திரா அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhra Govt plans Silver Jubilee celebration for AR Rahman25 ஆண்டுகளுக்கு முன்னர் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏஆர். ரஹ்மான்.

இந்தியளவில் பல விருதுகளை வென்றுள்ள ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவிற்கு பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் இவரது 25 ஆண்டு வெள்ளிவிழா இசை பயணத்தை கௌரவிக்க ஆந்திரா அரசு முடிவுசெய்துள்ளது.

அதன்படி காக்கிநாடாவில் வெள்ளி விழா நடத்த, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்காக, 2 கோடி ரூபாய் செலவில் மேடை அமைக்கப்பட உள்ளதாம். இந்நிகழ்ச்சி அக்டோபர் 28 அல்லது டிசம்பர் 23ல் நடைபெறும் என கூறப்படுகிறது.

இவ்விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் 3 மணி நேரம் இசை கச்சேரி ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அவருடன் 50 இசை கலைஞர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதற்காக ஆன்லைனில் சில போட்டிகளையும் நடத்தவிருக்கிறார்களாம்.

Andhra Govt plans Silver Jubilee celebration for AR Rahman

More Articles
Follows