சர்வதேச தரத்தில் பாடகர் சித்ஸ்ரீராமின் இன்னிசை.: நீங்களும் ஆடி பாடலாம்.; மக்களே ரெடியா.?

சர்வதேச தரத்தில் பாடகர் சித்ஸ்ரீராமின் இன்னிசை.: நீங்களும் ஆடி பாடலாம்.; மக்களே ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகர் சித் ஸ்ரீராம்.

இவரின் இன்னிசை நிகழ்ச்சி நாளை நவம்பர் 27 கோவை மாநகரில் நடைபெற உள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சித்ஸ்ரீராமின் இசை குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இது சர்வதேச நிகழ்ச்சிக்கு நிகராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒலி & ஒளியமைப்புகளும் மேடை அலங்காரங்களும்பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரசிகர்கள் நின்று பாடி ஆடும் ‘பேன் பிட்’ மேடையும் இடம்பெறுகிறதாம்.

10,000 முதல் 12,000 பேர் வரை இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நிகில் சித்தார்த்தா படத்தில் இணைந்த சிம்பு .. முழு விவரம் உள்ளே !

நிகில் சித்தார்த்தா படத்தில் இணைந்த சிம்பு .. முழு விவரம் உள்ளே !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிகில் சித்தார்த்தாவின் ’18 பேஜஸ்’ டிசம்பர் 23 அன்று திரைக்கு வருகிறது.

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்தை சூர்யா பிரதாப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு பெப்பி பாடலை பாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘டைம் இவ்வு பில்லா’ என்ற தலைப்பில் பாடல் “இது ஒரு எனர்ஜி மிக்க பாடலாக இருக்கும்” என்று ஒரு ஆதாரம் கூறுகிறது.

இசையமைப்பாளர் கோபி சுந்தரின் டியூன் ஹைலைட்டாக இருக்கும்.

டைம் இவ்வு பில்லா பாடல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

ராஷ்மிகா படத்தை எதிர்க்கும் கன்னட திரையுலகம் .. வாரிசு ரிலீசில் புதிய சிக்கல் ?

ராஷ்மிகா படத்தை எதிர்க்கும் கன்னட திரையுலகம் .. வாரிசு ரிலீசில் புதிய சிக்கல் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஷ்மிகா தனது அறிமுகத்தைப் பற்றி பேசும்படி ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டார்.

புரொடக்ஷன் ஹவுஸின் பெயரை கூறாமல் , ராஷ்மிகா தனது கைகளால் ‘மேற்கோள் சைகை’ செய்யும் போது, ​​“இந்த புரொடக்ஷன் ஹவுஸிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது” என்றார்.

இதைத் தொடர்ந்து, பார்வையாளர்களில் சிலர் அவரது அணுகுமுறை நன்றியற்றதாகவும், திமிர்பிடித்ததாகவும்
இருப்பதாகவும் உணர்ந்தனர்.

இப்போது, ​​கன்னட திரையரங்கு உரிமையாளர்கள் ராஷ்மிகா மீது வெறுப்படைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவரின் புஷ்பா 2, வாரிசு படங்களை கர்நாடகாவில் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் ரஜினி படம் எப்போ.? ஷங்கருடன் இணைவது உறுதியா.? – கார்த்திக் சுப்பராஜ்

மீண்டும் ரஜினி படம் எப்போ.? ஷங்கருடன் இணைவது உறுதியா.? – கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு கீர்த்தி, புகழ், சிங்கம் புலி, விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிஎஸ்பி’.

இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வந்த கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது….

“நான் இப்போது ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கிய வருகிறேன்.

தலைவர் ரஜினி என் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ரெடி என்றால் நான் அவருக்கான கதையை உருவாக்குவேன். தற்போது எதுவும் முடிவாகவில்லை.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது இயக்குனர் சங்கர் படம் தயாரிக்க ஏதாவது கதை இருக்கா? என்று கேட்டிருந்தார்.

கதை ரெடியானதும் சந்திப்பேன்”.

இவ்வாறு கார்த்தி சுப்புராஜ் தெரிவித்தார்.

Karthik Subbaraj talks about Rajini and Shankar Project

இருமலுக்கே இப்படியா.? உங்க அன்பும்.. ஊடகமும் தான் காரணம்… – கமல்ஹாசன்

இருமலுக்கே இப்படியா.? உங்க அன்பும்.. ஊடகமும் தான் காரணம்… – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் உடல் நலக் குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன்.

இதன்பின்னர் மருத்துவர்கள் தரப்பில் அறிக்கை வெளியானது. கமல் ஓரிரு நாட்களில் வீடு திரும்பவார் என கூறப்பட்டது.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் நவம்பர் 25ஆம் தேதி மாலை டிஎஸ்பி பட விழாவில் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதில் அளிக்கும் போது கமல்ஹாசன் பேசியதாவது..

“நான் நலமாக இருக்கிறேன்.

முன்பெல்லாம் எனக்கு பெரிய விபத்து நடந்த போதுகூட அடுத்தப் படம் எப்போது என்று கேட்பார்கள்.

ஆனால் இப்போது சின்ன இருமல் வந்தால்கூட என்னை பற்றி பெரிய செய்திகள் வருகிறது.

அதற்கு காரணம்.. உங்க ஊடகம், பெருகிவரும் அன்பு என்றே நினைக்கிறேன்.

இந்தியன் 2 படத்துக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்துள்ளது” என தெரிவித்தார் கமல்ஹாசன்.

Kamal Haasan met the media at DSP Audio event

JUST IN அந்தமாதிரி படமெடுக்க 365 இயக்குனர்கள் இருக்காங்க.; விஜய்சேதுபதியை விரட்டிய மிஷ்கின்

JUST IN அந்தமாதிரி படமெடுக்க 365 இயக்குனர்கள் இருக்காங்க.; விஜய்சேதுபதியை விரட்டிய மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனு கீர்த்தி, புகழ், சிங்கம் புலி, விமல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டிஎஸ்பி’.

இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.

இந்த படம் டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது…

“கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே நல்லா இரும்மா.. என்ற பாடலை தான் நான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் உதவி இயக்குனர்கள் கூட இதைப் பற்றி அடிக்கடி என்னிடம் கேட்பார்கள்.. அந்த அளவுக்கு அந்த பாடல் எனக்கு பிடித்து விட்டது.

இந்த டிஎஸ்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அதில் இரண்டு மூன்று விக்ரம் இருப்பதை போல உணர்ந்தேன்.

10-15 வருடங்களுக்கு முன்பு என்னுடைய இயக்கத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார் விஜய்சேதுபதி. அப்போது அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் இன்று அவர் மிகப்பெரிய உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

இதனிடையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர் ஜே விஜய்.. ‘நீங்கள் காமெடி படம் எடுப்பீர்களா என்று மிஷ்கினிடம் கேட்டார்..

“அதற்கு நான் நகைச்சுவை உணர்வு நிறைந்தவன் தான். ஆனால் எனக்கு அந்த மாதிரி படம் எடுக்க தெரியாது.

நான் வன்முறையாளன் அல்ல. ஆனால் என்னுடைய படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கும்.

நான் சாப்பிடும் மேசையில் கூட ஒரு தலை இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

என்னால் அது போன்ற படங்கள் தான் எடுக்க முடியும் நீங்கள் எதிர்பார்க்கும் படங்களைப் போல எடுக்க 365 இயக்குனர்கள் இருக்கிறார்கள்” என்று மிஷ்கின் பேசினார்.

Mysskin speech at DSP movie Audio launch

More Articles
Follows