பெயரை மாற்றி ‘மாயநதி’ படத்திற்கு இசையமைத்த பவதாரிணி

singer bavatharini‛மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்,

‛பாரதி’ படத்திற்காக சிறந்த பாடகி தேசிய விருது பெற்றவர் இளையராஜாவின் மகள் பவதாரிணி.

நடிகை ரேவதி இயக்கிய ‛மித்ரு மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையும் அமைத்தார்.

அதன் பின்னர் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் வந்தார்.

கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் பணிபுரியவில்லை.

தற்போது ‛மாயநதி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இசையமைப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அசோக் தியாகராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் அபி சரவணன், மற்றும் வெண்பா ஜோடியாக நடித்துள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய பவதாரிணி இசையமைத்துள்ளார்.

தற்போது தன் பெயருக்கு முன்னால் ராஜா என்ற பெயரை சேர்த்துள்ளார்.

Overall Rating : Not available

Related News

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும்…
...Read More

Latest Post