சிவன்-எமன் மோதும் மிரட்டலான ‘மாயன்’..; உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் வீடியோ

சிவன்-எமன் மோதும் மிரட்டலான ‘மாயன்’..; உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் வீடியோ

பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம் எலிபண்ட் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மாயன்’.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், மாயன் படக்குழுவினர் இன்று இப்படத்தின் கதாபாத்திரங்களை மோஷன் போஸ்டராக லஹரி மற்றும் டி-சீரிஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் வினோத் மோகன் – ஆதி சிவனாகவும், ஜான் விஜய் – எமதர்ம சக்கரவர்த்தியாகவும் மற்றும் சாய் தீனா – வீரா சூரனாகவும் வரைகலை வடிவில் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவே உலகத்தின் முதல் கேரக்டர் இன்ட்ரொடக்‌ஷன் இல்லுஸ்ட்ரேட்டட் மோஷன் போஸ்டர் என்று படக்குழுவினர் சார்பில் பதிவிட்டுள்ளனர்.

இந்த மோஷன் போஸ்டர் இப்படத்தின் மீதான ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.

நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க…

Here is #Mayan character motion poster !!!

சார்பட்டா பரம்பரை-யை வாங்கிய கலைஞர் பரம்பரை

சார்பட்டா பரம்பரை-யை வாங்கிய கலைஞர் பரம்பரை

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

முரளி ஜி ஓளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆனாலும் திமுக கட்சிக்கு ஆதரவாக நிறைய காட்சிகள் உள்ளன எனவும் சர்ச்சைகளும் எழுந்தன.

தற்போது ஊரடங்கிற்கு பிறகு இந்த படத்தை தியேட்டர்களிலும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். எனவே தியேட்டர்களில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கலாம்.

இந்த நிலையில், இந்த படத்தின் டிவி சேட்லைட் உரிமையை கலைஞர் டிவி பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளது.

இந்த சேட்டிலைட் உரிமை தகவலை நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டினம் படங்களின் ஒளிபரப்பு சேட்லைட் உரிமையையும் கலைஞர் டிவி வாங்கியுள்ளது என்பதையும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆதரவு படத்தை கலைஞர் டிவி வாங்கியுள்ளது எனவும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டதால் இனி படங்களின் டிவி உரிமை கலைஞர் டிவிக்கே செல்லும் எனவும் கமெண்ட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

Sarpatta Parambarai satellite rights bagged by Kalaignar TV for a huge price

வாத்தியாரே பாக்சிங் விட ரத்த பூமி இது.; பசுபதிக்கு ஆர்யா கொடுத்த வார்னிங் ஏன்.?

வாத்தியாரே பாக்சிங் விட ரத்த பூமி இது.; பசுபதிக்கு ஆர்யா கொடுத்த வார்னிங் ஏன்.?

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளிவெங்கட் என பலரும் நடித்து ஓடிடியில் ரிலீசான படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இந்த படத்திற்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைத்தது.

எனவே குறைவே இல்லாமல் பல மீம்ஸ்கள் வெளியானது.

முக்கியமாக படத்தில் ஒரு காட்சியில் பசுபதியை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஆர்யா செல்வார்.

அந்த காட்சி அதிகளவில் பிரபலமாக மீம்ஸ் வந்து வண்ணம் உள்ளன.

அந்த காட்சியை பதிவிட்டு பசுபதியை ட்விட்டருக்கு வரவேற்றுள்ளார் ஆர்யா.

ஆர்யா பசுபதியின் உண்மையான டுவிட்டர் கணக்கைப் பகிர்ந்து…

“வாத்தியாரே இதான் டுவிட்டர் வாத்தியாரே, பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நெறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஒரிஜனல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசுதான்.

வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்,” என சுவாரசியமாக பதிவிட்டுள்ளார்.

Vaathiyare Idhaan Twitter Vaathiyarey. boxing eh vida rattha boomi ?? unnoda peru la inga neraya peru irukaanganu therinjadhum original naathaanda nu ulla vandha paathiya. un mansey mansu dhaan. Vaa vaathiyare indha word ulla polam

this is the Official handle @PasupathyMasi https://t.co/Mzh4aEfQbh

இதற்கு பசுபதியின் பதில் இதோ…

Amam.. kabila, boxinge ulagamnu irunthutten, parambaraikku onnuna modha aala vandhuruven,naan vun cycle laye pinnadi okkandhukiren, enna ella edathukkum kootikinu po

இவர்களுக்கு காளி வெங்கட் அளித்துள்ள பதில் இதோ…

இன்னா வாதியார்,ஒரிஜினல் id ய கிரியேட்பண்ணி ,fake id லாம் close பண்ணி, நம்ப account அ verify பண்ணி, நம்பள tag பண்றவங்களுக்கெல்லாம் like போட்டு,daily ஒரு post போட்டு,இங்க நடக்குற பஞ்சாயத்துலலாம் தப்ச்சு,RTபண்ணி,mention பண்ணி @arya_offl சார்லாம்tweet போட்டு இப்டி வந்து நின்னா? ????‍♂️

Actor Arya welcomes Pasupathy to twitter world in a funny way

‘கன்னி மாடம்’ வளினா & ‘திரெளபதி’ காயத்ரிக்கு ‘கம்பெனி’ கொடுக்கும் ‘கோலி சோடா’ பாண்டி

‘கன்னி மாடம்’ வளினா & ‘திரெளபதி’ காயத்ரிக்கு ‘கம்பெனி’ கொடுக்கும் ‘கோலி சோடா’ பாண்டி

தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத கதைக் களத்தோடு உருவாகியுள்ள படம் ‘கம்பெனி’.

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பேருந்துகளின் முழு வடிவமைப்பு தொழிற்சாலை ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக
வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தங்கராஜு இயக்க, ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் சார்பில் ஆர்.முருகேசன் மிகப்பெரிய பொருட்
செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகர்களாக ‘கோலி சோடா’ புகழ் பாண்டி, முருகேசன் மற்றும் அறிமுக நடிகர்கள் தெரிஷ் குமார், பிரித்வி ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.

நாயகிகளாக ‘கன்னி மாடம்’ படத்தில் நடித்த வளினா மற்றும் ‘திரெளபதி’ படத்தில் நடித்த காயத்ரி ஆகியோர்
நடித்திருக்கிறார்கள்.

பஸ்களை முழுமையாக வடிவமைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்யும் நண்பர்களான நான்கு இளைஞர்கள், ஒரு லட்சியத்தோடு
பயணிக்கிறார்கள்.

அவர்களுடைய அந்த லட்சிய பயணத்தில் வரும் பிரச்சனைகளும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்,
என்பது தான் படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை மையமாக இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதோடு, இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத பஸ்
பாடிபில்டிங் தொழிற்சாலையையும், அதன் பணிகளையும் படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவே இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளாராம்.
அந்த காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருப்பதோடு ரசிக்கும்படியும் வந்திருக்கிறதாம்.

படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நான்கு இளைஞர்களில் ஒருவரான அறிமுக நடிகர் தெரிஷ் குமார்,
சண்டைக்காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் ரியலாக நடித்தாராம்.

ஒரு சண்டைக்காட்சியில் மிக உயரமான இடத்தில் இருந்து தெரிஷ்
குமார் கீழே விழுவதுபோன்ற காட்சியை படமாக்க முடிவு செய்த படக்குழு, அந்த காட்சியை டூப் போட்டு எடுக்க முடிவு செய்ய, நடிகர்
தெரிஷ் குமாரோ, டூப் வேண்டாம், நானே நடிக்கிறேன், என்று கூறி ரியலாக குதித்தாராம். ஆனால், எதிர்பாரத விதமாக அவர் பாதுகாப்பு
வளைத்தை தாண்டி விழுந்ததால், அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அங்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பிறகு சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட தெரிஷ் குமார்,
அதேபோல் ரியலாக சண்டைக்காட்சிகளில் நடிக்க, அவரை பார்த்து ஸ்டண்ட் மாஸ்டர் மிரண்டு போய் விட்டாராம்.

சண்டைக்காட்சிகளில் மட்டும் இன்றி நடிப்பிலும் படக்குழுவினரை மிரள வைத்திருக்கும் தெரிஷ் குமாரின் நடிப்பை பார்க்கும் போது,
அவருக்கு இது தான் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார், என்று ஒட்டு மொத்த
படக்குழுவே அவரை பாராட்டுகிறது.

தெரிஷ் குமாருடன் மற்ற மூன்று பேரும் அவர் அவர் கதாப்பாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கராத்தே
வெங்கடேஷ், ரமா, சேலம் ஆர்.ஆர். பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில்
நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும் இசையமைப்பாளர் ஜுபினின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக
அமைந்திருக்கிறது.

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜுபின் நிச்சயம் பாராட்டு பெறுவார், என்று இயக்குநர் தங்கராஜு நம்பிக்கை
தெரிவித்துள்ளார்.

செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை ஜி.சசிகுமார் கவனிக்கிறார்.

மிராக்கல் மைக்கேல்
சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பெஞ்சமின் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். எம்.ஜி.பஞ்சாட்சரம் இணை தயாரிப்பு பணியை
கவனிக்கிறார்.

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி
வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்க உள்ள படக்குழு திரையரங்குகளில் படத்தை
வெளியிட திட்டமிட்டுள்ளது.

Goli Soda Pandi’s new film is titled Company

இளவரசே.. நீங்கள் அதற்குள் விடை பெற்றுக் கொள்ள முடியாது.; ஜெயம் ரவி & கார்த்தியின் ட்விட்டர் ட்விஸ்ட்

இளவரசே.. நீங்கள் அதற்குள் விடை பெற்றுக் கொள்ள முடியாது.; ஜெயம் ரவி & கார்த்தியின் ட்விட்டர் ட்விஸ்ட்

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான #பொன்னியின்செல்வன் படபிடிப்பு குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளார்கள்.

நேற்று, #பொன்னியின்செல்வன் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ஜெயம் ரவி,
“பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன்.

மணிரத்தினம் சாரின் காமெடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன்.

இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்”.. என்று ரவி டிவிட் செய்து இருந்தார் ஜெயம் ரவி.

இதை படித்த கார்த்தி,

“இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது .

இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம்.
– வந்தியத்தேவன் ” என்று
கார்த்தி டிவிட் செய்து , #பொன்னியின்செல்வன் படத்தில் தனது கேரக்டர் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார்.

இப்படி கார்த்தி டிவிட் செய்ததை ரசிகர்கள் ரசித்து கொண்டாடுகிறார்கள்.

Actor Karthi confirms that he’s playing Vandhiyathevan in Ponniyin Selvan in funny tweet to Jayam Ravi

நடிகை ரோகிணியின் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த சசிகுமார்

நடிகை ரோகிணியின் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த சசிகுமார்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள ‘3சி சென்னை கார்ஸ் கேர்’ எனும் கார் கேர் நிறுவனத்தின் இரண்டாவது கிளையை நடிகர் சசிகுமார் இன்று திறந்து வைத்தார்.

மேலும் ரோபோ சங்கர், நடிகர்கள் ஹரிஷ் & கயல் தேவராஜ், இயக்குநர் மோகன் ஜி , இசையமைப்பாளர் ஜூபீன், நடிகை ரேகா நாயர், விஜய் டிவி அஸார் & நவீன், ஆதித்யா டிவி அகல்யா மற்றும் பாரதிய ஜனதா அறிவுசார் பிரிவு தலைவர் ஜோதிடர் ஷெல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகுமார்,

“ரோகிணி எனக்கு நீண்ட நாள் நண்பர். அவரின் இந்த முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. இவர் மேலும் பல கிளைகளை தொடங்கி வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.

பின்னர் நிறுவனர் ரோகிணி பேசும் போது, சசிகுமார் அண்ணன் வந்து திறந்து வைத்து வாழ்த்தியதற்கு நன்றி.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தனது வழக்கமான வேலையுடன் கூடுதல் வருமானம் வரும் மற்றொரு தொழிலை செய்ய வேண்டும்.

அப்படி யோசித்து தான் கடந்த வருடம் எனது இந்த கார் கேர் நிறுவனத்தை அண்ணன் விஜய் சேதுபதி அவர்களை வைத்து துவங்கினேன்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கிளையை துவங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வந்திருந்து வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர் களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.

Grand Opening of Chennai Cars Care to be Inaugurated by Actor SasiKumar

More Articles
Follows