நடிகை ராஷ்மிகா மீது செம கிரஷ்: தாராள பிரபுவின் தாராள வார்த்தை

நடிகை ராஷ்மிகா மீது செம கிரஷ்: தாராள பிரபுவின் தாராள வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

harish kalyanராஷ்மிகா மந்தனா… இந்த பெயரை கேட்டாலே தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இங்கும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இவர் போட்டோக்கள் இணையத்தில் வெளியானாலே தென்னிந்திய ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஷ்மிகா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களுடன் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.‘

ஒரு நடிகர் இப்படி ஓபனாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படம் அண்மையில் வெளியானது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் படத்தின் திரையிடல் நின்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா விலக இதுதான் காரணம்..; சீக்ரெட்டை உடைத்த சிரஞ்சீவி

த்ரிஷா விலக இதுதான் காரணம்..; சீக்ரெட்டை உடைத்த சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha Chiranjeeviகொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

இதில் நாயகியாக முதலில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து விலகினார்.

தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் இதில் நாயகியாக இணைந்துள்ளார்.

இந்த நிலையில் த்ரிஷா ஏன் விலகினார்? என்ற சீக்ரெட்டை உடைத்துள்ளார் சிரஞ்சீவி.

“மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா மொத்தமாக கால்ஷீட் கொடுத்து விட்டதால் ‘ஆச்சார்யா’ படத்திலிருந்து விலகி விட்டார்.

மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை” என கூறியுள்ளார் சிரஞ்சீவி.

கொரானா நிவாரண நிதிக்கு ரூ 3 கோடியை வாரி வழங்கிய லாரன்ஸ்

கொரானா நிவாரண நிதிக்கு ரூ 3 கோடியை வாரி வழங்கிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrence donates Rs 3 crore to Covid 19 relief fundசினிமாவில் மட்டுமே சிலர் ஹீரோக்களாக வாழும் தருணத்தில் நிஜத்திலும் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

இவர் எண்ணற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து தன் அறக்கட்டளை சார்பில் வளர்த்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை என்கிற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வருகிறார்.

பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் உதவி வருகிறார். அவர்களின் சிகிச்சைக்கும் லட்சங்களை செலவு செய்து வருகிறார்.

மேலும் ஏழைகள் வீடு கட்டவும், வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் தனது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா நிவாரண தொகையாக 3 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்.

– பிரதமரின் PM Cares நிதிக்கு 50 லட்சம் ரூபாய்
– முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்
– FEFSI சங்கத்திற்கு 50 லட்சம் ருபாய்
– நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய்
– மாற்று திறனாளிகளுக்கு உதவ 25 லட்சம் ரூபாய்
– ராயபுரம் பகுதியில் உள்ள தினகூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் ருபாய்

என மொத்தமாக 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதை அறிவித்துள்ளார். இந்த 3 கோடி ரூபாய் சந்திரமுகி 2 பட அட்வான்ஸ் தொகை எனவும் கூறப்படுகிறது.

Lawrence donates Rs 3 crore to Covid 19 relief fund

கொரோனா நிவாரண நிதி..: சன் குழுமம் 10 கோடி; ஏஜிஎஸ் 50 லட்சம்

கொரோனா நிவாரண நிதி..: சன் குழுமம் 10 கோடி; ஏஜிஎஸ் 50 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SUN network and AGS donation for Corona relief fund கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய அரசுக்கு உதவும் விதமாக இங்குள்ள பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர்களில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் சன் டி.வி குழுத்தின் 6 ஆயிரம் பணியாளிரின் ஒருநாள் ஊதியமும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிபுரிந்து வரும் தன்னார்வ அமைப்புகளுடன் சன் குழுமம் பணியாற்றும் என்றும் திரைத்துறை, தொலைக்காட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கும் சன் டிவி குழுமம் நிதியுதவி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

மேலும் 15 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது ஏஜிஎஸ்.

SUN network and AGS donation for Corona relief fund

BREAKING ரஜினி ஆசியுடன் ‘சந்திரமுகி-2’; பி. வாசு & லாரன்ஸ் கூட்டணி

BREAKING ரஜினி ஆசியுடன் ‘சந்திரமுகி-2’; பி. வாசு & லாரன்ஸ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawrence announces Chandramukhi 2 with Rajini blessing ரஜினிகாந்த் மற்றும் பி.வாசு கூட்டணியில் உருவான மன்னன், உழைப்பாளி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இதே கூட்டணியில் உருவான சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ல் வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் சார்பாக பிரபு தயாரித்தார்.

இதில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தை உருவாக்க பி. வாசு திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ரஜினியின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது சந்திரமுகி 2 படத்திற்கு ரஜினி ஆசி வழங்கியுள்ளார்.

அதாவது ரஜினி இந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை பி. வாசு இயக்க சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பை லாரன்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க தனக்கு அனுமதி கொடுத்த ரஜினிக்கு நன்றி கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Raghava lawrence announces Chandramukhi 2 with Rajini blessing

8 கிராமங்களை தத்தெடுத்து உணவளிக்கும் மோகன் பாபு-விஷ்ணு மஞ்சு

8 கிராமங்களை தத்தெடுத்து உணவளிக்கும் மோகன் பாபு-விஷ்ணு மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Great Gesture Mohan Babu and Vishnu Manchu adopt 8 villages கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ளன.

பல நாடுகளில் இதுவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மோடி அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனாவை தாக்கம் தினமும் அதிகரித்துள்ளதால் இன்னும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் இணைந்து ஆந்திராவின் சந்திரகிரி தொகுதிக்கு உட்பட்ட எட்டு கிராமங்களை தத்தெடுத்து உணவளித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு தினசரி இரண்டு வேலை உணவு வழங்கி வருகின்றனர்.

இதற்காக தினசரி 8 டன் காய்கறிகள் தேவைப்படுகிறதாம்.

விஷ்ணு மஞ்சுவின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தற்போது வெளிநாட்டில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Great Gesture Mohan Babu and Vishnu Manchu adopt 8 villages

More Articles
Follows