‘ஜோதிகாவுடன் நடிப்பது பெரிய பலம்…’ ஜிவி. பிரகாஷ்

‘ஜோதிகாவுடன் நடிப்பது பெரிய பலம்…’ ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash talks about acting with Jyothika in Naachiyaarஇளையராஜா இசையமைத்து பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் நாச்சியார்.

ஜோதிகா மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதில் நடிக்கின்றனர்.

இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் தன் கேரக்டர் குறித்து ஜிவி. பிரகாஷ் கூறும்போது…

ஜோதிகா ஒரு பாசிட்டிவ்வான நபர்.

அவரைப் போன்ற ஒரு நபருடன் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தெரிவித்துள்ளார்.

GV Prakash talks about acting with Jyothika in Naachiyaar

gv prakash jyothika

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை; அரசியல் உலகில் பரபரப்பு

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை; அரசியல் உலகில் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalஉலக நாயகன் கமல்ஹாசன் அண்மைகாலமாக தன் ட்விட்டரில் சமுமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.

இதனால் மக்களிடையே ஆதரவும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இதனால் பாஜகவின் முக்கிய பிரமுகர் சுப்ரமணிய சுவாமிக்கும் கமலுக்கு இடையே ‘பொறுக்கி’ என்ற வார்த்தை போரே நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கமல்ஹாசன் நாளை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்போது, சினிமா, பொது விஷயங்கள் பற்றியும், தன் மீதான இணையத்தள விமர்சனங்களும் பற்றியும் கலந்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒருவேளை, இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kamalhassan meeting with Leading Lawyers

பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்”

பெண் கொடுமைக்கு எதிரான படம் ”தமிழனானேன்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamizhananean movie news updatesஅண்மையில் மெரினாவில் நடந்து முடிந்த தமிழ் இளைஞர்களின் ‘தைப்புரட்சி’ பாரம்பரியத்தை மீட்டு எடுக்கும் அவர்களின் எழுச்சியை உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

அந்தக் காலத் தமிழர்கள் பகை முடிக்கும் வீரத்திலும் பாசம் காட்டும் ஈரத்திலும் சிறந்து விளங்கினார்கள்.

ஆனால் இன்று தமிழர்களிடம் ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாத நிலை உள்ளது.

தமிழனின் தவறான மனப்போக்கால் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.

இப்போது நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதித்தமிழன் எதிர் கொண்டால் எப்படிக் கையாள்வான்? தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ‘தமிழனானேன் ‘.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன்.

கோவைக்காரரான இவருக்கு உலக தற்காப்புக் கலைகளில் ஆர்வம் . குறிப்பாக ஒரு காலத்தில் புகழ் பெற்று இருந்து பிற்காலத்தில் காணாமல் போய் விட்ட ஆதித்தமிழனின் தற்காப்புக் கலைகள் மீது தனி ஈடுபாடு உண்டு.

அது தொடர்பான தேடலில் இறங்கிய இவருக்கு ‘அவதார் ‘,’அயர்ன் மேன்’.

ஹாரி பாட்டர் ‘ போன்ற ஹாலிவுட் படங்களில் அனிமேட்டராக பணிபுரிந்த சாமி மாண்ட்ரேக் பெசி போன்ற வெளிநாட்டு சினிமா கலைஞர்களின் நட்பு கிடைத்து இருக்கிறது.

அவர்கள் மூலம் சினிமாவில் ஆர்வம் வந்த இவருக்கு, ஆதித் தமிழனின் தற்காப்புக் கலையை மையமாக வைத்து நாம் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணம் வரவே அது விரிவடைந்து ‘தமிழனானேன்.க ‘ படமாக வளர்ந்து நிற்கிறது.

ஒரு எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சினிமா மீதுள்ள காதலில் இப்படி ஒரு முழுப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்.

இப்படத்தில் ஆதித் தமிழரின் தற்காப்புக் கலைகளான சிலம்பம் , குத்து வரிசை, வர்மம் , பிடி வரிசை
போன்றவை மட்டுமல்ல குங்பூ, கராத்தே போன்ற உலகின் சிறந்த 8 தற்காப்புக்கலைகளும் காட்டப்பட்டுள்ளன .

இப்படத்தில் சதீஷ் ராமகிருஷ்ணன், வந்தனா வரதராஜன். சரவணன் ராதாகிருஷ்ணன், பிரித்தா, திருலோகசந்தர், வெங்கட், அத்விக், ஷக்தி, ஜான் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஹாலிவுட் அனிமேட்டர் சாமி மாண்ட்ரேக் பெசி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல அவர் படத்திற்கு ஹாலிவுட் தொழில் நுட்பப் பணி ஒத்துழைப்பையும் வழங்கி யிருக்கிறார்.

படத்திற்கு ஒளிப்பதிவு – விக்னேஷ் அருண் , ரகு ராமையா, இசை – வினோத் சுப்ரமணியம் , தயாரிப்பு _ வெற்றித்தமிழ் உருவாக்கம் .

படம் பற்றி இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன் பேசும்போது, “இது தொலைந்து போன நம் பாரம்பரியங்களைத் தேடும் கதை. மறைந்து போன நம் வீரக் கலைகளைத் தேடும் கதை.

நம் ஆதி கலைகளைத் தேடுகிற படமாக இருந்தாலும் நவீன ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் படத்தில் பயன் படுத்தப் பட்டுள்ளன.

படம் மூன்று வித அடுக்காக இருக்கும். முதல் அடுக்கு என்பது இப்படத்தை ஒரு சாதாரண பார்வையில் பார்த்தால் ஒரு சாதாரண மசாலாப்படம் போலத் தெரியும்.

இன்னொரு அடுக்கு என்பது ஒவ்வொரு காட்சியும் ஷாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும். ஒரு காட்சியைத் தவற விட்டாலும் படம் புரியாது.

மற்றொரு அடுக்கினை நோக்கினால் படத்தில் இருக்கும் தத்துவார்த்தக் கருத்துகள் தெரிய வரும்.

படத்தில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு யாருக்கும் டூப் போடப்படவில்லை. கயிறுகள், பஞ்சு மூட்டைகள் பயன்படுத்தப்படவில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையும் காட்டவில்லை.

எல்லாமே அசல் காட்சிகள் தான். “என்கிறார்.

நதி மூலம் தேடும் முயற்சியாக உருவாகியுள்ள ‘தமிழனானேன் ‘ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Tamizhananean movie news updates

Tamizhananean movie news updates 1

அரை நிர்வாண படம் வெளியானது குறித்து என்ன சொல்கிறார் ‘ரம்’ சஞ்சிதா

அரை நிர்வாண படம் வெளியானது குறித்து என்ன சொல்கிறார் ‘ரம்’ சஞ்சிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer Suchitra tweets nude video of Sanchita Shettyசூது கவ்வும், ரம் மற்றும் என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்துள்ளவர் சஞ்சிதா ஷெட்டி.

இவர் நடித்துள்ள எங்கிட்ட மோதாதே படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவரின் அரை நிர்வாண வீடியோ படம் ஒன்று பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.

இதுபற்றி சஞ்சிதா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளதாவது…

அந்த படத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமில்லை. அந்த வீடியோவில் இருப்பது நானில்லை என்று ஒரு வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

Singer Suchitra tweets nude video of Sanchita Shetty

ஐநா தலைமையகத்தில் ஐஸ்வர்யா தனுஷ் நடனம்; ரஜினி செல்வாரா?

ஐநா தலைமையகத்தில் ஐஸ்வர்யா தனுஷ் நடனம்; ரஜினி செல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Aishwarya Dhanushஐஸ்வர்யாவை ஒரு பெண் இயக்குனராகவும் ரஜினியின் மகளாகவும் தனுஷின் மனைவியாகவும் பலருக்கு தெரியும்.

இவர் பரதநாட்டிய கலைஞர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் சமீபத்தில் ‘Standing On An Apple Box’ என்ற புத்தகத்தை எழுதி தான் ஒரு எழுத்தாளர் என்பதையும் நிரூபித்தார்.

இந்நிலையில் வருகிற மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையில் தன் பரதநாட்டிய நிகழ்ச்சியை அரங்கேற்றவிருக்கிறார்.

இதை தன் ட்விட்டரில் பதிவிட்டு, தற்போது அந்த அரங்கேற்றத்திற்கான ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டவர். 

இவர் பங்கேற்கும் நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

45 நிமிடம் முதல் 1 மணி நேரம் நடக்கும் இந்த கச்சேரியில் நாட்டியக் கடவுள் நடராஜருக்கு புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மதுரையை ஆண்ட மீனாட்சியின் வாழ்க்கையை சொல்லி  உலக பெண்களின் மகத்துவத்தையும், வைரமுத்துவின் அவசர தாலாட்டு என்ற பாடலில் இன்றைய நாளில் பணிக்கு செல்லும் தாய்மார்களின் மேன்மையையும் தன்  நாட்டியத்தின் மூலம் கூற இருக்கிறார்.

முடிவில் காஞ்சி பெரியவர் எழுதிய. மைத்ரிம் பஜத என்ற  பாடலுடன் உலக சமாதானத்தை வேண்டி  நிறைவு செய்கிறார்.

இது எம்.எஸ்.சுப்புலெட்சுமியால் ஐக்கிய  நாடுகள் சபையில் முதல் முறையாக பாடப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எம்.எஸ் சுப்புலெட்சுமி, பண்டிட் ரவிசங்கர், அம்ஜத் கான், ஷாகிர் உசேன், .ஆர்.ரகுமான், டாக்டர் எல் சுப்பிரமணியன், சுதா ரகுநாதன் போன்றோர் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில் முதல் நடனம் ஆடும் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெறுகிறார்.

இவ்விழாவிற்கு பின் அமெரிக்க தமிழ்சங்கம் சார்பில் ஞாயிறு அன்று விழா எடுத்து அமெரிக்க தமிழ்ச்சங்கம் சார்பாக விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ரஜினி குடும்பத்தை சேர்ந்த சிலர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

#recordingsession gearing up for NYC #March8 #UN #dancelove

Aishwaryaa Dhanush gping to perform bharatanatyam at un headquarters

aishwarya un

மாற்றுத் திறனாளிகளின் மனங்களை காயப்படுத்திய ராதாரவி

மாற்றுத் திறனாளிகளின் மனங்களை காயப்படுத்திய ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radharavi speechநடிகர் ராதாரவி அண்மையில் நடைபெற்ற ஒரு பிரபல கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை விமர்ச்சிக்கும் நோக்கத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஒப்பிட்டு பேசியுள்ளார்.

அப்போது மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை கேலி செய்துள்ளார்.

இதனை மேடையில் இருந்த பலரும் கைத்தட்டி ரசித்து சிரித்தனர்.

இந்த பேச்சு மாற்றுத் திறனாளிகளிடையே பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்தப் பேச்சுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ராதாரவிக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Radharavi made fun of Physically challenged peoples

More Articles
Follows