நல்ல குடும்பத்த நாசம் பண்ணாதீங்க; யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

நல்ல குடும்பத்த நாசம் பண்ணாதீங்க; யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanavelraja Wife Nehas contraversy tweetசூர்யா மற்றும் கார்த்தி நடித்த பல படங்களை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தயாரித்தவர் ஞானவேல்ராஜா.

இவரது மனைவி நேஹா ஞானவேல்ராஜா ஒரு சர்ச்சைக்குரிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…

‘திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்கும் பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள் என்றும் அவர்கள் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், இம்மாதிரியான நடிகைகளின் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் பதிவு செய்திருந்தார்.

பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்னொரு கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கூறிய அந்த கருத்து எனது குடும்ப பிரச்சனை குறித்து அல்ல. எனக்கும் என் கணவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை.

ஆனால் என்னை சுற்றி நடக்கும் ஒருசில விஷயங்கள் என்னை பாதித்துள்ளது. ஒருசில நடிகைகள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி அந்த குடும்பத்தின் அமைதியை குலைத்து விடுகின்றனர்.

ஒரு பெண் இதுகுறித்து தைரியமாக பேச முன்வந்தால் பொதுமக்கள் இதனை லீக் என்று கூறுகின்றனர். நான் யாருடைய கவனத்தை ஈர்க்கவும், டிராமா செய்யவும் முயலவில்லை.

என்னுடைய டுவீட் காரணமாக என்னுடைய கணவர் குறித்து வந்து சில கமெண்ட்டுக்கள் காரணமாகவும் இதுவொரு சென்சிட்டிவ் பிரச்சனை என்பதை புரிந்து கொண்டதாலும் அந்த டுவீட்டை நான் நீக்கினேன்.

அதே நேரத்தில் இதுமாதிரியான பெண்களுக்கு அந்த டுவீட் ஒரு வார்னிங்காக இருக்கும்.

சோஷியல் மீடியா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று நேஹா ஞானவேல்ராஜா பதிவிட்டுள்ளார்.

யாருக்கு வார்னிங் கொடுக்கிறார் ஞானவேல்ராஜா மனைவி?

Gnanavelraja Wife Nehas contraversy tweet

neha-gnanavelraja tweet 21st march 2018

சூர்யாவின் ஜோடி பிரியா வாரியர்..? கேவி ஆனந்த் விளக்கம்

சூர்யாவின் ஜோடி பிரியா வாரியர்..? கேவி ஆனந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KV Anand clarifies who will be heroine in Suriya 37th movieசெல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.’, படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதன் பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை லைக்கா தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதில் சூர்யா ஜோடியாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகிய ப்ரியா பிரகாஷ் வாரியர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து இயக்குநர் கே.வி.ஆனந்தி கூறியதாவது..

இதில் நாயகியாக நடிக்க ப்ரியா வாரியரை நாங்கள் அணுகவில்லை. எந்த நடிகையுடனும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் மட்டுமே துவங்கி நடைபெற்று வருகிறது” என்றார்.

டாப் ஹீரோயினை தேடி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

KV Anand clarifies who will be heroine in Suriya 37th movie

அஜித்துக்கு வில்லனாகும் தல ரசிகர் ஆர்.கே.சுரேஷ்.?

அஜித்துக்கு வில்லனாகும் தல ரசிகர் ஆர்.கே.சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh likely to play baddie in Ajiths Viswasam movieசிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படம் விஸ்வாசம்.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் மார்ச்சில் தொடங்கவிருந்த நிலையில், சினிமா துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எனவே ஸ்டிரைக் முடிந்தவுடன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இதில் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தான் அஜித்தின் தீவிர ரசிகர் என ஆர்.கே. சுரேஷ் தன் பேட்டிகளில் கூறி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK Suresh likely to play baddie in Ajiths Viswasam movie

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை குஷியாக்கிய அருண்ராஜா காமராஜ்

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை குஷியாக்கிய அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan became happy because Arunraja Kamaraj workநடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைபனை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

இவர் நெடுநாட்களாக தான் ஒரு இயக்குனராக வேண்டும் என கூறி வந்தார்.

இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை இவரின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.

இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க அவரின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.

இதில் பெண்கள் கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டுள்ளனர்.

அண்மையில் இப்பட சூட்டிங் தொடங்கியது.

தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

தற்போது சினிமா வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுவருவதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டதால் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் குஷியாகிவிட்டாராம்.

Sivakarthikeyan became happy because Arunraja Kamaraj work

ladies cricket movie

ஷங்கரின் உதவி இயக்குநரைப் பாராட்டிய விஷால்-சசிகுமார்-கௌதம்மேனன்

ஷங்கரின் உதவி இயக்குநரைப் பாராட்டிய விஷால்-சசிகுமார்-கௌதம்மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

megam sellum thooramபிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார்.

அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞராக வேண்டும் என அதீதமான ஈடுபாட்டுடன் இருக்கும் இளைஞன், காதல் மற்றும் குடும்பம் குறித்து எந்த விதமான பிரக்ஞையுமே இல்லாமல் இருக்கிறான். தனது குறிக்கோளுக்காக ஒரு கட்டத்தில் காதலையே உதறி, பின்னால் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் இறுதியில் வாழ்க்கை, அன்பு, குடும்பம் இவற்றின் மீதான மதிப்புகளை உணர்ந்து கொள்கிறான். இதுவே “மேகம் செல்லும் தூரம்” வீடியோ பாடலின் சாராம்சம்.

இந்த பாடலை படமாக்குவதற்காக ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண், உதவி இயக்குநர் விக்னேஷ்ராஜ் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் குழு மட்டுமே இமாச்சல் பிரதேஷ், ராஜஸ்தான், நீலகிரி ஆகிய இடங்களுக்குப் பயணித்திருக்கிறது. மேலும் சில காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டிக்கின்றன.

இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண் “ஒரு கிடாயின் கருணை மனு”, “விழித்திரு” ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் முழுக்க காதலின் வலி, இளைஞனின் லட்சியத் தேடல், பெண்ணின் மனநிலை, பயணா அனுபவம், காதலின் புரிதல் என பல அனுபவங்களை ஒரே களத்திற்குள் தனது அழகு கொஞ்சும் தமிழ் வரிகளால் நிரப்பியிருக்கிறார் பாடலாசியரும், பத்திரிக்கையாளருமான ம.மோகன்.

இவரின் வரிகளுக்கு இயல்பான இசையின் மூலம் உயிர் தந்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்.

இவர் வெறும் 17 வயது மட்டுமே நிரம்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுஸ்துப் ரவியின் குரலில் அழகாய் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கு, எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார் அருள்மொழி செல்வன்.

மேலும் இந்த வீடியோ பாடலை “மஹாலட்சுமி தியேட்டர்ஸ்” உரிமையாளர் ஷைலேந்தர் சிங் தயாரித்திருக்கிறார்.

இன்றைய இளம் தலைமுறை காதலர்களின் வாழ்வில் சகஜமாகிவிட்ட “பிரேக்-அப்” மற்றும் “ஈகோ” போன்றவற்றை மையமாய் வைத்து வெளிவந்திருக்கும் இந்த வீடியோ பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் “யூ-டியூப்” வலைதளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

“மேகம் சொல்லும் தூரம்” வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின், “இந்த வீடியோ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக இப்பாடலின் இசையும், ஒளிப்பதிவும் பிரம்மிப்பைத் தருகிறது.” என்று பாராட்டியுள்ளார்.

அவரைப் போலவே நடிகர் விஷால், நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கள் பின்வருமாறு :-

நடிகர் விஷால், “நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. விக்னேஷ்குமார், ஜாட்ரிக்ஸ் மற்றும் ஆர்.வி.சரண் ஆகியோருக்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.

நடிகர் சசிகுமார், “இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. படமாக்கப்பட்ட இடங்களும், பாடல் வரிகளும் மிகவும் அருமையாக இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “மேகம் செல்லும் தூரம்” பார்த்தேன். அருமையாக வந்திருக்கிறது. கடினமான இடங்களில் படமாக்கப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.

இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

Vishal Sasikumar Udhayanidhi praises Shankar Asst Vignesh kumar for his album song

சூர்யாவை வைத்து விஜய்யை கிண்டல் செய்த கருணாகரன்

சூர்யாவை வைத்து விஜய்யை கிண்டல் செய்த கருணாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunakaran made fun of Vijay movie shooting during cinema strikeமார்ச் 1ஆம் தேதி முதல் தமிழ்த்திரை உலகினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சினிமா போஸ்டர்கள் கூட ஒட்டக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில் விஜய் நடித்து வரும் படத்தின் சூட்டிங் சென்னை விக்டோரியா மஹாலில் நடைபெற்றது.

தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் மற்றொரு புறம் இதனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் தன் ட்விட்டரில் “ஸ்டிரைக் இருக்கு ஆனா இல்ல” என கிண்டலடிக்கும் விதமாக எஸ்ஜே. சூர்யாவின் படத்தை போட்டு பதிவிட்டு இருந்தார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் “தமிழன்னு சொன்னாலே திமிர் ஏறும் உண்மையா? இல்ல ஜஸ்ட் சாங் ஆ” என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது சினிமாவில் தமிழர்களின் ஒற்றுமையை பற்றி பேசிவிட்டு தங்களுடைய படப்பிடிப்பை மட்டும் தனியா நடத்துகிறீர்களே இது முறையா? என பொருள்படும் வகையில் அவர் பதிவிட்டுள்ளார்.

Actor Karunakaran made fun of Vijay movie shooting during cinema strike

Karunakaran‏Verified account @actorkaruna
Tamizannu sonnaley thimir yerum unmaya illa just song uh

More Articles
Follows