ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க அரசியலில் நுழைந்தார் முன்னாள் IAS அதிகாரி சகாயம்

Sagayam IAS (1)ஊழல் நிறைந்த உலகத்தில் நேர்மையானவர் என பெயர் எடுப்பது அறிதாகிவிட்டது.

அதிலும் தமிழக அரசு துறைகளில் நேர்மைக்கு கூட விலை பேசுவார்கள்.

இந்த நிலையிலும் நேர்மையான IAS (ஐஏஎஸ்) அதிகாரி என பெயரெடுத்தவர் சகாயம்.

புதுக்கோட்டையை சேர்ந்தவர் இவர்.

முதலில் தமிழக அரசின் சிறிய துறைகளில் பணியாற்றினார்.

பின்னர் பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பணிக்கு தேர்வானவர் இவர்.

கிரானைட் முறைகேடு, மணல் முறைகேடு, பெப்சி கம்பெனி நடவடிக்கை என பல அதிரடிகளை மேற்கொண்டு தமிழக மக்களின் ரியல் ஹீரோவானார்.

இவரின் நேர்மைக்காகவே இவரை பலரும் நேசித்தனர்.

இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றினார்.

நேர்மையாக இருந்தால் தான் வாழ விடமாட்டார்களே.. பல இன்னல்களை சந்தித்தார். மன உளைச்சலுக்கு ஆளானார்.

எனவே வேறு வழியில்லாமல் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார்.

இவர் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு எப்போது அரசியலுக்கு வருவார்? என பலரும் காத்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் மக்கள் பாதை சார்பில் “அரசியல் களம் காண்போம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் பேசினார் சகாயம்..

‘இளைஞர்களே எல்லோரும் வாருங்கள்.

அனைவரும் சேர்ந்து ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம்.

அரசியல் கோபம் உண்டு. ஆனால் அரசியல் பதவி ஆசை இல்லை. நான் எந்த திரைப்பட நடிகரிடமும் பேசியதில்லை.

அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன்.

இளைஞர்களே… கடைசி வரை நேர்மையாக, சாதியை உடைத்தெரிக்கிற லட்சிய நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்’ என பேசினார் சகாயம்.

Former IAS Officer Sagayam announces his political entry

Overall Rating : Not available

Latest Post