ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? புதுச்சேரி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை கெடு

Tamilisai Soundararajanபுதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

தங்கள் அரசு பணிகளை செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரச்னை செய்வதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார்.

எனவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவை புதுச்சேரி முதல்வர் கொடுத்திருந்தார்.

இதனிடையே புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

நமச்சிவாயம், காங்., – எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் ஆகியோர், கடந்த மாதம், 25ம் தேதி, தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.

பின்னர் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த, மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமார் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

இவை தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது.

எனவே காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. சபாநாயகரும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இதனிடையில. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழிசை சவுந்தரராஜன் இன்று (பிப்., 18) பொறுப்பேற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து அவரை முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு (நாராயணசாமி அரசு,) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னரின் செயலரிடம் மனு அளித்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.

அதன்படி வரும் பிப். 22ம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

Floor test for Narayanasamy govt on feb 22nd

Overall Rating : Not available

Latest Post