புகழ்பெற்ற சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் காலமானார்.; பொதுமக்கள் அஞ்சலி!

sivaraj sivakumar (2)சித்த மருத்துவத்தில் பிரபலமானவர்கள் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமாரின் குடும்பத்தினர்கள் தான்.

இந்த குடும்பம், கடந்த 7 தலைமுறைகளாக கிட்டத்தட்ட 200 வருடங்களாக சித்த மருத்துவத்தில் சாதனை புரிந்து வந்துள்ளனர்.

இன்றைய ஆண்களை அதிகளவில் பாதிக்கும், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி மற்றும் இல்லற பிரச்சினைகளுக்கு, சித்த மருத்துவம் மூலம் இவர்கள் தீர்வு அளித்துள்ளனர்.

இவர்களில் டாக்டர் சிவராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.

மேலும் மக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து வந்தவர்.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததுள்ளார் சிவராஜ் சிவகுமார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிப்ரவரி 10 நள்ளிரவு 1 மணிக்கு உயிரிழந்தார்.

அவரின் உடல் சேலம் சிவதாபுரத்திலுள்ள, அவரின் பூர்விக வீரான அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous Siddha doctor Sivaraj Sivakumar passed away

Overall Rating : Not available

Latest Post