தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.
இவர் வாயை மூடி பேசவும் மற்றும் ஓகே கண்மணி ஆகிய நேரடி தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது 3வது தமிழ் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வகுமார் தயாரிக்க, புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்குகிறார்.
ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
இப்படத்தில் இவருடன் நான்கு நாயகிகளாக நடிக்கவிருக்கிறார்களாம்.
தற்போது முன்னனி நாயகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
Dulquer Salmaans 3rd tamil project with four heroines