தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளத்தில் பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் சில நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
`வாயை மூடி பேசவும், `ஓ கே கண்மணி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான `சோலா’ படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து வருகிறார்.
இதனையடுத்து அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஐ.டி. ஊழியராக நடிக்க, இவரது ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.
இவர் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.
டி.இமான் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்று பெயரிட்டுள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `திருடா திருடா’ படத்தில் `கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.