‘சிண்ட்ரெல்லா’ பெயரில் திகில் படமா.? ராய் லட்சுமியை வியக்க வைத்த வினூ

‘சிண்ட்ரெல்லா’ பெயரில் திகில் படமா.? ராய் லட்சுமியை வியக்க வைத்த வினூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். எஸ். ஐ புரொடக்சன் தயாரிப்பில் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்று நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி இன்று உலகெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்னீக் பீக் காட்சிகள் திரையிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து படக்குழுவினர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில்
இசையமைப்பாளர் அஸ்வமித்ரா கூறுகையில்,

“கபிலன் வைரமுத்து மற்றும் என் மனைவி ஜெயந்தி எழுதியது என படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. படத்தில் ராய் லக்ஷ்மி மற்றும் சாக்ஷி ஆகியோரின் நடிப்பு பிரமாதமாக வந்துள்ளது.படத்திற்குப் பின்னணி இசை அமைத்த போதே அவர்களின் நடிப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் இயக்குநர் பன்முகத்திறன் கொண்டவர். அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது ” என்றார்.

ஒளிப்பதிவாளர் ராமி பேசும்போது,

“யாமிருக்க பயமே’ படத்துக்குப் பிறகு இது எனக்கு முக்கியமான படம். இந்தப் படக் குழுவினருடன் நான் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.’சிண்ட்ரெல்லா’ தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரை அனுபவமாக இருக்கும்” என்றார்.

நடிகை சாக்ஷி அகர்வால் பேசுகையில்,

“இயக்குநர் வினூ கதையை விவரித்தபோது, அடுத்த காட்சி என்ன என்று நான் பரபரப்படைந்தேன். அடுத்த காட்சி கேட்பதற்கு நான் மிகவும் ஆவலாக இருந்தேன். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாகக் கதை சொன்னார்.நான் வில்லியாக நடிக்கப் போகிறேன் என்று இயக்குநர் சொன்னபோது நான் அதை எதிர்பார்க்காததால் ஆச்சரியமடைந்தேன்.

ராய் லட்சுமி நடிப்பில் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் வினூ குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பான பணியைச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராமி சார் தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். அது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாகத் தெரியும்” என்றார்.

நடிகர் அன்பு தாசன் கூறுகையில்,

“இயக்குநர் வினூ உண்மையில் ஒரு அற்புதமான நபர். நாங்கள் பல திரைக்கதைகளை விவாதித்து இருக்கிறோம். அப்போதே மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

நடிகை ராய் லட்சுமியின் எளிமையும் பெருந்தன்மையும் கண்ணியத்தையும் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டேன் .

பாலிவுட்டில் மட்டுமல்ல பல மொழிகளிலும் அவர் நடித்து புகழ்பெற்றவர். அப்படிப்பட்ட அவர், அனைவருடனும் மிகவும் அன்புடனும் நட்புடனும் இருந்தார். ஒளிப்பதிவாளர் ராமி இந்தப் படத்தில் தனது ஒளிப்பதிவின் மூலம் ஒரு மந்திரவாதி போல நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார், ஏனெனில் அவரது காட்சிகள் படத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்திக் காட்டும்படி உள்ளன” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் கூறுகையில்,

“இயக்குநர் வினூ என் இளைய சகோதரர் போன்றவர், அவர் என்னை அழைத்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து நடிப்பீர்களா என்றார். நான் அந்த வேடத்தில் நடிப்பேனா என்று சந்தேகம் அவருக்கு.

அது ஒரு நல்ல வித்தியாசமான வேடம் தான். சிண்ட்ரெல்லா நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் ரசிக்க ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்கும். ராய் லக்ஷ்மி ஒரு அழகான நடிகை மட்டுமல்ல, நல்ல உள்ளம் கொண்டவர். இயக்குநர் வினூ எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குநர், அவரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியாகப் பங்கெடுக்க இருக்க விரும்பினார், ஆனால் முடியவில்லை. எனினும், அவருடைய ஆசீர்வாதம் முழுமையாக இங்கே இருக்கும் என்று நம்பலாம் ” என்றார்.

நடிகை ராய் லக்ஷ்மி பேசும்போது,

“நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை எல்லாம் பார்க்கிறேன் ஒரு பெரிய போருக்குப் பிறகு சந்திப்பது போல் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புன்னகையுடன் கூடிய உங்கள் முகங்களைப் பார்க்கிறேன். இனி இது தொடரும் என்று நம்புகிறேன்.

‘சிண்ட்ரெல்லா’ ஒரு திகில் பேண்டஸி படம். இது வித்தியாசமான ஹாரர் படம். நிறைய திகில் படங்களை நீங்களும் நானும் பார்த்திருக்கிறோம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக இருக்கும்.

காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு, அதே மாதிரி படங்களாகவே எனக்கு வந்தன. ஆனால் அந்த வகை ஒரே மாதிரியான திகில் திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் வினூ என்னை அணுகியபோது அதே வகை, என்றாலும் சிண்ட்ரெல்லா என்ற தலைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
சிண்ட்ரெல்லா என்ற அந்த ஒரு வார்த்தையில் நான் மனம் கவரப்பட்டேன்.

சிண்ட்ரெல்லா என்ற பெயரை தேவதைக் கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அந்தப் பெயரில் ஒரு திகில் படமா என்று வியந்தேன்.

ஆனால் அதையே ஒரு திகில் படமாகக் கூறினால் எப்படி இருக்கும் என்றபடி கதை சொல்ல ஆரம்பித்தார் ,மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. .

இதில் இரண்டு வேடம் என்று முதலில் அவர் சொல்லவே இல்லை .ஆனால்
மூன்று வேடம் என்பது தெரியவே தெரியாது. போகப்போக ஒவ்வொரு பாத்திரமாக அவர் விளக்கினார்.

வேலைக்காரி வேடமும் நான்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொன்ன போது நான் ஒரு கணம் தயங்கினேன். மறுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அவர். என் மேல் நம்பிக்கை வைத்துப் பேசினார். கதையில் மனம் கவரப்பட்டு ஒப்புக்கொண்டேன்.

ஏனென்றால் அந்த அளவிற்கு அவர் என் மேல் நம்பிக்கை வைத்து அதை விவரித்தார்.

இந்தப்படம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தைக் கொடுத்தது.படத்தின் பாத்திரங்களின் தோற்றம், ஒளிப்பதிவு, இசை என்று சின்னச் சின்ன வேலைகளை கூட அனைவரும் குழுவாக இணைந்து செய்தார்கள்.

படக்குழுவினரின் ஒன்றுபட்ட உழைப்பின் பலனாக இந்த படம் வந்திருக்கிறது.

சிண்ட்ரெல்லாவின் வெற்றிக்குப்பின் வினூவின் கடின உழைப்புதான் அடிப்படையாக இருக்கும் .அவர் உற்சாகமான மனிதர்.

இது ஒரு ஒட்டுமொத்த குழுவினரின் படம் என்று கூட சொல்லலாம். சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த சம்பந்தப்பட்ட பாத்திரம் சவாலானது. பல நேரங்களில்,அந்தக் கவுனை அணிந்து நடிப்பது மிகவும் சிரமமாகவும் அசெளகரியமாகவும் இருந்தது.படம் பார்க்கும்போது அந்த சிரமமெல்லாம் காணாமல் போய்விட்டது.

ரோபோ சங்கருடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மறக்க முடியாதவை.பல காட்சிகளை மேம்படுத்த அவர் உதவினார். அவை ரசிக்கும்படி இருக்கும்.இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்று இருந்தோம்.

அதன்படி இப்போது காலம் கை கூடி வந்துள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குநர் வினூ பலவகை திறமைகள் கொண்ட இளைஞர். அவர் தொழில்நுட்ப ரீதியாகவும் அறிந்து வைத்துள்ளார். இசை அறிவும் கொண்டவர். அவ்வப்போது எனக்கு கிளிப்பிங்ஸ் அனுப்புவார்.

அதைப்பார்த்த நான் ஆச்சரியப்படுவேன். புதுப் புது சிந்தனைகள் வைத்துள்ளார்.அவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் எண்ணி ஆச்சரியப் படுவேன். அவருடைய கடின உழைப்பின் மூலம் அவர் அளித்த முயற்சிகளைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் மூன்று படங்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது,

சிண்ட்ரெல்லா தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் வினூ வெங்கடேஷ் பேசும்போது,

“பல மாதங்களாக இந்த நிகழ்ச்சியில் பேசவேண்டும் என்று நிறைய தயாரித்து வைத்திருந்தேன். ஆனால் இப்போதைய சூழலில் எல்லாமே மறந்து விட்டன.

என் மீது நம்பிக்கை வைத்து ராய் லக்ஷ்மி அவர்கள் இந்த படத்திற்கு அருமையாக நடித்துக் கொடுத்துப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார்.

அவரது ஆதரவும் நம்பிக்கையும் இல்லையென்றால், இப்படம் எந்த அளவிற்கு வந்து இருக்குமா தெரியாது.

அடுத்து நான் நன்றி சொல்ல விரும்புவது ரோபோ சங்கர். அவர் பொதுவாக இந்த மாதிரியான வாய்ப்புகளை ஏற்கமாட்டார்.

10-க்கும் குறைவான நாட்கள் கால்ஷீட், ஆனால் அவர் இந்த படத்தில் எனக்காக நடித்து உதவினார். ஆதரவளித்ததற்காக நான் எல்லா நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் நன்றி கூறுகிறேன்.

சாக்ஷி வில்லி வேடத்தில் நடித்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். சிண்ட்ரெல்லா ஒரு வழக்கமான திகில் படமாக இருக்காது.

இதுவரை பார்த்த திகில் படங்களில் திரும்பத் திரும்ப காட்டப்பட்டுள்ள சலிப்பூட்டும் விஷயங்கள் இதில் நிச்சயமாக இருக்காது.

பேய்களை வைத்து நாங்கள் காமெடி செய்யவில்லை. பேய்களை மரியாதையாகத்தான் காட்டி இருக்கிறோம்.திரையரங்குகளில் ரசிகர்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Director Vinoo talks about his film Cindrella

மதமாற்ற விழிப்புணர்வை ‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – மோகன் ஓபன் டாக்

மதமாற்ற விழிப்புணர்வை ‘ருத்ர தாண்டவம்’ ஏற்படுத்தும் – மோகன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’.

இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது.

இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில்,”

இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன்.

நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன்ஜி என்னை சந்தித்தார்.

நீங்கள்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார் அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார்.

நான் டப்பிங் யூனியன் தலைவராக பணியாற்றி வருகிறேன்/ தற்போது திரையுலகில் பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் உறுப்பினர்களாக சேர்க்க சொல்லி என்னை சந்திக்கிறார்கள். அவர்களும் டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்/

ஏனெனில் இவர்களுக்கு சினிமாவைத் தவிர வேறு தொழில் தெரியாது.
படத்திற்கு இசை அமைப்பாளர் ஜுபின் எனக்கு புதியவர். படக்குழுவினருக்கு நண்பராக பழகியவர். இந்த படத்திற்கு அவர் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.

நான் இதற்குப் பிறகு ஏதேனும் படத்தை தயாரிக்கும் எண்ணம் இருந்தால்… அவரை இசையமைப்பாளராக பயன்படுத்துவேன்.படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்ட வேண்டும் என்றால் குறிப்பாக கலை இயக்குனரை பாராட்ட வேண்டும்.

அதிலும் குறிப்பாக நீதிமன்ற காட்சிகளுக்கான அரங்கத்தை அவர் வடிவமைத்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது. படபிடிப்புத் தளத்தில் இயக்குநரிடம் ஒரே ஒரு வசனத்தை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டேன் அவரும் அதனை ஒப்புக் கொண்டு, அந்த வசனத்தைப் பேச அனுமதித்தார்.

இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். உண்மையில் நமக்கெல்லாம் இது பெருமையாக தான் இருக்கும்.

எனக்கு இவர் தான் தலைவர் என சொல்லும் அனைவருக்கும் இந்த படம் பெருமையாக இருக்கும். இயக்குநர் மோகன்ஜி இந்த படத்தை குறிப்பிட்ட அந்த தலைவருக்காக எடுத்தது போல் இருக்கிறது.

படத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் பாராட்ட வேண்டும். திருந்த வேண்டும். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம். படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃ தே டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட் நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும். நான் வணங்கும் தலைவர்களில் டாக்டர் அம்பேத்கரும் ஒருவர். அவர் இந்தியாவிற்கான அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். அவர் ஒரு ஜாதிக்காக இதனை செய்யவில்லை.

இதை சொல்வது தான் ருத்ர தாண்டவம் படம். மலையாள திரை உலகில் படைப்பாளிகளும், திரைக்கதை ஆசிரியர்களும் எதைச் சொல்ல நினைக்கிறார்களோ… அதை அவர்களால் உறுதியாகவும், துணிச்சலாகவும் செல்ல முடியும். அது போன்றதொரு நிலை தமிழகத்தில் இல்லை.

இங்கு ஒரு காட்சியில் பின்னணியில் நிற்பவர்களால் கூட அரசியலாக்கப்படுகிறது. நான் ஒரு திறமையான நடிகன் இதனை சொல்லி சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டேன் இனிமேல் சொல்வதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டேன்.

ஏனெனில் திரை உலகில் காகித பூக்களுக்கு தான் மரியாதை. உண்மையான வாசம் வீசும் மலருக்கு மரியாதை கிடைப்பதில்லை. ஊடகவியலாளர்கள் நினைத்தால் நன்றாக இருக்கும் ஒருவரை கூட ஆட்டோ சங்கர் ஆக மாற்றிவிட முடியும் நீங்கள் நினைத்தால் ஆட்டோ சங்கரை கூட சாய்பாபாவாக மாற்றிவிட முடியும். எனவே இப்படத்தை பற்றி எழுதி ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ‘என்றார்.

நடிகை தர்ஷா குப்தா பேசுகையில்,”

தர்ஷா குப்தா என்றால் ‘குக் வித் கோமாளி’, ‘விஜய் டிவி’ என்ற அளவில்தான் அனைவருக்கும் அறிமுகமாகி இருக்கிறேன் ஆனால் என்னுடைய நீண்டநாள் கனவு திரைப்படத்தில் நடிகையாக நடிக்க வேண்டும் என்பது. அதிலும் ஒப்பனையே இல்லாமல் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

அந்தக் கனவை இயக்குனர் மோகன்ஜி ருத்ர தாண்டவம் படத்தில் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். என்னுடைய திரைப்பட அறிமுகமே பெரிய நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடைபெறுவதால் மகிழ்ச்சியுடன் பெருமிதமாகவும் இருக்கிறது. இந்தப்படத்தில் கிராமத்தில் வாழும் பெண்ணாகவும், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த படத்திற்கான ஆடிஷன் தேர்வில் இயக்குனர் மேக்கப் எதுவுமில்லாமல் வரவேண்டுமென கேட்டுக்கொண்டார். இது எனக்கு சவாலானதாக இருந்தது. இந்த படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தின் இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்,”

திரௌபதி படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான 7ஜி சிவா அவர்களுக்கு முதல் பிரதி அடிப்படையில் இந்த திரைப்படத்தை என்னுடைய சொந்த நிறுவனமான ஜி எம் கார்ப்பரேஷன் ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறேன்.

திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது.

முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்கங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள். பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன். ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிருத்துவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார்.

அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார், கிருத்துவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார்.

மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.

சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார்.

இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்துவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்துவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள்.

இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ருத்ரதாண்டவம் உருவான கதை. இந்த தருணத்தில் நடிகர் ரிச்சர்ட்டிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். திரௌபதி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர் அவர். தினமும் ஊதியம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக நாட்களை கடத்திக் கொண்டிருந்தவரை, ஊதியம் வாங்காமல் என்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என கூறினேன்.

இரண்டு கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்றும், எட்டு மாத காலம் என்னுடன் பயணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தேன். அவர் ஓராண்டு வரை என்னுடன் பயணித்தார். ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. அத்துடன் அவர் பயன்படுத்தும் வாகனத்தையும் எங்களுக்கு கொடுத்து உதவினார்.

இந்த அளவிற்கு நடிகர் ஒருவர், இயக்குநரையும், அவர் வைத்திருக்கும் கதையும் நம்பி ஓராண்டு வரை பயணம் செய்ததால், அதற்கு கைமாறாக தான் இந்தப்படத்தில் நாயகனாக அவரை நடிக்க வைத்தேன்.

இதைக் கடந்து எங்கள் இருவரிடையே புரிதலுடன் கூடிய நட்பு நீடிக்கிறது. நான் ரிச்சர்ட் உடன் தொடர்ந்து படங்களை படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் முப்பத்தி எட்டு, முப்பத்தி ஒன்பது நாட்களுக்குள் ஒரு படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டு நிறைவு செய்கிறோம் என்றால், அதற்கு நாயகனின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. படப்பிடிப்பு ஏழு மணி என்றால்இ ஏழு மணிக்கு ஒப்பனையுடன் தயாராக ரிச்சர்ட் இருப்பார். படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் எந்த ஒரு நெருக்கடியை கொடுக்காமல் வீட்டுக்கு செல்வார்.

இதுபோன்ற ஒரு நாயகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். தமிழ்சினிமா இவரை கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடைய இயக்கத்தில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி ஆகிய படங்களில் தெரிந்த முகங்கள் யாரையும் நடிக்க வைக்கவில்லை. அனைவரும் புதுமுகங்கள்தான் புதுமுகங்களை தான் நடிக்க வைத்தேன்.

திரைத் துறையில் எனக்கு அதிக அளவு நண்பர்கள் கிடையாது மேலும் எனக்கு தெரிந்த சினிமாவும் அவ்வளவுதான். நான் ஒரு சுயாதீன திரைப்பட படைப்பாளர். சினிமாவை தெரிந்து கொள்வதற்காக நான் டீக்கடைகளிலோ, மதுபான பார்களிலோ நேரத்தைச் செலவிடுவதில்லை. அதுபோன்ற நண்பர்களையும் சம்பாதித்தது இல்லை. படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் ராயபுரத்தில் உள்ள என்னுடைய நண்பர்களுடன் இணைந்து நேரத்தை செலவழிப்பது தான் என்னுடைய பொழுதுபோக்கு.

இந்நிலையில் டத்தோ ராதாரவி அவர்களை சந்தித்து கதையை சொல்ல வேண்டும் என்றபோது எனக்குள் நிறைய தயக்கம் இருந்தது. நண்பர் ஜேஎஸ்கே கோபி அவர்களின் உதவியுடன் டத்தோ ராதாரவியை சந்தித்து கதையைக் கூறினேன்.

அப்போது அவர் ஒரு திருத்தத்தை சொன்னார் அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இப்படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன திருத்தத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எமக்கு திரைஉலக பக்குவம் இல்லாததால், சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டு பிறகு, அவர் கேட்ட விஷயத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

அது என்னவெனில் இந்தப்படத்தில் அவர் நீதிமன்றத்தில் பேசும்பொழுது ‘நான் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர் என்பதை பெருமிதமாக நினைக்கிறேன்’ என்பார்

மேலும் அவர் நடிப்பதற்கு சம்பளமாக ஒரு தொகையை கேட்டார். அது இந்த படத்திற்கான பட்ஜெட்டுக்குள் அடங்க வில்லை என்பதால், நான் பதிலேதும் கூறாமல் திரும்பி விட்டேன்.

பிறகு மீண்டும் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். அதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கதையை முழுவதும் கேட்ட பிறகு அதனை உள்வாங்கி ஒரு இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து அற்புதமாக படப்பிடிப்பு தளத்தில் ஒத்துழைப்பு கொடுத்தார். அத்துடன் கதையை கேட்டு முடித்ததும் அவருடைய தோற்றம் குறித்து முழுமையான விவரங்களை அவர் நுட்பமாக விவரித்தபோது சினிமா மீதான அவரின் அர்ப்பணிப்புடன் அர்ப்பணிப்புடன் கூடிய உணர்வை கண்டு வியந்தேன்.

அவர் படப்பிடிப்புக்காக கலந்துகொண்ட இடம், உடன் பணியாற்றிய துணை நடிகர்கள் கொரோனா காலகட்டம், அவரின் வயது…. என பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் அவர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை மனமுவந்து வழங்கினார். இதற்காக அவருக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் தயார் என்றால், அவரை கதையின் நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க நான் தயாராக இருக்கிறேன். என்னிடம் அதற்கான கதை இருக்கிறது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கதையை தயார் செய்து வைத்திருக்கிறேன்.

தயாரிப்பாளருடன் அவர் வந்தால் அவரை கதையின் நாயகனாக வைத்து இயக்குவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

கதாநாயகி தர்ஷா குப்தா அவர்களுக்கு இன்னும் அவர்களுடைய ஊதியத்தில் சிறு தொகை நிலுவையில் இருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன்னால் அதை வழங்கி விடுவேன் என உறுதி கூறுகிறேன். தர்ஷா குப்தா இந்த படத்தில் அவருடைய நடிப்பிற்கு அவரே பின்னணி குரல் கொடுத்தார். இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கருதுவேன்.

ஏனெனில் நான் இயக்கிய 3 படங்களிலும் நாயகிகள் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஊக்கமாக இருக்கிறது. தர்ஷா குப்தா படத்தில் 8 மாத கர்ப்பிணியாக கதையில் அறிமுகமாகி, ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு நிச்சயம் அவர் பேசப்படுவார் .

நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர் 7ஜி சிவா பரிந்துரை செய்தார். ஆனால் அவரை சந்திக்க எனக்கு எனக்கு தயக்கமாக இருந்தது ஏனெனில் திரௌபதி படம் வெளியான பிறகு என்னை பற்றி சமூக வலைதளத்தில் எதிர்மறையான விமர்சனங்கள், பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் ‘அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். சினிமாவை சினிமாவாக தான் பார்ப்பார்கள். நீங்கள் எந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களோ அதே போல் அவர்களும் பல விஷயங்களில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். திரைத்துறையில் ஒரு உண்மையை சொல்வதற்கு பெரிய துணிச்சல் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது அதனால் அவரை சந்தித்து கதை கூறுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

நான் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சலீம் கௌஸ் அவர்களைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தேன்.

அவர் மும்பையில் இருப்பதாலும், தொடர்பு கொள்வதில் பல சிக்கல்கள் இருந்தாலும் அவருக்கு மாற்றாக கௌதம்மேனன் அவர்களை சந்தித்தேன். கதையைக் கேட்டுவிட்டு நான்தான் நடிக்க வேண்டுமா? எனக் கேட்டார். அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்.., எனக்கு திரை உலகில் வெற்றியும், அங்கீகாரமும் கிடைக்கும் என கூறினேன்.

அவர் உடனே, கதையாகவும், திரைக்கதையாகவும் நன்றாக இருக்கிறது. ஒரு நடிகராக என்னுடைய ஒத்துழைப்பு எந்த அளவுக்கு வழங்க முடியுமோ அந்த அளவுக்கு வழங்குகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.

இந்த படத்தில் நடிகை மாளவிகா அவினாஷ் அவர்களும் அற்புதமான முக்கியத்துவமான நீதியரசர் வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களும் அந்த கொரோனா காலகட்டம் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு வர தயங்க, நாங்கள் கொரோனாவிற்காக கடைப்பிடிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை விவரித்து, ராதாரவி அவர்களும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார் என எடுத்துக் கூறிய பிறகு அவர்கள் சென்னைக்கு வருகை தந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினார் அதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

நடிகர் மனோபாலா சார் அதிரடியாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். விரைவில் ஸ்னீக் பீக்காக வெளியாகவிருக்கிறது.

அந்த முன்னோட்ட காட்சிகள் வெளியான பிறகு நிச்சயம் சலசலப்பு உண்டாகும். இதற்கு எதிர்மறையாக விமர்சனங்கள் வரும். இதற்கு நான் இப்போதே பதிலளித்து விடுகிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் தவறு என்றால், நிஜத்தில் தலைவர் ஒருவர் மேடையில் பேசிய அத்தகைய பேச்சும் தவறுதான். தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சை தான் இப்படத்தில் வசனங்களாக இடம்பெற வைத்திருக்கிறேன்.

இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கு வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.

அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம்பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திரௌபதி 360 திரை அரங்குகளில் வெளியானது. ருத்ர தாண்டவம் அக்டோபர் 1ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என வினியோகஸ்தர் 7 ஜி சிவா வாக்குறுதி அளித்து இருக்கிறார். அது நடைபெறும் என நினைக்கிறேன். அது நடைபெறறால் இப்படத்தின் வெற்றி உறுதியாகிவிடும்.

இந்தப் படம் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த ஒரு நல்ல கருவை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்.

படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும என கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

Director Mohan G speech at Rudra Thandavam press meet

EXCLUSIVE ‘சிக்ஸர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் சதீஷ்.; முக்கிய கேரக்டரில் வெண்பா

EXCLUSIVE ‘சிக்ஸர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் சதீஷ்.; முக்கிய கேரக்டரில் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் வைபவ் & சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘சிக்ஸர்’.

இப்படத்தை இயக்கியவர் சச்சி. (இவரின் தங்கையை தான் நடிகர் சதீஷ் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

மாலை கண் நோயாளியாக வைபவ் நடித்திருந்தார். இந்த ‘சிக்ஸர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் தான் சச்சி & டாக்டர் சரண்யா திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இயக்குநர் சச்சி தனது அடுத்த படத்தை தற்போது இயக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்க முக்கிய கேரக்டரில் வெண்பா நடிக்கிறார்.

பிஜி. முத்தையா இப்படத்தை தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

Sixer director’s next with Actor Sathish

வடிவேலு கேரக்டரில் ஓவியா யோகிபாபு ஜோடியாகும் படம்.; ஜெயலலிதா & விஜய் மோதலுக்கு காரணமான வார்த்தையும் இருக்கே.!

வடிவேலு கேரக்டரில் ஓவியா யோகிபாபு ஜோடியாகும் படம்.; ஜெயலலிதா & விஜய் மோதலுக்கு காரணமான வார்த்தையும் இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் காண்ட்ராக்டர் நேசமணி கேரக்டரில் நடித்து இருந்தார் வடிவேலு.

தற்போது ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற பெயரையே படத்தலைப்பாக்கி உள்ளனர்.

இதில் யோகிபாபு & ஓவியா இணைந்து நடித்துள்ளனர். ஸ்வதேஷ் இயக்குகிறார்.

இந்த படத்தின் தலைப்பின் கீழ் TIME TO LEAD என்றொரு வாசகம் உள்ளது.

விஜய் நடித்த தலைவா படத்திற்கும் இதே வாசகம் இருந்தது. அப்போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயம். அந்த வார்த்தை சர்ச்சையை உருவாக்க அதை நீக்கி விட்டு தலைவா படத்தை ரிலீஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu and Oviya joins for a new film

துரை இயக்கி தயாரிக்க சுந்தர் நடிப்பில் ‘தலைநகரம் 2’..; வடிவேலு இணைவாரா.?

துரை இயக்கி தயாரிக்க சுந்தர் நடிப்பில் ‘தலைநகரம் 2’..; வடிவேலு இணைவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

V.Z.துரை – சுந்தர்.C கூட்டணியில் வெளியான இருட்டு வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் ‘தலைநகரம் 2’

இயக்குனர் V.Z.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடிக்கும் இப்படத்தை ரைட் ஐ தியேட்டர் தயாரிப்பு நிறுவனம் சார்பாக V.Z.துரை, S.M.பிரபாகரன் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இயக்குனர் V.Z.துரை தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி
வசனம் – மணிஜி
இணை தயாரிப்பு – RS வெங்கட், APV மாறன்

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தலைநகரம் படத்தின் முதல் பாக வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் வடிவேலு.

எனவே அவர் தலைநகரம் 2 படத்தில் அவர் இணைவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

VZ Durai and Sundar C joins for Thalai Nagaram 2

கிராம சபை நடத்தும் என் உரிமையில் அரசு தலையிட முடியாது.. – கமல்ஹாசன்

கிராம சபை நடத்தும் என் உரிமையில் அரசு தலையிட முடியாது.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உயிரே உறவே தமிழே!
வணக்கம்,

கிராம சபைகளைப் பொருத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு.

கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது.

தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையுமே தடுக்காத கொரோனா, கிராம சபை நடத்தப்படவேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடிவிடும்.

2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம். பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், ‘கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது’ என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழக அரசு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.

சுமார் 615 நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள்.

கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும்.

இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

பல கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த அனுபவங்களைக் கொண்டு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள்.

கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை நம் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும்.

நாளை நமதே!

கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்

MNM leader Kamal Haasan talks about Grama Sabha meeting

More Articles
Follows