2ஆம் உலகப்போரின் கடைசி குண்டை சினிமா கொண்டாடும்.. – ரஞ்சித்

Director Ranjith praises Irandam Ulagaporin Kadaisi Gundu movieஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் ‘உலகப்போரின் கடைசி குண்டு’.

நடிகர் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, ராம்தாஸ், லிஜீஸ் ,நடிப்பில் படப்பிடிப்பு முடிவடைந்து இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தை தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு காண்பித்திருக்கிறார் இயக்குனர் அதியன்.

படம் பார்த்து முடித்த இரஞ்சித் இயக்குனர் அதியனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து பாராட்டியிருக்கிறார்.

‘எனது மாணவன், எனது தயாரிப்பில் அதுவும் முதல் படமாக இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

அனைவரும் ரசிக்கும்படி, மிகவும் தரமான ஒருபடம் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ‘ அனைவராலும் கொண்டாடப்படும் படமாக இருக்கும்.

மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்றிருக்கிறார்.

படத்தின் இயக்குனர் அதியன், ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் இருவரும் தயாரிப்பாளர் பாராட்டில் கண் கலங்கிவிட்டார்களாம்.

Director Ranjith praises Irandam Ulagaporin Kadaisi Gundu movie

Overall Rating : Not available

Latest Post