‘மாபியா படங்களுக்கு நடுவில் மண்வாசனை…’ கனவு வாரியம் பற்றி பாரதிராஜா

‘மாபியா படங்களுக்கு நடுவில் மண்வாசனை…’ கனவு வாரியம் பற்றி பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja speech at Kanavu Variyam Audio Launchஅடிமட்ட கண்டுபிடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அறிமுக இயக்குனர் அருண் சிதம்பரம் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் கனவு வாரியம்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படம் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

மேலும், இரண்டு சர்வதேச ரெமி விருதுகளை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இப்படத்தை உலகப்புகழ் பெற்ற, ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குனர் சிகரம் பாரதிராஜா, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சிவன் (ISRO), பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், இந்திய ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பாளர் உதய்குமார், நல்லகீரை ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் (Weather Man) ப்ரதீப் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில்…

இப்போதுள்ள இளைஞர்கள் கணிணியில் வேலை பெருநிறுவன(corporate) வாழ்க்கை என்று இல்லாமல் மீண்டும் ஆரம்பகால இயற்க்கை விவசாயத்தை பின்பற்றுவது பெருமையக இருக்கின்றது என்றும் என்னுடைய மகனும் இப்பொழுது இயற்க்கை விவசாயத்தை மேற்க்கொள்வது எனக்கு பெருமை அழிக்கிறது என்று விழாமேடையில் கூரினார்

விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்…

இப்போதுள்ள தமிழ் சினிமாவில் எடுக்கும் மாஃபியா படங்களுக்கு நடுவில் இப்படம் மண்வாசனயை கொடுத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி நம்முடைய பண்பாடுகளையும்,பழக்கவழக்கங்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பு என்றும் இயக்குனரின் தந்தை ஆணழகன் சிதம்பரம் அவர்களை பற்றியும் சிவந்தி ஆதித்தனார், எம்.ஜீ.ஆர் இருவரும் அவருடன் எப்படி நட்புடன் இருந்தனர் என்பதை பற்றியும் கூறினார்.

என்னுடைய ஆரம்பகாலங்களில் அப்போது எடுக்கும் ஒரு செட்டிற்க்குல் எடுக்கும் சினிமாக்களை கண்டு கோவம் அடைவேன்.

அதன் பின்புதான் கேமாராவை செட்டிற்க்குள் இருந்து வெளியே கிராமத்திற்க்கு எடுத்து சென்றேன்
அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது என்றும் கூறினார்.

மேலும் அவர் விழாவில் கலந்துகொண்டிருந்த சிறப்பு அழைப்பாளர்களையும் கொளரவபடுத்தினார்

படத்தின் இயக்குனர் அருண் சிதம்பரம் இந்த படத்தை பற்றி பேசுகையில்…

இப்படமானது புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்குபவர்களை தேடி கண்டுபிடிக்கப்படவேண்டும், அதுமட்டுமல்ல அவர்களை கொண்டாடவேண்டும் என்றும் மேலும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் நிருவனம் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவது இப்படத்தின் மேலும் ஒரு சிறப்பு என்றும் கூரினார்.

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சிவன்(ISRO) கூறியதாவது…

`இது எனக்கு ஒரு வித்யாசமான நிகழ்வு என்றும் இந்த படத்தின் ஒரு பாடலை பார்க்கும் போது என்னுடய சிறுவயது கிராமத்து வாழ்க்கையும் நியாபக படுத்தியது.

இப்படம் gross root innovation என்று சொல்லக்கூடிய அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் வகையில் இருப்பது இன்னுமொரு பெருமை என்றும் மேலும் இயக்குனர் பாரதிராஜாவுடன் இந்த மேடையை பங்கு கொண்டதற்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்று கூறினார்

பாரதிராஜா கூரியதுபோல் மாறிவரும் தமிழ்சினிமாவில் மண்வாசனையையும்,பண்பாட்டையும் வெளிபடுத்தும் இந்த படைப்பை வெற்றி பெற செய்ய வைக்குமாறு விழாவில் கலந்துகொண்ட படகுழுவினாரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Director Bharathiraja speech at Kanavu Variyam Audio Launch

Kanavu Variyam audio launch

‘தமிழ்நாட்டை தனிநாடா மாத்திடாதீங்க..’ – கமல் வேண்டுகோள்

‘தமிழ்நாட்டை தனிநாடா மாத்திடாதீங்க..’ – கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassanஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார்.

சில தினங்களில் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா.

இதனிடையில் தன்னுடையை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த ஓபிஎஸ், திடீரென தான் மிரட்டப்பட்டதால் ராஜினாமா செய்ய முன்வந்தேன் என்றார்.

இதனையடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் சசிகலாவுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்தது.

இதனால் தமிழ்நாடே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், கமல்ஹாசன் தன்னுடைய கருத்துக்களை சற்றுமுன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இது தொடர்பான அவரின் ட்விட்டர் கருத்துக்கள் இதோ…

Kamal Haasan ‏@ikamalhaasan

We’ve wasted our freedom years gambling our fanchise on wrong& corrupt politicians. Let’s stop blaming them Lets become incorruptable.

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா?

Don’t breakTN in2 a country. I promise, All India will fight 4TN in a civil war of Ahinsa.None might die but the ignorant will come alive

சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors

*Tweets are not spell-checked

Dont Break Tamilnadu into Countries says Kamalhassan

கபாலியை தொடர்ந்து சிங்கத்திற்கு கிடைத்த வெற்றி

கபாலியை தொடர்ந்து சிங்கத்திற்கு கிடைத்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and suriyaசூர்யாவின் சி3 திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சி3 திரைப்படத்தின் தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி கல்யாண சுந்தரம் அவர்கள் சூர்யாவின் சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணைய தளத்திலும் யாரும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதற்க்கு முன் இதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் நடிப்பில் கலைப்புலி s.தாணு தயாரிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தை யாரும் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இணைய தளத்தில் வெளியிட கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது

‘தயவுசெய்து எங்களை அழிக்காதீங்க…’ ஹரி உருக்கமான வேண்டுகோள்

‘தயவுசெய்து எங்களை அழிக்காதீங்க…’ ஹரி உருக்கமான வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3-suriya-haasanசூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த ‘சி 3’ திரைப்படம் நாளை மறுநாள் 9ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்பட இயக்குனர் ஹரி, அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஓர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

வணக்கம்,
நான் மக்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், தயவு செய்து தியேட்டர் அல்லாத மற்ற எங்கும் எந்த படத்தையும் பார்க்க வேண்டாம்.

நம்முடைய இளைஞர்கள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம். எழுச்சியோடு, ஒரு மாபெரும் புரட்சி செய்து அதை நிரூபித்தீர்கள். உலகத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டாத ஆளே கிடையாது.

திருட்டு டி.வி.டி-யிலோ, சட்டவிரோதமான இணையதளங்களிலோ படம் பார்ப்பது உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். நீங்களே அதை சரியாக உணர்ந்து விட்டால் அதைச் செய்வது உங்களுக்கு பிடிக்காது.

அனைத்து இளைஞர்களுமே பார்ப்பதாக, நான் குற்றம் சொல்லவில்லை, ஏதோ ஒரு சாரார் மட்டுமே அப்படி பார்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல ஒரு கலை. தயாரிப்பாளர் கூட ஒரு கலைஞன் தான்.

சினிமாவின் வரலாற்றில் எத்தனை பேர் சம்பாதித்தார்கள் எத்தனை பேர் விட்டுச் சென்றார்கள் என்று பார்த்தால், விட்டுச் சென்றவர்கள் தான் அதிகம்.

அதனால் தயாரிப்பாளருக்கு பணம் போய் சேர வேண்டும் என்றால், கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்த்தால் மட்டுமே போய் சேரும். ஒரு படத்தை மொத்தமாகவோ காட்சிகளாகவோ விமர்சனம் செய்கின்ற உரிமை பார்வையாளர்களுக்கு உண்டு.

ஆனால் அதை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செய்யுங்கள். தவறான வழியில் அல்ல. யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

அடுத்து நீங்கள் ஏதோ இணையதளம் பற்றி சொன்னீர்கள், அதைப்பற்றி எனக்கு முழுதாக தெரியாது. ஆனால், அந்த இணையதளம் சம்மந்தப்பட்டவர்களுக்கு, நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால்,

உங்களுக்கு யார் மீது கோபம்? எதற்க்காக ஒரு படத்தை இப்படி செய்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒன்றும் இல்லை. நீங்கள் ஒரு நாள் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் யோசித்து பாருங்கள்.

நாம் செய்வது சரியா தவறா என்று. ஐயோ இந்த பாவத்தை எதற்கு செய்கிறோம் என்று கண்டிப்பாக தோன்றும்.

ஒரு தயாரிப்பாளர் மூலமாக, முன்னூறு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள்.

அந்த தயாரிப்பாளரை நசுக்கி விட்டால், அவர் அடுத்து படம் தயாரிக்கவே மாட்டார். சினிமா துறையே நசித்து விடும்.

ஒரு தொழில் துறையை நசுக்கி விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்?

சினிமா ஒரு தொழில். அரசியல் அல்ல. இந்த தொழிலில் உங்கள் அனைவரையும் சந்தோஷப் படுத்துவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.

யாருமே நூறு சதவிகிதம் ஜெயிப்பதும் இல்லை. நூறு சதவிகிதம் சம்பாதிப்பதும் இல்லை. அதனால் இப்படி ஒரு சூழலில், பெரிய ஆபத்தில் நாங்கள் இருக்கும் போது, எங்களை நீங்கள் ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்?

தயவு செய்து எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள். இனிமேல் இந்த வேலையை செய்ய மாட்டோம் என்று உங்கள் டிவிட்ட்ரில் பதிவு செய்யுங்கள். உலகமே உங்களை கைதட்டிப் பாராட்டும்.

18 முதல் 21 மணி நேரம் வேலை செய்கின்ற தொழில் துறை எங்காவது இருக்கிறதா? அப்படி இருந்தால் தொழிலாளர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று தொழிலாளர் நலத்துறை உடனே நோட்டீஸ் அனுப்பும்.

ஆனால் கலைஞர்களாகிய நாங்கள் ஒரு விஷயத்தை உருவாக்குவதற்கு கஷ்டப்படுகிறோம் அதிலும் விரும்பியே இந்த வேலையை செய்கிறோமென்று தெரிந்த காரணத்தால் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதில்லை.

நாங்கள் முதலாளிகள் இல்லை. உங்களுக்கு நல்ல உணவைத் தரவேண்டுமென்று சமையல் செய்பவர்கள், நீங்கள் எங்கள் தலையில் கல்லைத் தூக்கி போட்டால், நாங்கள் எப்படி நல்ல சமையல் செய்து தர முடியும்?

எங்களுடைய படம் தவறான வழியில் பார்க்கப்பட்டால், நாங்கள் எவ்வளவு வேதனை படுவோம் என்று எண்ணிப்பாருங்கள்.

எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோருக்குமே காயம்பட்டால் சிவப்பு இரத்தம் தான். உங்களுக்கு பச்சை இரத்தம் வருமென்று சொன்னால் இந்த தவறை செய்யுங்கள்.

உங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, நண்பர்கள் என எல்லோருடைய தொழிலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், அடுத்தவர்கள் செய்யும் தொழிலும் நன்றாக இருக்க வேண்டும், அதை நீங்கள் கஷ்டப்படுத்தக்கூடாது.

ஒரு ஹீரோவை வைத்து போஸ்டர் ஒட்டினால், தியேட்டரில் அதே ஹீரோ நடித்த படத்தை தான் மக்களுக்கு காட்டுகிறோம், வேறு ஹீரோ படத்தை காட்டி ஏமாற்றுவதில்லை.

நீங்கள் தயவு செய்து சிந்தித்து பார்த்து உங்கள் தவறை நிறுத்திக்கொள்ளுங்கள். வேறொரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உலகமே நம் தமிழ் சமூகத்தை திரும்பிப்பார்த்து வியக்கும் அளவிற்கு, நாம் ஏற்கனவே ஒரு புரட்சியை உருவாக்கி இருக்கிறோம்.

இதே மாதிரியான உயர்வுட¬னேயே நாம் இருக்க வேண்டும். யாரும் நம்மை பார்த்து கேவலமாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது.

அன்புடன்
ஹரி

Director Hari request to all fans regarding Singam 3 movie release

singam-story_647_122216103719

‘காதல்’ சுகுமார்-‘பட்டதாரி’ அபிசரவணன் இணையும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

‘காதல்’ சுகுமார்-‘பட்டதாரி’ அபிசரவணன் இணையும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

9 Giragankalum Ucham Petravan shooting starts with Poojaமதுரை ஆர்.ரத்தினவேல் பாண்டியன் மற்றும் கோவை கே.கனகராஜ் ஆகியோரின் நல்லாசியுடன் ‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ எனும் படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்கவிழா நேற்று மாலை கோவையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரையுலக கலைஞர்களும் கோவையை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

‘காதல்’ படம் மூலம் நகைச்சுவை நடிகனாக பிரபலமான ‘காதல்’ சுகுமார் ‘திருட்டு விசிடி’, ‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இயக்கும் படம் ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’.

இந்தப்படத்தின் கதாநாயகனாக ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அபிசரவணன், விஷ்ணுப்ரியன் மற்றும் காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கின்றனர்.கதாநாயகிகளாக கன்னிகா ரவி, ஸ்ருதி, ஹர்ஷதா ஆகியோர் நடிக்கிறார்.

இவர்களுடன் தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சௌந்தர்ராஜன், கோவை விஷ்ணு, ரமா, சரவணன் சுப்பையா, அசோக் பாண்டியன், டேவிட் சாலமன், சத்யா, மனோ, ஹர்ஷன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘பொறம்போக்கு’ படத்திற்கு இசையமைத்த வர்ஷன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

வாழக்கையில் அடுத்தடுத்து தொடர்ந்து மிகப்பெரிய இழப்புகளை சந்திக்கும் ஒருவன் அதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.

கேரளாவில் ஆரம்பித்து கோவையில் முடியும் இந்தப்படத்தின் கதை ஏழு நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது..

‘காதல்’ சுகுமாரின் சொந்த நிறுவனமான காதல் ஸ்டுடியோஸ்யுடன் கே.யூ.தேவர் பிலிம்ஸ்-ன் U.சாய்சரவணன் மற்றும் பாரம்பரியம் மூவிஸ்-ன் விஜய் ஆனந்த் ஆகியோரும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தில் நகைச்சுவை நடிகர் சார்லி பேசிய ‘9 கிரகங்களும் உச்சம் பெற்றவன்’ என்கிற புகழ்பெற்ற வசனம் தான் இந்தப்படத்தின் டைட்டிலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை- வர்ஷன் ( Varsan )
ஒளிப்பதிவு – ஜீன்ஸன் லோனப்பன் ( Jinson Lobnappan )
படத்தொகுப்பு – சதிஷ் பி கோட்டே ( Sathis B.Kottay )
ஆக்சன் – மிரட்டல் செல்வா ( Mirtal Selva )

பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தவர்கள்

திரு.சக்திவேல் கவுண்டர் அவர்கள்
திரு.கோடீஸ்வரன் – (பா.ஜ.க தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர்)
மதுரை தமிழசை’ செல்வி முத்துமீனா – ரத்தினவேல்பாண்டியன்
திருமதி A.ராஜசுந்தரி – துணை சேர்மன், கோவை சொசைட்டி
திரு.சக்திவேல் – காவல்துறை உதவி ஆய்வாளர், கோவை

9 Giragankalum Ucham Petravan shooting starts with Pooja

விஜய்-61 மற்றும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

விஜய்-61 மற்றும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Junior NTRஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

சமந்தா மற்றும் காஜல் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ள இப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் 61வது படமாகும்.

மேலும் இதன் மற்றொரு நாயகியான ஜோதிகா விலகிக்கொள்ள அதில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாயகி முடிவாகவில்லை என்றாலும் நித்யா பற்றிய செய்தி வந்த உடனே ரசிகர்கள் இப்படத்தை ஜீனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த ஜனதா கேரேஜ் படத்துடன் ஒப்பிட ஆரம்பித்து விட்டனர்.

ஜனதா கேரேஜ் படத்திலும் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similarity between Vijay 61 and Janatha Garage movies

More Articles
Follows