நம்பிக்கைதான் வாழ்கை என்பதை ‘பன்னிக்குட்டி’ கற்றுக் கொடுக்கும் – இயக்குநர் அனுசரண்

நம்பிக்கைதான் வாழ்கை என்பதை ‘பன்னிக்குட்டி’ கற்றுக் கொடுக்கும் – இயக்குநர் அனுசரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”.

ஓர் அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

*இசையமைப்பாளர் K கூறியதாவது…

“பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை.

அறிமுக நாயகி லக்‌ஷ்மி பிரியா கூறியதாவது…

இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள்.

இது ஒரு நேர்மையான படம். எங்கள் படம் முழுமையாக தயாராகிவிட்டது, அதை பார்வையாளர்களிடம் நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும்.

*தயாரிப்பாளர் ஷமீர் கூறியதாவது…*

படத்தை தியேட்டருக்கு கொண்டு வர உதவிய லைகா புரடக்‌சனுக்கு நன்றி. சிறிய படங்களுக்கு, திரைக்கதை நன்றாக இருந்தால் தான், பெரிய நடிகர்கள் இல்லாமலும் அதை சிறப்பாக எடுக்க முடியும். அனுசரண் இயக்குநர் மட்டும் அல்ல, சிறந்த படதொகுப்பாளரும் கூட. கருணாகரன் சிறந்த நடிகர், அவர் ஏற்கும் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமையும். சின்ன படங்களுக்கு நீங்கள் தான் ஆதரவு தர வேண்டும்.

*திண்டுக்கல் ஐ லியோனி கூறியதாவது…

இந்த படத்தின் மூலமாக 21 வருடத்திற்கு பிறகு நடிப்பிற்கு திரும்ப வருகிறேன். இந்த படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. நான் இந்த படத்தில் சாமியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதை இயக்குனர் காரணமாக தான் என்னிடம் கொடுத்திருக்கிறார். எந்தவித பதட்டமும் இல்லாமல் இயக்குனர் அனுசரண் வேலை பார்ப்பார். கருணாகரனுக்கு இந்தபடம் பெரிய வெற்றியாக இருக்கும். அனுசரண் நடிகர்களிடம் இருந்து நடிப்பை வாங்குவதில் திறமைக்காரர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்கும் படமாக இருக்கும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள் நன்றி.

*இயக்குனர் அனுசரண் கூறியதாவது…*

எனக்கு வாய்ப்புகொடுத்த லைகாவிற்கும், ஷமீருக்கும் நன்றி. வாழ்கையில் துவண்டு போன நிலையில் இருக்கும் போது, அதில் இருந்து மீண்டு வருவதற்காகவே காமெடி படம் கொடுக்க நினைத்தேன். ரவி முருகையா உடைய கதை தான் இந்த பன்னிகுட்டி. இந்த கதையை தயாரிப்பாளரிடம் கூறும் போது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் லியோனி சார் நடிக்க வந்தது மகிழ்ச்சியான ஒன்று. எல்லா நடிகர்களும் நெருக்கடியான சூழலில் நடித்து கொண்டிருப்பவர்கள், ஆனால் முழு அர்பணிப்பையும் கொடுத்து பணியாற்றினார்கள். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இந்த கதைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

நிஜ பன்னிகுட்டியுடன் படப்பிடிப்பை நடத்தினோம். அது மிகவும் கடினமாக இருந்தது. விலங்குகளை வைத்து எடுப்பது சாதாரண காரியம் இல்லை, பல நெருக்கடிகளை கடந்து, சில யுக்திகளை பயன்படுத்தி தான் படம் எடுத்தோம். உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு நன்றி கூற வேண்டும், அவர்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, ஒரு சிரிப்புடன் வெளியே வருவீர்கள். நம்பிக்கை தான் வாழ்கை என்பதை இந்த படம் கற்றுக்கொடுக்கும்.

*நடிகர் கருணாகரன் கூறியதாவது…*

ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு கிடைக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தகுதியானவனா என்று யோசிப்பேன். இந்த கதையை இயக்குனர் கூறிய போது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் எல்லாருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான். இயக்குனர் உடைய பதட்டமில்லாத தன்மை, என்னை ஆச்சர்யபடவைத்தது. இசையமைப்பாளர் இந்த படத்தில் கொடுத்திருக்கும் இசை, ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.

இந்த படம் நம்பிக்கை கொடுக்கும் படம். இந்த படத்தில் யோகிபாபு நடித்திருப்பது எங்களுக்கு சந்தோசம். படத்தை மக்களிடம் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

“பன்னிக்குட்டி” திரைப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். Lyca Productions வழங்க Super Talkies சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Pannikutty

Lyca Productions presents, Produced by Super Talkies Sameer Bharath Ram ‘Pannikutty’ features Yogi Babu and Karunakaran in the lead roles. The movie, which is a comedy drama is all set for the worldwide theatrical release on June 8, 2022.

Director Anu Charan speech at Panni Kutty press meet

தம் அடிக்கும் இந்து கடவுள் காளி : Arrest Leena Manimekalai.; பெண் இயக்குனருக்கு எதிர்ப்பு

தம் அடிக்கும் இந்து கடவுள் காளி : Arrest Leena Manimekalai.; பெண் இயக்குனருக்கு எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்து கடவுளான காளிதேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு, ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் எழுத்தாளரும் பெண் இயக்குனருமான லீனா மணிமேகலை.

‘செங்கடல், மாடத்தி’ ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை தற்போது ‘காளி’ என்ற டாகுமென்டரி படம் ஒன்றின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை இயக்கி, அவரே காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் லீனா.

அதில் ‘காளி’ தோற்றத்தில் புகை பிடிப்பது போன்ற போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனவே நெட்டிசன்கள்
‘ArrestLeenaManimekalai’ என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி லீனா மணிமேகலையைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

குறும்படமோ, பெரும் படமோ இல்லை ஆவணப்படமோ எதுவாக இருந்தாலும் சரி பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து கடவுள்களை ஏன் இப்படி சித்தரிக்க வேண்டும் என்பதே தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

சினிமா காட்சிகளுக்கு சென்சார் இருப்பது போன்று போஸ்டர் டிசைன்களுக்கும் சென்சார் கொண்டு வர வேண்டுமா? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே நாட்டில் மதத்தை வைத்து நிறைய சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்று போஸ்டரை வெளியிட்டு இன்னும் பல சர்ச்சைக்கு வழிவகுக்கலாமா என இந்து மதத்தவர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Arrest Leena Manimekalai.; Opposition to female director

‘வாரிசு’ இல்லாமல் எஸ்ஏசி பிறந்தநாள் கொண்டாட்டம்.; வாரிசு எங்கே தெரியுமா.?

‘வாரிசு’ இல்லாமல் எஸ்ஏசி பிறந்தநாள் கொண்டாட்டம்.; வாரிசு எங்கே தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலை 2ஆம் தேதி நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏசி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவர் தனியாக வீட்டில் மனைவி ஷோபா உடன் கொண்டாடினார். அந்த ஸ்டில் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அதை பார்த்த நெட்டிசன்கள் உங்க வாரிசு விஜய் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் சிலர்.. முதுமையில் தனிமை.. கொடுமை எனவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார்.

எனவே தான் அப்பா பிறந்தநாள் விழாவுக்கு கூட விஜய் வரவில்லையாம்.

வாரிசு படம் அப்பா – மகன் சென்டிமென்டை மையப்படுத்தி இருக்கும் என கூறப்படுகிறது. இதில் விஜய் உடன் ராஷ்மிகா, பிரபு, சரத்குமார், ஜெயசுதா, ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கிறார்.

தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

SAC celebrates his birthday without his son Vijay

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணிக்காக ஓடிடி-யில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம்

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணிக்காக ஓடிடி-யில் இறங்கிய ஏவிஎம் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் இணைய தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ்’.

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி ஏற்கெனவே ‘குற்றம் 23’ படத்திற்காக இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் சோனிலிவ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

பைரஸி சைபர் க்ரைமுக்கு பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராக உருவாகியுள்ளது.

யானை விமர்சனம் 3.25/5.. ஹரி டெம்ப்ளேட்டில் அருண் விஜய்

ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் அருணா குகன் கூறுகையில்…

”எங்களின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரொடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால் பதிக்கிறது.

சைபர் க்ரைம், பைரஸி பொழுதுபோக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்ட இருந்தோம்.

இயக்குநர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது.

அருண் விஜய் இத்தொடரில் நடித்தது இத்தொடருக்கு மிகப்பெரும் பலம்.” என்றார்.

Arun Vijay – Arivazhagan joins for AVM

‘இரவின் நிழல்’ படத்திற்கு உலக அங்கீகாரம்.; இப்படியொரு படமா.? பார்த்திபனை பாராட்டும் பிரபலங்கள்

‘இரவின் நிழல்’ படத்திற்கு உலக அங்கீகாரம்.; இப்படியொரு படமா.? பார்த்திபனை பாராட்டும் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பார்த்திபன் அவர்கள் தனது முதல் படமான “புதிய பாதை” தொடங்கியது முதல் கடைசியாக வெளியான “ஒத்த செருப்பு” வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார்.

ஒத்த செருப்பு 2019 ற்கான தேசிய விருது உட்பட பல உலக விருதுகளை பெற்றது.

தனது முத்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன் , தற்போது உலக சினிமாவை தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.

உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றிப் பெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் இரண்டு சர்வ தேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது.

இதுவரை இரவின் நிழல் திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்ட திரைப் பிரபலங்கள் இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை வாழ்நாளில் கண்டதில்லை என நெகிழ்ந்து ஆச்சர்யப்பட்டு பாராட்டுகின்றனர்.

சர்வதேச விருதுகள் கிடைத்ததில் பார்த்திபனுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஜூலை 15 வெளிவர இருக்கும் “இரவின் நிழலுக்கு திரையரங்கிற்கு ரசிகர்கள் வந்து கைதட்டல் + விசிலுடன் தரப் போகும் பெரு வெற்றியே தனக்கான பெரிய விருது – என காத்திருக்கிறார் உலக சினிமாவை தமிழ் சினிமா நோக்கி திருப்பிய இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

World recognition for Partiban’s Iravin Nizhal

கண்டிப்பா பாருங்க.; மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு ரஜினி பாராட்டு

கண்டிப்பா பாருங்க.; மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கு ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’.

இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்கினார்.

அவர் விலகவே இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்தார்.

இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நாடே போற்றும் விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

சில மாதங்களுக்கு பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் நம்பி.

குற்றம் சுமத்தப்பட்ட காலத்தில் சிறையில் இருந்தார்.

அப்போது பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன்.

அவரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம்.

ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் தமிழில் நடிகர் சூர்யாவும், இந்தியில் நடிகர் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.

நம் FILMISTREET தளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

இந்த நிலையில் ராக்கெட்டு திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.

பத்மபூஷன் திரு நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மிக தத்ரூபமாக இயக்கி தானும் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இணைய தன்னை நிரூபித்திருக்கிறார் மாதவன்.

இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth praises ‘Rocketry’ directed by Madhavan

Rajinikanth

More Articles
Follows