விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம்

விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, தான் படம் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும்
நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கிவருகிறார் அதனை தொடர்ந்து தற்சமயம் பப்ஜியை இயக்குகிறார்.

துரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”

துரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)திட்டமிட்ட படியே படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மறைந்து போன திறமையாகவே ஆகி விட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்தி இருக்கிறார்கள். ஆதி நடிப்பில் உருவாகும் “க்ளாப்” முற்றிலும் மாறுபட்ட செய்தியை கொண்டு இருக்கிறது..

பிக் பிரிண்ட் pictures சார்பில் I B கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி நடிப்பில், பிருதிவி ஆதித்யா இயக்கத்தில்,உருவாகும் “க்ளாப்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
” எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே , துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர் பிருதிவி ஆதித்யா , மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப்,நாசர் சார்,பிரகாஷ் ராஜ் சார், முனீஸ்காந்த், mime கோபி , மற்றும் எல்லோரும் இந்த பாராட்டுக்கு உரியவர்கள்..
அறிமுக இயக்குனர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல்.துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே அந்த இயக்குனரின் முழுமையான திறமை ஆகும். அந்த வகையில் இயக்குனர் பிரித்திவியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமையே. நான், படமாக்கிய சில பகுதிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக, அங்கே தொடங்குகிறது. ஒரு கட்ட படப்பிபடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் எல்லோரையும் பாராட்டுவது மிகையாக தோன்றினாலும் அந்த பாராட்டுக்கு உரியவர்கள் இந்தப் படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் .இசை ஞானி இளைய ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை” என்றுக் கூறினார்.

பிரவீன் குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில், வைர பாலன் கலை வண்ணத்தில் , தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் “க்ளாப்” இந்த வருடத்தின் மிக மிக எதிர்பார்க்க படும் படம் என்றால் மிகை ஆகாது.

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
ஏற்கெனவே, தியாகராஜன் ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தியாகராஜன் பேசுகையில், ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்’ என்றார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.

“சீறு” திரைப்படத்தின் first look வெளியீடு-விஜய் சேதுபதி வெளியிட்டார்.

“சீறு” திரைப்படத்தின் first look வெளியீடு-விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)வெகு சில நடிகர்களே எல்லா வகையான கதாபாத்திரங்களை ஏற்று பெயரையும் புகழையும் ஈட்டிக் கொள்வர். அந்த வரிசையில் முதன்மையான நடிகர் ஒருவர் என்றால் ” ஜீவா” என்றால் மிகை ஆகாது. இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் international சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், உருவாகும் “சீறு” ஜீவாவின் நடிப்பு திறமைக்கு ஏற்ப அமைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. ஒரு மாஸ் நடிகராக ஜீவா அவதரிக்கும் இந்தப் படம் ஜீவாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் வெளி வர உள்ள “சீறு” படத்தில் ஜீவாவுக்கு இணையாக புதுமுகம் ரியா சுமன் நடிக்க, நவதீப் வில்லனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில், கே சம்பத் திலக் கலை வண்ணத்தில், கே கணேஷ் குமார் சண்டை காட்சி அமைக்க, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, விவேகா பாடல் இயற்ற , ஏராளமான பொருட் செலவில் உருவாகும் “சீறு” இந்த வருடத்தின் முக்கியமான படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.

இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்தவர் திரையுலக கலைஞன் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள்.

இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது.

இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.

திருநங்கைகளை கேலி கிண்டலுக்கும் உருவாக்கும் அந்த சமூக மக்களுக்கு பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

BREAKING கலைஞானத்திற்கு அரசு சலுகை வேண்டாம்; நான் பாத்துகிறேன்.. ரஜினி

BREAKING கலைஞானத்திற்கு அரசு சலுகை வேண்டாம்; நான் பாத்துகிறேன்.. ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speech at Kalaignanam function held in chennai1970 முதல் 1990 வரை வெளியான பல தமிழ் படங்களுக்கு கதாசிரியராகவும் பல படங்களின் திரைக்கதைகளிலும் பங்காற்றியவர் கலைஞானம்.

பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பாக்யராஜ் என அனைவரின் படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

இவர்தான் ரஜினி முதன்முறையாக ஹீரோவாக நடித்த பைரவி படத்தை தயாரித்தார்.

இவர் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் ஆசைப்பட்டதில்லை. ஒரு பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே நினைத்தேன்.

வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன்.

பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

நான் வேண்டவே வேண்டாம் என கூறினேன். கிரேட் என்ற வார்த்தையை வேண்டுமானால் எடுப்பேன். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுக்க மாட்டேன் என மறுத்தார் கலைஞானம்.

அதன்பின் அவர் என்னை வைத்து படம் எடுக்கவில்லை. அவரும் கேட்கவில்லை. நானும் கேட்கவில்லை.
பின்னர் அருணாச்சலம் பட லாபத்தில் ஒரு பங்கை கொடுத்தேன்.

படம் முடிவடைந்த பிறகு இயக்குனர், தயாரிப்பாளர் பெயர்களை டைட்டில் போடும்போது கதாசிரியரின் பெயரையும் போட வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னுடைய சூப்பர் ஹிட்டான பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களின் கதாசிரியர் யார்? என்பது கூட பல பேருக்கு தெரியாது.

கதாசிரியர் கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கும் தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

சிவகுமார் மூலமாக அதை தெரியப்படுத்திய ஆண்டவனுக்கு நன்றி.

கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய அமைச்சருக்கு நன்றி.

அந்த சிரமத்தை அரசுக்கு கொடுக்கவிரும்பவில்லை. நானே கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருகிறேன்.

பாரதிராஜா நீங்கள் ஒரு வீடு பாருங்கள். கலைஞானத்தின் கடைசி மூச்சு என் வீட்டில்தான் போக வேண்டும்” என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth speech at Kalaignanam 50th function held in chennai

More Articles
Follows