துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது வழக்கமான பரிசோதனை தான் என தெரிய வந்துள்ளது.

அவர் நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பதால் அதிமுக தொண்டர்களிமையே இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்.க்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதால் இன்று மே 25 மாலை வரை மருத்துவமனையிலேயே இருக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

துணை முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post