தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
மேலும் 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரின் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் தமிழகத்தை இந்திய அரசியலே உற்று கவனித்து வருகிறது.
இந்நிலையில் தென் சென்னை தொகுதி மற்றும் அதன் வேட்பாளர் டாக்டர் ஜெ. ஜெயவர்தன் குறித்து காண்போம்.
கடந்த 2008-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின்படி தென்சென்னை தொகுதியில் விருகம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இணைக்கப்பட்டன.
இந்த தொகுதியில் 2009-ல் நடைபெற்ற தேர்தலில் திரு சி ராஜேந்திரன் அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டு 3,08,567 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 42.38 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின்னர் கடந்த 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
அப்போது தமிழத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது.
அச்சமயம் டாக்டர் ஜெயவர்தன் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் இந்த தொகுதியில் வசித்து வருகிறார்.
இவர் 4,34,540 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 41.34 விழுக்காடாகும்.
தற்போது இந்த 2019 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் மீண்டும் அதே வெற்றி உற்சாகத்துடனும் களம் காண்கிறார்.
தென் சென்னை தொகுதி மக்களிடம் எந்த கெட்ட பெயரும் வாங்காமல் நல்ல திட்டங்களை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் இவர்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.
இளம் வேட்பாளரும் அடிப்படையில் மருத்துவருமான Dr. ஜெ.ஜெயவர்தன் M.P அவர்களுக்கா? அல்லது தொகுதிக்கு அறிமுகமே இல்லாத தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கா? என்பதை சில நாட்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது என கள ஆய்வு செய்யும் நிபுணரிடம் கேட்டபோது…
“தென்சென்னையில் இம்முறை தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இரண்டு மாபெரும் தலைவர்களும் இல்லாமல் தமிழகத்தின் பிரதான இருபெரும் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்றன.
தென்சென்னையை பொறுத்தவரை தொகுதியில் சிறப்பாக பணியாற்றி கெட்டபெயர் எதுவும் எடுக்காமல் தொகுதிக்கு அறிமுகமான Dr. ஜெ. ஜெயவர்தனுக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை.
ஆனால் திமுகவை பொறுத்தவரை அவர்களுது வேட்பாளருக்கே முதலில் அறிமுகம் தேவை.” என்றனர்.
1977 மற்றும் 1980-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட திரு ஆர் வெங்கட்ராமன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பணியாற்றியதுடன் பின்னர் துணை குடியரசுத் தலைவராகவும், குடியரசுத்தலைவராகவும் (1910-2009) பணியாற்றினார் என்பது கூடுதல் தகவல்..
Current MP Dr J Jayavardhan and South Chennai constituency news updates