கொரோனா உதவி: ஐ.நா-வின் நல்லெண்ண தூதரானார் சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா

கொரோனா உதவி: ஐ.நா-வின் நல்லெண்ண தூதரானார் சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Help UN appoints Madurai barbers daughter Nethra as UNADAPமதுரையில் மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சலூன் கடைக்காரர் மோகன். இவருக்கு வயது 48.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை நிவாரணமக வழங்கினார்.

மேலும் பலர் இவரின் உதவியை நாட தனது மகள் நேத்ராவின் ஐஏஎஸ் படிப்புக்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து உதவினார்.

இவரின் மகள் நேத்ரா தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார்.

நடிகர் பார்த்திபன் உட்பட பலரும் மோகனை பாராட்டினர். மேலும் அவரின் மகள் நேத்ரா கல்விக்கு உதவுவதாக அறிவித்தனர்.

மோகன் இந்த நெகிழ்ச்சியான உதவியை அறிந்த பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில் மகள் படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக வழங்கியதை பாராட்டி, ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதி சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக நேத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக நாடுகள் உறுப்பினராக உள்ள ஐ.நா சபையில் பொதுச்சபை, பாதுகாப்பு சபை என்ற இரண்டு முக்கிய அமைப்புகள் உள்ளன. அதேபோன்று உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக நிறுவனம், உலக விவசாய நிறுவனம், கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், உலகத் தொழிலாளர் அமைப்பு, உலக குழந்தைகள் நிதி அமைப்பு என்று பல துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐ.நா அவை (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக (GOODWILL AMBASSADOR FOR THE POOR) நேத்ரா அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேத்ராவின் எதிர்காலத்திற்காக ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர்.

மேலும் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு தொடர்பாக நேத்ரா பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Corona Help UN appoints Madurai barbers daughter Nethra as UNADAP

இணையத்தை கலக்கும் அர்ஜூன்-ஹர்பஜன் சிங்-லொஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’

இணையத்தை கலக்கும் அர்ஜூன்-ஹர்பஜன் சிங்-லொஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjun Harbhajan Singh Losliyas Friendship Motion Poster goes viralஆக்ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் பிரண்ட்ஷிப்.

இந்த படத்தினை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

இது முழுக்க முழுக்க கோயம்பத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படமாக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாட்டில் பிரபலம் ஆன லொஸ்லியாவுக்கு நாயகியாக இதுதான் முதல் படம்.

அதுபோல் கிரிக்கெட் வீர்ர் ஹர்பஜன் சிங் இந்த படதின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இதற்கு முன்பு சந்தானத்தின் டிக்கிலோனா என்ற படத்திலும் நடித்துள்ளார். அந்த படமும் இன்னும் வெளியாகவில்லை.

பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் படிப்பை பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் மீண்டும் தொடர கோயம்பத்தூரில் படிக்க வருகிறார்.

அதே கல்லூரியில் லொஸ்லியாவும் படிக்கிறார்.

இவர்களுடன் ஒரு ப்ரெண்ஷிப் கேங் இணைகிறது. அதுதான் இந்த படத்தின் கதைக்களம் என்றும் கிரிக்கெட்டும் இதில் முக்கியத்துவம் பெறுகிறதாம்.

அர்ஜீன் வேடம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது ‘பிரண்ட்ஷிப்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Arjun Harbhajan Singh Losliyas Friendship Motion Poster goes viral

இந்திய திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டுகள்; ஒரு பார்வை

இந்திய திரையுலகில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் 20 ஆண்டுகள்; ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cinematographer ravi varmanஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பன்முகப்பட்ட திரையுலகங்களில் 20 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார்.

இவர் பன்முகதிறமையாளர், ஒரு சிறந்த இயக்குனர், ரசனையான ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் எழுத்தாளர் என பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்.

மணி ரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அனுராக் பாசு, இம்தியாஸ் அலி, பிரியதர்ஷன், ஷங்கர், கௌதம் மேனன், பிரபு தேவா, கே எஸ் ரவிக்குமார், பிரசாந்த் நீல் தேஜா, சுஷி கணேசன், டுவேன் அட்லர், ரேவதி, ராஜீவ் குமார், ஜெயராஜ், ரஃபி மெக்கார்டின், சஜி கலியாஷ் மற்றும் பல சிறந்த இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியது அவரது திறமை மற்றும் விளக்கக்காட்சிக்கு சான்றாக விளங்குகிறது.

இந்த 20 ஆண்டுகால திரையுலக வாழ்வில் சிறப்பான 32 க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடனும், 35+ பிற படங்களிலும், 400
விளம்பரப்படங்களிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

ஆஸ்கர் பிலிம்ஸ் வி ரவிச்சந்திரன் தயாரித்த ‘மாஸ்கோவின் காவேரி’ (2010) மூலம் அவர் தன்னை ஒரு எழுத்தாளர் – இயக்குனராகவும் அடையாளம் காட்டினார்.

இப்படத்தின் மூலமாக தான் நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது திறமைகளுக்கு 23 வது ஈஎம்ஈ சர்வதேச விருது, மாநில விருதுகள், பிலிம் ஃபேர் விருதுகள், ஐஃபா விருதுகள், ஸ்க்ரீன் விருதுகள் மற்றும் பல அங்கீகாரங்கள் சான்றாக இருக்கின்றன.

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கில் பல மைல்களை கடந்து 14 மாநிலங்களில் 117 பேர் படமாக்கினர்.!

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’: கொரோனா ஊரடங்கில் பல மைல்களை கடந்து 14 மாநிலங்களில் 117 பேர் படமாக்கினர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharat Balaஇந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவருடைய வாழ்க்கையிலும் இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது.

இதுவொரு திருப்புமுனை. இதை வரும் தலைமுறைகளுக்காக நாம் எப்படிச் சொல்லப் போகிறோம் என்பது அனைவருடைய மனதிலே இருந்தது. அதை இயக்குநர் பரத்பாலா செயல்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் எல்லா தலைமுறைக்காகவும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’, ‘ஜன கன மன’, மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இந்தக் காணொலிகள் அனைத்துமே தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படக் கூடியவை.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கை ‘மீண்டும் எழுவோம்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியுள்ளார்..

தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து இதனை சாத்தியப்படுத்தியுள்ளார். வரும் தலைமுறைகளுக்காக இயக்குநர் பரத்பாலாவும், அவருடைய 117 பேர் கொண்ட 15 குழுக்களும் இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை தங்கள் கேமராக்களில் காட்சிகளாகச் சிறை பிடித்துள்ளனர்.

கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தப் படப்பிடிப்புக்கான தலைமை கட்டுப்பாட்டு அறையை மும்பையில் அமைத்து அங்கு ஒரு குழு வாரத்தின் அனைத்து நாட்களும் பூட்டப்பட்டே இருந்தனர். 14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகள் அனைத்தையுமே இந்த குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

களத்திலிருக்கும் குழுக்கள் வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதனை படமாக்கினர். தேவைப்படும் காட்சிகளை இங்கிருந்து கூற அதனைப் படக்குழுவினர் முழுக்க தொழில்நுட்ப வாயிலாகவே இந்தியா முழுக்கவே காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர்.

4 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப் படம் கண்டிப்பாக இந்தியாவின் கொரோனா ஊரடங்கைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துரைக்கும் இப்படத்திற்கு ‘மீண்டும் எழுவோம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஊரடங்கிலிருந்து, பொருளாதார இழப்பிலிருந்து எப்படி மீண்டு வந்துள்ளோம் என்பதை வரும் தலைமுறையினர் கண்டிப்பாக உணரும் வகையில் இருக்கும்.

வரும் 6ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது

இப்படத்தின் 4 நிமிட தொகுப்பினை அனைத்து ஊடகங்களும் வரும் 13ம் தேதி வரை நேரடியாக முழுவதும் எடிட் செய்யாமலும்
அளிக்கப்படும் லிங்கினை எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்

என விர்டுவல் பரத் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்படுகிறது.

கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்…; பிரசன்னா கண்டனம்

கொள்ளையடிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்…; பிரசன்னா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor prasannaகொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனையடுத்து மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பழைய மின்சார கட்டணங்களையே செலுத்துமாறு தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது கணக்கெடுக்கப்படும் மின்சார ரீடிங்கின் படி அதிக தொகை செலுத்தும் நிலை உருவாகியிருப்பதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா, இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தியேட்டர்கள் திறந்தாலும் ‘மாஸ்டர்’ ரிலீஸ் இப்போ வேண்டாம்..; முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்!!

தியேட்டர்கள் திறந்தாலும் ‘மாஸ்டர்’ ரிலீஸ் இப்போ வேண்டாம்..; முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keyarதிரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சுமார் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் அனைவரும் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் தான் திரையரங்குகளில் திருவிழா கூட்டம் வரும் என்று அவர்கள் நினைப்பது தவறு இல்லை. ஆனால் கொரோனோ வைரஸின் கொடூரத் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் இந்த சூழ்நிலையில் முதல் படமாக ‘மாஸ்டர்’ படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பது தான் உண்மை.

சாதாரண சலூன் கடைக்கு முடிவெட்ட செல்வதற்கே ஆதார் கார்டு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் அதை அமல்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல.

டிக்கெட் கவுண்டரில் கூடுவது, இடைவேளையில் கேன்டீன்களில் முண்டியடிப்பது, டாய்லெட்டில் கூட்டமாக நுழைவது என்று எங்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

அதிலும் விஜய் படம் என்றால் குடும்பத்துடன் வந்து பார்க்கவே நிறைய பேர் ஆசைப்படுவார்கள். வந்தவர்களில் ஒருவருக்கோ இருவருக்கோ நோய்த்தொற்று இருந்தால் கூட அது மற்றவர்களுக்கும் பரவிவிடும் பேராபத்து இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே வசூலில் சாதனை செய்து வருகின்றன.

விஜய்யின் மாஸ்டர் படம் வெளிநாட்டு உரிமை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதிலும் 30 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வசூலை குவிக்கக்கூடிய ஒரு படத்திற்கு வெளிநாட்டில் வசூலை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அதேபோல இந்தியாவிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் நிச்சயமாக 100 சதவீதம் பார்வையாளர்களை அரசாங்கம் அனுமதிக்காது. குறைந்தது 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அப்படி இருக்கும்போது எல்லா வகையிலும் இந்தப் படத்திற்கான வசூல் பாதிக்கப்படும். அது மற்ற ஹீரோக்களின் வியாபாரத்தையும் பாதிக்கும். எனவே பல கோணங்களில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் போது, 150 திரைகளுக்கு மிகாமல் ரிலீஸ் செய்யும் படங்களை மட்டுமே திரையிட அனுமதிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் அதிக படங்கள் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அத்துடன் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப் படுவதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் வருமான இழப்பை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை முழுமையாக மூன்று மாதங்களுக்கு ரத்து செய்து, கஷ்டத்திலும் நஷ்டத்திலும் இருக்கும் தமிழ் திரையுலகை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சிறிய படங்களுக்கு வரப்போகும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது திரையரங்குகளுக்கு எளிதாக இருக்கும்.

ரசிகர்களுக்கும் விதிமுறைகளை பின்பற்றுவது பழக்கப்பட்டு விடும். அதன்பிறகு பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும்போது அதிக ரசிகர்கள் வந்தாலும் தியேட்டர்காரர்களால் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை முறைப்படி அமல்படுத்த முடியும்.

ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைவிட தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சாலச்சிறந்தது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள 90சதவீதம் திரையரங்குகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.

அத்துடன் ஏசி வசதி இல்லாமல் இரண்டரை மணி நேரம் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பது மிக கடினமான விஷயம்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது, பொருளாதார சிக்கல்களை காட்டிலும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இப்படிக்கு,
கேயார்,
முன்னாள் தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

நாள்: 04.06.2020
சென்னை.

Attachments

More Articles
Follows