தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று பிப்ரவரி 26ல் காலமானார். அவருக்கு வயது 88.
வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
செயற்கை சுவாசக் கருவியுடன் தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.
இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தா. பாண்டியன் காலமானார்.
Communist leader Tha. Pandiyan passed away