தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்தாண்டு 2021 கடந்த வாரம் டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ஒரு டஜன் தமிழ் படங்கள் ரிலீசானது.
இதில் கவின் இயக்கத்தில் முகேன் நடித்த படம் ‘வேலன்’ மற்றும் ஷரவண சுப்பையா இயக்கி நடித்த படம் கதிரவனின் ‘மீண்டும்’ ஆகிய படங்களும் உண்டு.
இந்த இரு படங்களிலும் மலையாளம் மொழி அதிகளவில் பேசப்பட்டது.
வேலன் படத்தில் தம்பி ராமையா மலையாளம் மொழி பேசுபவராக நடித்திருந்தார். அவருக்கு வேண்டுமென்றால் அது மலையாளமாக தெரிந்திருக்கலாம். ஆனால் படத்தை பார்க்கும் ரசிகர்கள் தான் பாவம்.
ஏற்கெனவே தம்பி ராமையா தன் ஓவர் ஆக்ட்டிங்கால் கத்தி கத்தி பேசுவார். தன் காட்சியில் தன்னுடைய ஆதிக்கம் அதிகளவில் இருக்க வேண்டும என விரும்புவார்.
அதுவும் வேலன் படத்தில் கத்தி கத்தி தமிழ் பேசி சில இடங்களில் மலையாளத்தை திணித்து பேசி நம்மை வெறுப்பேற்றி விட்டார்.
அதுபோல் மீண்டும் படத்தில் ஷரவண சுப்பையா, கதிரவன் மற்றும் அனகா ஆகியோர் மலையாளம் பேசுவதாக நினைத்து கடுப்பேற்றி விட்டார்கள்.
உதாரணத்திற்கு… நிங்கள் எந்தா விஜாரிச்சு… என்ற மலையாள வாக்கியத்திற்கு நீங்க என்ன நினைச்சீங்க? நீங்க என்ன யோசிச்சீங்க.? என்று தமிழில் அர்த்தம் உண்டு.
ஆனால் தம்பி ராமையா மற்றும் ஷரவண சுப்பையா பேசும்போது…
நீ என்ன யோசிச்சு.. என்று பேசுகின்றனர். அதாவது இது மலையாளம் என அவர்களாவே நினைத்து மலையாளம் பேசி அந்த மொழியை கொன்றுவிட்டார்கள்.
இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலையே தருகிறது. இதனால் படத்தை ரசிக்க முடியவில்லை என்பது பெரும் வருத்தம்.
ஒருவேளை கதைப்படி மலையாளம் பேசும் வார்த்தைகள் வந்தால் சம்பந்தபட்டவர்களுக்கு மலையாளம் டப்பிங் கொடுத்துவிடலாம். அப்போது தமிழில் சப்டைட்டில் கொடுத்துவிடலாம்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல்ஹாசன் பேசும்போது அவ்வளவு அழகாக பாலக்காட்டு மலையாளத்தை தமிழுடன் கலந்து அழகாக பேசுவார்.
அதுதான் நடிப்புக்கான ஓர் அர்ப்பணிப்பு. அதை கற்றுக் கொள்ளுங்கள் கலைஞர்களே…
அதுபோல் மலையாள நடிகர்கள் மோகன்லால் மம்முட்டி துல்கர் சல்மான் பஹத்பாசில் பிருத்விராஜ் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்கும்போது அவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்கள். அது நமக்கு கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளது.
மலையாள கலைஞர்கள் நம் தமிழ் மொழிக்கு கொடுக்கும் மரியாதையை நாமும் மற்ற மொழிக்கும் அதன் கலைஞர்களுக்கும் கொடுக்க வேண்டாமா.?
Common man request to Meendum and Velan movie team