சதீஷ்-சூரி இல்லாமல் சிவகார்த்திகேயனுடன் இணையும் மற்றொரு காமெடியன்

சதீஷ்-சூரி இல்லாமல் சிவகார்த்திகேயனுடன் இணையும் மற்றொரு காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunakaranஎம்ஜிஆருக்கு நாகேஷ், சத்யராஜீக்கு கவுண்டமணி என்பதுபோல ஒவ்வொரு ஹீரோவுக்கும் சில காமெடியன்களோடு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

இன்றைய தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு சூரி மற்றும் சதீஷ் உடன் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படங்களில் இவர்கள் இருவரும் மாறி மாறி ஜோடி சேர்ந்து காமெடி செய்து வந்தனர்.

தற்போது உருவாகியுள்ள சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி இணைந்துள்ளார்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவரின் இன்று நேற்று நாளை படத்தில் கருணாகரன் காமெடியில் கலக்கியிருந்தார்.

எனவே அவரைத்தான் சிவகார்த்திகேயனுடன் காமெடி செய்ய வைக்கவுள்ளாராம்.

ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த்தின் காலா பட சென்சார் சர்ட்டிபிகேட் அப்டேட்ஸ்

ரஜினிகாந்த்தின் காலா பட சென்சார் சர்ட்டிபிகேட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajinis Kaala movie Recensor updatesரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் இந்தாண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படம் ஏப்ரல் 27ல் வெளியாகும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக எந்த ஒரு புதுப்படங்களையும் ரிலீஸ் செய்யாமல் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது.

இந்நிலையில் ஒரு படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும்.

அதன் பின்னரே படம் சென்சாருக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் காலா படத்திற்கு கிளியரன்ஸ் வழங்க தயாரிப்பாளர்கள் சங்கம் தாமதம் செய்து வந்தது.

அதன்பின்னர் ரஜினி, விஷால் சந்திப்பின் போது இந்த விவகாரம் பேசப்பட, காலா படத்தை சென்சாருக்கு அனுப்ப தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி கடிதம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து காலா சென்சாருக்கு சென்றுள்ளது.

படத்தில் உள்ள சில வசனங்களுக்கு மியூட், 7 காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்சார் அதிகாரிகளிடம் பட இயக்குனர் ரஞ்சித் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது மீண்டும் படத்தை மறு தணிக்கைக்காக அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Super Star Rajinis Kaala movie Recensor updates

தளபதி நடிகர் விஜய்யின் தங்கைக்கு திருமணம்

தளபதி நடிகர் விஜய்யின் தங்கைக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thuppakki fame Actress Sanjana Sarathi marriage updatesவிஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

அதுபோல் விஜய்யும் அண்ணா என்பதை மிக ஸ்டைலாக சுறுபவர்தான்.

இந்நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே அவர் திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

தன் வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

Thuppakki fame Actress Sanjana Sarathi marriage updates

Thuppakki fame Actress Sanjana Sarathi marriage updates

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்களை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்களை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj will direct Hollywood Actors in Dhanush movieசன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ரஜினிகாந்த்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்ராஜ்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடந்து வருவதால், அது முடிவடைந்து காலா படம் வெளியான பின்னர் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.

இப்படத்திற்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி.

இப்படத்தை அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இப்படம் குறித்த அறிவிப்பு முன்பே வந்தாலும், சூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆகிக் கொண்டே இருந்தது.

இப்படத்தில் தனுஷ் உடன் ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ, டினேரோ ஆகிய நடிகர்கள் நடிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Karthik Subbaraj will direct Hollywood Actors in Dhanush movie

யுவனின் காஸ்ட்லி காரை ஆட்டைய போட்ட டிரைவர்

யுவனின் காஸ்ட்லி காரை ஆட்டைய போட்ட டிரைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan's Aston Martin missing composer says driver stole his luxury carஇசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திருமணமாகி மனைவியுடன் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.

இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளார்.

கார் ஓட்டுவதற்கு நவாஸ்கான் சாதிக் (34) என்கிற டிரைவரை குடும்பத்தினர் நியமித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக யுவன்ஷங்கர் ராஜா மதுரை சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த ஆடி காரை டிரைவர் நேற்று மாலை 5 மணிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பிறகு, அவர் வீடு திரும்பவில்லையாம். டிரைவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால் காருடன் ஓட்டுநர் நவாஸ் தலைமறைவானது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து யுவன் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே காரையும் டிரைவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Yuvan’s Aston Martin missing composer says driver stole his luxury car

மீண்டும் தனுஷ் உடன் இணையும் அனிருத்

மீண்டும் தனுஷ் உடன் இணையும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Anirudh combo to reunite in 201930 வருடங்களுக்கு முன்பு இளையராஜா இசையில்லை என்றால் நடிகர் மைக் மோகன் படங்கள் இருந்திருக்குமா? என்று தெரியாது.

அதுபோல் ராமராஜன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரின் படங்களையும் சொல்லலாம்.

இவர்களின் படங்களுக்கு வெற்றிக்கு முதல் காரணமே இளையராஜாவின் பாடல்கள் என்பதுதான் உண்மை.

அதுபோல் நடிகர் இசையமைப்பாளர் கூட்டணி அண்மையில் அமைந்தது என்றால் அது தனுஷ், அனிருத் கூட்டணியை சொல்லலாம்.

3, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

இந்த கூட்டணியை DnA என்று செல்லமாக ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

ஆனால் இரண்டு வருடங்களாக தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை.

இந்நிலையில் அனிருத் தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் அடுத்த வருடத்தில் (2019) கண்டிப்பாக DnA கூட்டணி அமையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Dhanush and Anirudh combo to reunite in 2019

More Articles
Follows