பிரபல டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

பிரபல டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cinema Director CV Rajendran passed awayபிரபல பழம்பெரும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் ஞாயிறன்று காலமானார். இவருக்கு வயது 81.

அவரை பற்றிய சிறுகுறிப்பு இதோ….

முத்துராமன், ராஜஸ்ரீ, ரி.எஸ்.பாலையா நடித்த “அனுபவம் புதுமை” என்ற படம்தான் இவரது முதல் படம்.

இப்படம் 1967-இல் வெளிவந்தது. ஸ்ரீதரிடம் இருந்தபோது “மீண்ட சொர்க்கம்”, “கலைக்கோவில்”, “கொடி மலர்”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “நெஞ்சிருக்கும் வரை” போன்ற படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.

”காதலிக்க நேரமில்லை” படத்தின் போது அசோஸியேட் இயக்குனரானார். “அனுபவம் புதுமை” படத்தில் தான் முதன்முதலாக ஸ்லோமோஷன் காட்சிகளை அமைத்தவர் இவர்.

ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான கதையை ஜெய்சங்கர், பாரதி, நாகேஷ், ஜெயந்தி, விஜயலலிதா நடிக்க வைத்து இவர் இயக்கிய “நில் கவனி காதலி” என்ற படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இவரது இயக்கத்தில் வெளிவந்த “சங்கிலி” என்ற திரைப்படத்தில் தான் இளைய திலகம் பிரபுவை அறிமுகம் செய்தார்.

1993-லிருந்து 4 வருடங்கள் நடிப்பதிலிருந்து விலகியிருந்த சிவாஜி கணேசனை தனது சொந்தப் படமான “ஒன்ஸ்மோர்” படத்தில் நடிக்க வைத்தார்.

இவர் இயக்கிய “கோகிலா எங்கே போகிறாள்” இன்ற தொடருக்கு சிறந்த இயக்குநர் விருது இவருக்குக் கிடைத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது “கலைமாமணி’’ விருது கொடுத்து கௌரவித்தார்.

இயக்குனர் சி.வி.ராஜேந்திரனுக்கு ஜானகி என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் என்ற இரு வாரிசுகளும் உள்ளனர்.

Cinema Director CV Rajendran passed away

காவிரி மேலாண்மை & ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக திரையுலகினர் போராட்டம்

காவிரி மேலாண்மை & ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக திரையுலகினர் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Cinema Industry supports TN Peoples Cauvery and Sterlite Protestதென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள், உதயா, விக்னேஷ், பிரேம், பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, ‘இப்போது தமிழ் சினிமாவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை, டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளது.

எந்த ஒரு தொழிலுமே விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்னர் செழிப்பாக தான் இருக்கும். ஆனால் நமது சினிமா மட்டும் மாறாக பல பிரச்சனைகளை சந்தித்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.

இதை சரி செய்ய வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் வேலை நிறுத்தம் என்றால் சில நாட்கள் நடைபெறும் அதன் பின்னர் நிறைவடைந்துவிடும் ஆனால் மாறாக இந்த முறை வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக திரையுலகமே உள்ளது.

இதனால் தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த இறுக்கமான சூழ்நிலை இளகவைக்க நாங்கள் சில நாட்களாக இரவும் பகலும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதை நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன் வண்ணன் கூறுவார்’ என்றார்.

இதை தொடர்ந்து நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசும்போது,

‘நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டு குடும்பமாக தான் வேலை செய்து வந்தார்கள்.

தயாரிப்பு என்பது ஒரு தயாரிப்பாளர் மட்டுமே செய்யும் வேலை அல்ல, அதை தமிழகத்தில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இணைந்து செய்யும் வேலை. அனைவரும் ஒவ்வொரு படத்தையும் தங்களுடைய படமாக நினைத்து தான் வேலை செய்து வந்தார்கள்.

இதையெல்லாம் நான் பத்து வருடங்களாக கண்ணால் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டாக இணைந்து செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த தொழில் நம்பிக்கையின்மையால் மாறியுள்ளது

எந்த வித கணக்கு வழக்கும் இல்லாமல் ஒரு நடிகரை சம்பளத்தை குறைக்க சொல்லும் போது அந்த நடிகர்கள் மனரீதியாக வருத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சார்ஜெஸ் அதிகமாக இருப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது கம்மியாகியுள்ளது, அதனால் அதை குறைக்க வேண்டும்.

சினிமா என்பது மக்களுக்காக தான். நாங்கள் இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவாக இருப்போம்.

மேலும் காவிரி மேலாண்மை, ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும்’ என்றார்.

Tamil Cinema Industry supports TN Peoples Cauvery and Sterlite Protest

டிஜிட்டல் கட்டணத்தை யார்தான் கட்டுவார்கள்..? நீடிக்கும் சினிமா ஸ்டிரைக்

டிஜிட்டல் கட்டணத்தை யார்தான் கட்டுவார்கள்..? நீடிக்கும் சினிமா ஸ்டிரைக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Who will pay the Digital VPF charges Tamil Cinema Strike continuesடிஜிட்டல் கட்டணம் என்று சொல்லப்படும் வி.பி.எஃப். கட்டணத்தை திரையரங்க உரிமையாளர்களே கட்ட வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

ஆனால், ‘நாங்கள் அந்தக் கட்டணத்தைக் கண்டிப்பாகக் கட்ட மாட்டோம்’ என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்…

“நாம் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். இதை நாம் வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். அதற்கு நமது மன உறுதிதான் மிகவும் அவசியம்.

இரண்டு தினங்களுக்கு முன் நாம் தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை, மிகவும் வெற்றிகரமாகத் தோல்வியடைந்தது. நமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்பதாக இல்லை. அவர்கள் கோரிக்கையையும் நாம் ஏற்பதாக இல்லை.

இந்தப் பிரச்சினை எப்போது முடியுமென்று தெரியவில்லை. ஆனால், நம் முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதில்லை என்ற தெளிவான முடிவில் நமது சங்கமும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். வெற்றி நம் பக்கம்தான்.

கண்டிப்பாக வி.பி.எஃப். சார்ஜை நாம் கட்டமாட்டோம். அதில், நாம் உறுதியாக இருக்கின்றோம்.

இந்த உறுதியை நீங்களும் உங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.

Who will pay the Digital VPF charges Tamil Cinema Strike continues

கம்பத்தில் ரஜினி மக்கள் மன்ற முதல் விழா; சொந்த செலவில் உதவிகள் வழங்கிய நிர்வாகி

கம்பத்தில் ரஜினி மக்கள் மன்ற முதல் விழா; சொந்த செலவில் உதவிகள் வழங்கிய நிர்வாகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Makkal Mandram first function in Theni district Kambamகம்பம்: ரஜினி மக்கள் மன்றம் அறிவிக்கப்பட்ட பிறகு கம்பம் நகரில் முதல் முறையாக நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

ரஜினி மக்கள் மன்றத்தின் தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் திரளான பொதுமக்கள், மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இயக்குநரும் நடிகருமான ஈ ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 150 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அடுக்குப் பாத்திரங்கள், ஊனமுற்றோருக்கான சைக்கிள்கள், மாணவ மாணவிகளுக்கு எழுதுப் பொருட்கள், நோட்டுகள், தேனி மாவட்டத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை மன்ற நிர்வாகிகளை வைத்து வழங்கச் செய்தார் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஸ்டாலின் பேசுகையில், “பணம், பதவி எதையும் எதிர்ப்பார்த்து நான் ரஜினிக்கு ரசிகனாகவில்லை.

எல்லோரும் அடுத்தவரிடம் வசூலித்து நலத்திட்ட உதவிகள் செய்வார்கள். நான் என் பணத்தை எடுத்துதான் செலவு செய்துள்ளேன்.

அது ரஜினியிடம் கற்றுதுதான். நான் இன்னும் ரஜினியைச் சந்திக்கக் கூட இல்லை. அவரது கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. முப்பது ஆண்டுகளாகவே நான் இப்படித்தான்.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை ரஜினி மன்றத்தினர் நல்ல கட்டமைப்பில் இருக்கிறார்கள்.

தேர்தலின்போது மற்ற கட்சிகளை விட வலுவான போட்டியாளர்களாக ரஜினி மக்கள் மன்றத்தினர் இருப்பார்கள்,” என்றார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் ஜெய்புஷ்பராஜ், மாவட்ட இணை செயலாளர் பொன் சிவா, கம்பம் நகர செயலாளர் செந்தில், இணை செயலாளர் சரவணன் மற்றும் மற்றும் நகர நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்தினர்

விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ரஜினி இப்ராகிம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Rajini Makkal Mandram first function in Theni district Kambam

Rajini makkal mandram welfare activity photos (2)

விஜய் படத்தில் அறிமுகமாவது என் பாக்கியம்… : ஜஸ்டின் பிரபாகரன்

விஜய் படத்தில் அறிமுகமாவது என் பாக்கியம்… : ஜஸ்டின் பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Justin Prabakaran entering into Telugu Cinemaசெவிக்கு இனிமையான melody பாடல்கள் காலத்தையும் தாண்டி ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே.

தொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகையல்ல.

பிண்ணனி இசை கோர்பிலும் சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி வருகிறது. தற்போது அவர் தெலுங்கில் கூட அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.

” நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் “அர்ஜுன் ரெட்டி” புகழ் விஜய் தேவேர்கொண்டா.

இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம்.

இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ” மரோ பிரபஞ்சம்” ,என்ற குறும் படத்தில் பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது.

விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் “நாடோடிகள் 2″ , அதர்வா நடிக்கும் ஒத்தைக்க்கு ஒத்த, எஸ் ஜே சூர்யாவின் பெயர் இடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது.

மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி பிராந்தியம் அநாவசியமோ, இசை கலைஞனுக்கும் அப்படியே.

காற்றின் தேசம் எங்கும் செல்லும் காணமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

Music Composer Justin Prabakaran entering into Telugu Cinema

போராட்டத்தை அடக்கினால் அது மேலும் பரவும்..; கமல் கருத்து

போராட்டத்தை அடக்கினால் அது மேலும் பரவும்..; கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal reaction for TN Peoples protest and Police arrest in Cauvery Issueதன் சினிமா படங்களைப் போலவே மக்கள் நீதி மய்யம் கட்சியையும் பரபரப்பாகவே வைத்துள்ளார் கமல்ஹாசன்.

தினம் ஒரு அறிவிப்பு, தினம் ஒரு சந்திப்பு, தினம் ஒரு ட்வீட், பத்திரிகையாளர் சந்திப்பு என அதிரடியாக இயங்கி வருகிறார்.

மும்பையில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை சந்தித்துவிட்டு தற்போது சென்னை வந்துவிட்டார்.

அதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹாசன்.

அவர் பேசுகையில்,

உயிர், பயிர் காலம் சம்பந்தமானது இதில் காலதாமதம் செய்யக்கூடாது. காவிரி விவகாரத்தில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது அடக்குமுறை. போராட்டத்தை அடக்கினாலும் அது மேலும் பரவும்.

ஆகவே இவ்விவகாரத்தில் பிரதமர், தமிழக கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச வேண்டும். காவிரி விவகாரத்தில் ஓட்டு வேட்டைக்கான அரசியல் விளையாட்டு தான் நடக்கிறது என்றார்.

இது தொடர்பாக தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

மக்களுடன் நான் கலக்கவிருந்த பயணத்தை அரசியலாக்குகிறார்கள். அதற்கு ரயில் மேடையல்ல என்பதை நாமறிவோம். மக்கள் நலனை மய்யமாகக் கொண்ட கட்சி இது.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கும் மக்களுக்கும் இடையூறின்றி செய்து விடுவோம். திருச்சியில் சந்திப்போம். நாளை நமதே”. என பதிவிட்டிருக்கிறார்.

Kamal reaction for TN Peoples protest and Police arrest in Cauvery Issue

More Articles
Follows