தந்தையை வைத்து 1200 கிமீ சைக்கிள் ஓட்டிய 15 வயது ஜோதி; இந்திய விளையாட்டு ஆணையம் அழைப்பு

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் ஏழை மக்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் தொழிலுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர்.

பீகாரை சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8-ம் வகுப்பு மாணவி தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் (குருகிராம்) வசித்து வந்தார்.

மோகன் பஸ்வான், ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார்.

கொரேனா ஊரடங்கால் இவரிடம் இருந்த ஆட்டோ ரிக்‌ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதனால் சொந்த ஊருக்கே செல்ல தீர்மானித்துவிட்டார் மோகன்.

தன் சொந்த ஊர் 1200 கி.மீ. தொலைவில் இருப்பதால் எப்படி செல்வது என யோசித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு சைக்கிளை வாங்கி அதில் செல்ல தீர்மானித்துள்ளார்.

தன் தந்தை மோகனை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி 7 நாட்கள் இரவும், பகலும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டியுள்ளார்.

இந்த செய்தியும் புகைப்படங்களும் வீடியோவும் வைரலானது.

இந்த செய்தி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள உள்ள தேசிய சைக்கிளிங் பெடரேசன் அமைப்புக்கு தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பு இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும்.

சிறுமியின் இந்த தொடர் சைக்கிள் ஓட்டம் பற்றி இந்த அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங் தெரிவித்துள்ளதாவது…

“ஒரு எட்டாம் வகுப்பு மாணவி இதை செய்திருக்கிறார் என்பது வியக்க வைக்கிறது. அந்தச் சிறுமியிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் 1,200 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்பது சாதாரணமானது அல்ல.

அந்தச் சிறுமியை அழைத்து கணினிமயமாக்கப்பட்ட சைக்கிளில் அமர வைத்து சோதிப்போம்.

நாங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்ச்சி பெறுகிறாரா என்று பார்ப்போம். தேர்ச்சி பெற்று விட்டால், ஜோதிகுமாரி பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.

CFI will give an opportunity to Jyothi who reached 1200 kms on cycle with her father

Overall Rating : Not available

Latest Post