சினிமாவில் தடம் பதிக்க வரும் சூர்யா-கார்த்தியின் தங்கை பிருந்தா

brindha sivakumarநடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர்.

அவரைப் போல் அவரது இரு மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் பாண்டிராஜ் இயக்கி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி நடிக்க சூர்யா தயாரித்து வருகிறார்.

சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் தற்போது விதவிதமான கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களின் தங்கை பிருந்தாவும் சினிமாவில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

கௌதம் கார்த்திக் நடிப்பில் விரைவில் சந்திரமௌலி என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இப்படத்தில் இடம்பெறும் சந்திரமௌலி என்ற பாடலை பிருந்தா சிவகுமார் பாடியுள்ளாராம்.

இந்த விழாவில் சிவகுமார் குடும்பத்தார் கலந்துக் கொண்டனர்.

இந்த படத்தில் கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க, திரு என்பவர் இயக்க, தனஞ்செயன் தயாரித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post